முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகழ் பெற்ற நடிகை பத்மஸ்ரீ சரோஜா தேவி, காலமானார்

இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த,


தமிழ்நாட்டில் நாடோடி மன்னன் திரைப்படத்தில் 1957 ஆம் ஆண்டில் அறிமுகம்.   பிறகு 1958 ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் கல்யாண பரிசு துவங்கி  1960 முதல் 1990 வரை முப்பது வருடங்களில் மிகவும் புகழ் பெற்ற நடிகை சரோஜா தேவி, இன்று ஜூலை மாதம் 14 ஆம் தேதி, 2025 ல் 87-வது வயதில் காலமானார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்ட 
சரோஜா தேவி காலமானார்

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் அவரது இல்லத்தில், வயது மூப்பும் உடல்நலக் குறைபாடு காரணமாக காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் தெரிகிறது. இந்தியத் திரையுலகில்  கோடிக்கணக்கான உலக  ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற அடைமொழியுடன் கன்னட திரையுலகில் புகழ் கொடி நாட்டிய நடிகைகளில் முதன்மையான சரோஜா தேவி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும்  முத்திரையைப் பதித்தவரது நீண்ட திரையுலகப் பயணத்தில், 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.



தமிழ் திரைப்படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் 26 திரைப்படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் 22 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களுடன் இணைந்து மறக்க முடியாத பல வெற்றிப் படங்களில் நடித்த சரோஜா தேவி அன்பே வா, அன்னை இல்லம், நாடோடி மன்னன், பாகப்பிரிவினை,திருவிளையாடல்,போன்ற திரைப்படங்களில் அவரது பங்களிப்பு இன்று வரை  பேசப்படுகிறது. இவரது இயல்பான நடிப்பு, வசீகரமான புன்னகை மற்றும் கதாநாயகர்களுடன் இணக்கமான கதாநாயகி ஜோடிப் பொருத்தம் ஆகியவை அவரை ஒரு தலைமுறை ரசிகர்களின் கனவு நாயகியாக மாற்றின.

 இந்தியத் திரையுலக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை வழங்கிக் கௌரவித்தது. பல மாநில அரசுகளின் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார். திரைப்படங்களில் இருந்து விலகிய பின்னரும், பொது நிகழ்வுகளில் பங்கேற்று வந்த சரோஜா தேவி, சூரியா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தார் திரைத்துறைக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவரது மறைவு, ஒரு தலைசிறந்த நடிகையை மட்டுமல்ல, இந்தியத் திரையுலகின் ஒரு பொற்காலத்தின் நினைவுகளையும் வரலாறு பதிவு செய்து சுமந்து செல்கிறது.



அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும்  சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரடி இரங்கல் செய்திகள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பி. சரோஜா தேவியின் மறைவு, இந்திய சினிமாவின் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது கலைப் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.நடிகை டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'கச்ச தேவயானி' திரைப்படத்தை கன்னடத்தில் எடுக்க விரும்பிய கே.சுப்ரமண்யம்

நாயகி தேடி பெங்களூர் வந்த போது 'மகாகவி காளிதாஸா' கன்னடப்படத்தைப் பார்க்கச் சென்றவர் அதில் நடித்த நாயகியை உடனே பேசி சென்னைக்கு கொண்டு வந்தார்.  அந்தப்பெண் இயக்குனரின் மகளான பத்மாவுக்கு நெருக்கமான தோழியானார்  சரோஜா தேவி.

பைரப்பா என்கிற கர்நாடக மாநிலத்தின் கான்ஸ்டபிளுக்கும் ருத்ரம்மாவுக்கும் நான்கு பெண் குழந்தைகள். நான்காவதும் பெண் குழந்தை என்பதால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்பட்ட குழந்தை. இடையில் முடக்குவாதம் வேறு. திரும்பவும் கடவுள் அருள் குழந்தை நடக்கத்தொடங்கியது. 

