மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. செய்தியாளர்களிடம் மல்லை சத்யா குறித்து சென்னை விமான நிலையத்தில் தெய்வித்ததாவது:
"மல்லை சத்யாவை என் உடன்பிறவாத தம்பியைப் போல நடத்தி வந்தேன். மதிமுகவுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்து, கட்சியை பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக அவரை தொடர்பு கொண்டுள்ளார். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகளில் பதிவிடும் நபர்களுடனும் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர் கொடுக்கும் தகவல்களை தான் அவர்கள் பதிவிடுகின்றனர். இதை ஆதாரத்துடன் என்னிடம் நிர்வாகிகள் கூறினர். 7 முறை வெளி நாடுகளுக்கு சென்ற போது கூட அவர் மதிமுக துணை பொதுச்செயலாளர் என்று குறிப்பிடவில்லை. என் பெயரையும் எங்கேயும் உச்சரிக்கவில்லை. மதிமுகவுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். அது நடக்கவில்லை. இந்த விவகாரம் மதிமுகவுக்கு பெரிய சோதனையாக வரக்கூடாது என்பதை தெளிவுபடுத்துவதற்காக நிர்வாகக் குழுவில் எடுத்துரைத்தேன். இதற்கு, மேல் மல்லை சத்யா, அவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன்.
பின்னணியில் திமுக இல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினாலும், நான் எடுக்கவில்லை. என் உயிரைக் காப்பாற்றிய, கட்சிக்கு விசுவாசமாக இருந்த மல்லை சத்யா, கடந்த 2 ஆண்டுகளாக அப்படியே தலைகீழாக ஏன் மாறினார்? அவர் பட்டியலினத்தவர் என்பதால் ஒதுக்கப்படுவதாகவும் செய்தி பரப்பினார். இந்த விவகாரத்தில் திமுக பின்னணியில் இருப்பதாகக் கூற முடியாது. மதிமுகவின் முத்துரத்தினம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வற்புறுத்தியதன் பேரில் திமுகவில் சேர்க்கப்பட்டார். மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா ஆதரவு நபர், “குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்தார். வெளியேற்றப் பார்க்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி எனச் சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார்” என வருத்தம் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, மல்லை சத்யா தலைமையில் மதிமுகவிற்குள் மற்றொரு அணி வளர்ந்து வருகிறது, திமுக, தமிழக வெற்றிக் கழகம், பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகள் மாறி வருகின்றன. கட்சியில் இணைவது தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாக பேசப்படுகிறது.திருச்சிராப்பள்ளி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்
அறிஞர் அண்ணா துரை 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சிராப்பள்ளியில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா தலைமை தாங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மாத்தூர் எஸ்.கே.கலியமூர்த்தி, திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சிராப்பள்ளி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன் முன்னிலை வகித்த திருச்சிராப்பள்ளி மண்டலம் மாவட்டச் செயலாளர்கள்
ஆசை சிவா, தஞ்சாவூர் வி.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் எஸ்.ஜெயசீலன், அரியலூர் இராமநாதன், திருவாரூர் தெற்கு ப.பாலசந்திரன், திருவாரூர் வடக்கு கா.சி.சிவவடிவேல், நாகப்பட்டினம் வே.ஸ்ரீதரன் மயிலாடுதுறை செ.கொளஞ்சி என உரை நிகழ்த்தினர்.
மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், பொருளாளர் மு.செந்திலதிபன், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக, முதன்மைச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, பொதுச்செயலாளர் வைகோ விழா பேருரை நிகழ்த்தினார்.
வாரணாசி கி.இராஜேந்திரன் , மல்லிகா தயாளன், ஆ.பாஸ்கரசேதுபதி, ரோவர் கே.வரதராஜன், புலவர் முருகேசன், பெல் ராஜமாணிக்கம், அ.மைக்கேல்ராஜ், பெரம்பலூர் சே.துரைராஜ், ஜி.துரைசிங்கம், அரங்க நெடுமாறன், வழக்கறிஞர் க.சி.சிற்றரசு, செந்தில் செல்வன், பால சசிக்குமார், ப.த.ஆசைதம்பி, ஜெயபாரதி விஸ்வநாதன், ஸ்டாலின் பீட்டர் பாபு, ஏ.அன்புராஜ், உ.சோமு, வழக்கறிஞர் சுப்பாராஜ், கொடுமுடி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துரோகம் இல்லாத அரசியல் இல்லை குடவாசல் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று, வை.கோபால்சாமியை ஆதரித்த சுயமரியாதைச் சுடர் மா.