சரோஜா என்கிற குழந்தை நன்றாக ஹிந்திப்பாடல்கள் பாடுவதைக் கண்ட தந்தை அவரை காவல் துறை விழாவில் பாட வைக்க அது பள்ளிப்பாட்டு போட்டி வரை சென்றது. பள்ளிகளுக்கான போட்டியில் பெங்களூரு செயிண்ட் தெரசா பள்ளி மாணவி சரோஜாவின் குரல் நடுவராக வந்திருந்த நடிகர், இயக்குனர் ஹொன்னப்ப பாகவதருக்குப்பிடித்துப்போனது. பாட வைக்க குரல் டெஸ்ட்டோடு, மேக்கப் டெஸ்ட்டும் எடுத்தார். பாடுவதை விட நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்படி பாகவதரின் 'மகாகவி காளிதாஸ்' படத்தில்  சிறிய வேடம் கொடுத்தார். அடுத்து இரண்டு படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார் சரோஜா தேவி. 

சுப்ரமண்யம் மூலம் சென்னை வந்த சரோஜாதேவியை அழைத்துக் கொண்டு மகள் பத்மா எழுத்தாளர் சின்ன அண்ணாமலையை சந்தித்தார். சின்ன அண்ணாமலை அப்போது 'தங்கமலை ரகசியம்' படத்தின் கதையை எழுதி படமாக்கிய. நிலை பத்மா சரோஜாவை அறிமுகப்படுத்தி தந்தையின் படத்தில் நடிக்க வந்திருப்பதைச் சொல்லி தமிழில் வாய்ப்புக் கேட்க சின்ன அண்ணாமலைக்கு அந்தப்பெண நடிப்பைப் பிடித்தது. அவர் சிபாரிசில் 'தங்கமலை ரகசியம்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்புக் கிடைத்தது. 250 ரூபாய் சம்பளம். பின்னர் சில படங்களில் நடன வாய்ப்புகள் வந்தன.

சின்ன அண்ணாமலை எம்.ஜி.ஆரிடம் தான் தயாரிப்பாளராக வாய்ப்புக் கேட்டார். ஆனால் எம்ஜிஆரை சம்மதிக்க வைக்க அவர் "நீங்கள் சமூகப்படத்தில் நடிக்க வேண்டும். எத்தனை நாள் தான் வாள் சண்டை போட்டுக்கொண்டிருப்பது?" எனப்போட்டு வைக்க அவரும் சிரித்துக்கொண்டே சம்மதிக்க 'சாவித்திரி பிக்சர்ஸ்' கம்பெனி உருவானது.

கதைக்கு ஹிந்தியில் தேவ்ஆனந்த் நடித்த 'பாக்கெட் மார்' படத்தின் கதை காப்பி ரைட்ஸ் வாங்கப்பட்டது. படத்தின் தலைப்பு நல்ல அறிவுரையாக வைக்க வேண்டும். யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு 500 ரூபாய் பரிசினை எம்.ஜி.ஆர் அறிவிக்க மா.லெட்சுமணன் 'திருடாதே' எனச் சொல்லி 500 ரூபாய் பரிசை வென்றார். 

நாயகியாக புதுமுகத்தைப்போடலாம் என எம்.ஜி.ஆர் சொல்ல சின்ன அண்ணாமலைக்கு சந்தோஷம். ஏனென்றால் 'தங்கமலை ரகசியம்' படத்தில் சரோஜாதேவிக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேன் 'நல்ல முகவெட்டு இருக்கிறது. புக் செய்து வையுங்கள்' எனச்சொல்ல மூன்று படத்துக்கு தலா 3000, 7500, 10000 என சின்ன அண்ணாமலையே புக் செய்து வைத்திருந்தார். சரோஜாவைப்பற்றி சின்ன அண்ணாமலை புதுமுகத்துக்காக சொல்ல அவரை எம்.ஜி.ஆர் வரச்சொன்னார். மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு பலரும் சரோஜாதேவியை கருப்பாக இருக்கிறார், உயரமில்லை என தட்டிக்கழிக்க எம்.ஜி.ஆர் சரோஜாவை நாயகியாக்கத் தீர்மானித்தார். 

"காலை தாங்கி தாங்கி நடக்கிறது இந்தப்பெண்" என ஒருவர் குறை சொல்ல "அதுவும் செக்ஸியாக தானே இருக்கிறது" எனச்சொல்லி 'திருடாதே' நாயகியாக்கியதோடு தன் நாடோடி மன்னன் படத்துக்கும் ஒரு பாடலுக்காக சின்ன அண்ணாமலையின் கால்ஷீட்டை வாங்கினார் எம்.ஜி.ஆர். 

நாடோடி மன்னன் படத்தில் சரோஜா தேவியின் பாடல் எடுத்து முடிந்திருக்க பானுமதி-எம்.ஜி.ஆர் இடையே தகராறு உருவானது. நடிகை பானுமதி 'நாடோடி மன்னன்' படத்திலிருந்து வெளியேற எம்.ஜி.ஆர் சரோஜா தேவியின் எடுத்தப்பாடலை தூக்கி வீசிவிட்டு புதிய நாயகியாக்கி கதையை மாற்றி ஷூட்டிங்கைத்தொடங்கினார்.

இடையில் திருடாதே படத்தின் போது ஏற்பட்ட விபத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் ஷூட்டிங் நின்று போக சின்ன அண்ணாமலை வாங்கிய கடனின் வட்டிக்காக படத்தை ஏ.எல்.சினிவாசனிடம் எம்.ஜி.ஆரே விற்றுக்கொடுத்தார். அதில் சின்ன அண்ணாமலைக்கு நல்ல தொகை கிடைத்தது. அதில் வேறு படமே எடுத்தார் அவர். 

நாடோடி மன்னன் பெருவெற்றி பெற சரோஜா தேவி தமிழ்நாட்டில் முன்னணி நடிகையானார். ஆனால் அதற்கு முன்பே சாண்டோ சின்னப்பாத் தேவர் எடுத்த 'செங்கோட்டை சிங்கம்' சரோஜா தேவியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிய வைத்தது.

இரண்டு வருடங்களுக்குப்பிறகு 'திருடாதே' வெளியானது. நூறு நாள்  ஓடி வெற்றி விழா கொண்டாடப்பட்டது. படம் துவங்கிய சின்ன அண்ணாமலை இப்போது வெளியில். 

ஆனால் நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழத்துடன் அவர் வீட்டு வாசலில் நன்றியோடு ஒரு பெண்  நின்றிருந்தார். 

சின்ன அண்ணாமலையை நெகிழ்வுறச் செய்த அந்தப்பெண் நடிகை சரோஜாதேவி. தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரை மறக்காத அந்தக்குணத்துக்கு அடுத்து ஐம்பது ஆண்டுகளுக்கு அவர் திரையில் தோன்றச் செய்தார் அந்தக்கடவுள்.

சரோஜா தேவி எம்.ஜி.ஆரால் கண்டு பிடிக்கப்பட்ட கருப்பு வைரம். வீச்சு விழிகள். அதில் ஒரு விழியில் கருப்புப் புள்ளி. குவிந்த உதடாக வரையப்பட்ட உதடுகள். கொஞ்சும் குரல். குளோஸ் நெக் ஜாக்கெட். பூப்போட்ட சேலை. காதருகே ஒரு சிறு சுருண்ட கற்றை. அல்ட்ரா மாடர்ன் நடிகைக்கு அடிச்சுக்க வேறு நடிகை கிடையாது. குமரியா? குழந்தையா? என்று குழப்பமடையச்செய்யும் பாவனைகள். ஆனால் அது தான் அவரின் தனித்துவம். காலம் அவரை எடுத்துச் சென்ற போதும் தனது கண்களை கொடுத்துச் சென்றார் அனைவரின் இதய அஞ்சலிகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...