மீனாட்சிசுந்தரம், திருவாரூர் தியாக பாரி, தஞ்சாவூர் எல்.கணேசன், திருச்சிராப்பள்ளி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் புதுகை சந்திரசேகர், பொன்.முத்துராமலிங்கம், திருப்பரங்குன்றம்செ.இராமச்சந்திரன், பொடா அழகு சுந்தரம், போடி முத்துமனோகரன், சிவகங்கை பொடா புலவர் செவந்தியப்பன், அருப்புக்கோட்டை ஆர்.எம்.சண்முக சுந்தரம், திருநெல்வேலி டி.ஏ.கே. இலக்குமணன், பிரணவ நாதன், செஞ்சி ந.இராமச்சந்திரன், பேரா.சபாபதிமோகன், சௌ.பத்மநாபன், புதுவை மாநிலம் ராமநாதன், திண்டிவனம் டாக்டர்.மாசிலாமணி, மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் க.சோமு, ஈரோடு பூங்கொடி சாமிநாதன், டி.கே.சுப்ரமணியம், மொஞ்சனூர் இராமசாமி, மணிமாறன், கண்ணதாசன், கோவை மு.கண்ணப்பன், புஞ்சைப் புளியம்பட்டி சாமிநாதன், கே.சி.பழநிச்சாமி, திருப்பூர் துரைசாமி, சிவபாலன், திருச்செங்கோடு கந்தசாமி, கட்டாம்பட்டி கந்தசாமி, புலவர் அப்பாவு, தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி உமாபதி, கருர் செந்தில் பாலாஜி, விஜயா தாயன்பன், குமரி விஜய குமார், சேலம் தாரை மணியன் வாலாஜா அசேன், கம்பம் ராமகிருஷ்ணன், திருவள்ளூர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், வேலூர் ந.சுப்பிரமணி, சென்னை கலைப்புலி தாணு, கே.எஸ்.ராதா கிருஷ்ணன், திராவிட ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, நாஞ்சில் சம்பத், தூத்துக்குடி ஜோயல், சங்கரன்கோவில் ச.தங்கவேலு, வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் திருச்சிராப்பள்ளி வீரபாண்டியன்,புதுக்கோட்டை பாவாணன், பெரம்பூர் கந்தன், பெயர் விடுபட்டுப் போன சில நூறு முன்னணியினர், 200-க்கும் குறையாத சட்டமன்ற வேட்பாளர் தகுதி நகர, ஒன்றியச் செயலாளர்கள், தொண்டர்கள் மதிமுகவில் மீண்டும் திமுகவிற்கு திரும்பி வந்த இயற்கை எய்தியோர் தவிர! பட்டியலில் கண்டோர் அனைவரும் தி.மு.கழகத்திலிருந்து விலகி, வைகோ பின்னால் சென்றதும் ஒரு வகையில் துரோகச் செயல் தானே அவர்கள் மீண்டும் திமுக நோக்கி வருவது சரியானதே! இதனை . வைகோ, தனக்குத் துரோகம் இழைத்தவர்கள் என இகழ்வது இயற்கை நியதிப்படி ஏற்புடையதல்ல! இந்தப் படை வரிசை அணி வகுப்பு சிதறுண்டு போனதற்குத் வைகோ காரணமல்ல ன்றாலும், உண்மை
சுடுவதை மறைக்க இயலாது இவர்களால்! இந்தப் பட்டியலில், வைகோவிற்குத் "துரோகம்" இழைத்தோரில், கடைசியாக மல்லை சத்யாவும் இணைந்திருக்கிறார் எனலாம் வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்தி இருப்பது அதே கட்சியின் முக்கிய பிரமுகர் தான் இதற்கு மேல் யாரும் இருப்பதாக தெரியவில்லை
இந்தப் பெயர்ப் பட்டியலில் உள்ள நெல்லை இலக்குமணன் மீண்டும்
மதிமுகவில் இணைந்து, முடிவெய்தினார் நெல்லை இலக்குமணன், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், எல்.ஜி ஆகியோர் எழுதினர்
வெளியிட்டுள்ள வைகோவை விமர்சிக்கும் நூல்களில் விடுபட்ட ஒரு செய்தியாகவே காணப்படுகிறது. மல்லை சத்யாவை முன் வைத்து எழுந்துள்ள பிரச்சினைக்கும், இதற்கு முன் விலக்கப்பட்ட- விலகியோர் தொடர்பான பிரச்சினைக்கும் இடையில் உள்ள கருப்பொருள் உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிகிறது. என்றாலும், மறுமலர்ச்சி திமுக எனும் கூட்டணிக் கட்சி, கொள்கை கொண்ட ஒரு காலத்தில் வலிமை மிக்க தொண்டர்களைக் கொண்ட கட்சி
இந்தக் காலத்தின் வலுக்குறைவாக ஆகிறது எனும் காரணத்தினால் அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை , இலட்சியத்தில் உறுதி என்கிற வைகோ இலக்கியம் அடைந்திட பல நூற்றுக்கணக்கான தொண்டர்களின் அரசியல் வாழ்வைப் பலி கொடுத்து, நிறைவேற்றிக் கொண்டு விட்டது என்கிற விமர்சனத்திலிருந்து தப்பிவிட இயலாது. உண்மை எது? பொய் எது?
நாம் ஆராய்வதை விட, பொது மக்கள் நன்காய்ந்து தெளிவு பெறட்டும்! என்றாலும், வைகோ கூற்றுப்படி. பட்டியலில் உள்ளோர் தொடங்கி தோழர் முத்து ரத்தினம் வரை துரோகிகள் எனில்,
இத்தனையையும் எப்படித்தான் வைகோவின் உள்ளம் தாங்குகிறதோ என வியப்படைகிறோம்! கட்சிப் பிரமுகர்கள் கருத்து மாறுபாடுகளால் வெளியேறும், வெளியேற்றப்படும் கொள்கையாளர்கள், கூட்டத்தில் போய்த் தம்மை தி.மு.க.வை நோக்கி வருவதைப் பார்க்கலாம்.திமுக, மதிமுக, பாமக, தேமுதிக, என எல்லா கட்சிகளும் சர்க்கஸ் கூண்டு மாதிரியே வாரிசு அரசியல் தெரிகிறது எனக்கு மட்டும் தானா.? இல்லை எல்லாருக்கும் தெரிந்ததா ..



















கருத்துகள்