என் நேர்மை மீது கலங்கம் இருந்தால் சொல்லுங்க தூக்கில தொங்குறேன்.
தமிழ்நாட்டின் சூப்பர் ஹீரோ DSP. கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியான துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா நிலைமையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றும் ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), நேர்மையாகப் பணியாற்றியதற்காக பழிவாங்கப்பட்டதாக எழுப்பிய குற்றச்சாட்டுகள், அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்க்கின்றன. லஞ்ச லாவண்யத்தை கையில் எடுத்தவர்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போகச் சொன்னாங்க, இல்லையென்றால் விரலை உடைப்பாங்கனு உயர் அலுவலரே சொன்னார். நேர்மையாக இருந்ததுக்கு இந்தச் சிக்கலா? ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காதவனை, லஞ்சப் பணத்தில் ஏ.சி வாங்கினேன்னு கதை கட்டுறாங்க," என சீருடையில் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற அந்த டிஎஸ்பி, தனது கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளையும், நேர்மையான அலுவலர்களுக்கு எதிரான அநீதிகளையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, சட்டவிரோத மதுபான விற்பனையையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பிரிவில் பணியாற்றும் நேர்மையான அலுவலர்கள், உயர் அலுவலர்களின் அழுத்தங்களுக்கு உடன்படாதபோது, பழிவாங்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த டிஎஸ்பியின் வாக்குமூலம், அவரது அரசு பணிக்கு உதவும் ஜீப் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், லஞ்சம் வாங்கியதாக பொய்யான கதைகள் பரப்பப்படுவதாகவும் கூறுகிறது. இது, நேர்மையாக பணியாற்றுவோரை அவமானப்படுத்தி, அவர்களின் மன உறுதியை உடைக்கும் முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது. இந்தச் சம்பவம் தனிமனிதருக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல; மாநிலத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள பெரும் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது. மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் சோகம் இன்னும் மறையாத வடுவாக பதிவான நிலையில், இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகள், அரசின் மதுவிலக்குக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கை பல ஆண்டுகளாக அரசியல் முழக்கமாக மட்டுமே உள்ளது. 1937- ஆம் ஆண்டில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும், வருவாய் நோக்கங்களுக்காக அரசுகள் இதை பலவாறாக தளர்த்தியுள்ளன. தற்போது, டாஸ்மாக் மூலம் அரசே மதுவிற்பனையில் ஈடுபடுவது, இந்திய அரசியல் சாசனத்தின் 47-வது பிரிவுக்கு எதிரான செயலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம், மதுவிலக்கு கோரிக்கையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
ஆனால், தற்போதைய அரசு இந்தப் பிரச்சினைகளை தீர்க்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, டாஸ்மாக் ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசு தரப்பும் தெளிவான பதிலை அளிக்காமல் தவிர்க்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுவிலக்கு அமலுக்கு வரும்போது தமிழ்நாட்டிலும் அது நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறினாலும், இது வெறும் வாக்குறுதியாகவே அவர் பதவி விலகும் வரை இருந்தது. மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டபோதும், இதற்கு பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை.
இந்த டிஎஸ்பியின் குற்றச்சாட்டு, உயர் அலுவலர்களின் அழுத்தங்களையும், ஊழல் கலந்த நிர்வாக அமைப்பையும் வெளிப்படுத்துகிறது. "வளைந்து போகாவிட்டால் விரலை உடைப்பார்கள்" என்ற உயர் அலுவலரின் எச்சரிக்கை, நேர்மையான அலுவலர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை தெளிவாகக் காட்டுகிறது. இதேபோல், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விலகிய மற்றொரு டிஎஸ்பி, உயர் அலுவலர்கள் தனது பணியை முடக்குவதாக குற்றம் சாட்டியது, இந்த பிரச்சினையின் ஆழத்தை உணர்த்துகிறது.
இத்தகைய சம்பவங்கள், அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர இந்திய தண்டனைச் சட்டத்தின் 197-வது பிரிவு தடையாக இருப்பதாகவும், இதைப் பயன்படுத்தி ஊழல் செய்பவர்கள் தப்பித்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் புலனாய்வு இல்லாத செயலற்ற தன்மையும், புகார்களை குப்பைத் தொட்டியில் வீசுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை அனைத்தும், நேர்மையான அலுவலர்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட அமைப்பு நிமிர்ந்து நில் திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் போல இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.
நேர்மையான அலுவலர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் ஆகியவை, தமிழ்நாட்டு மக்களிடையே அரசு மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஜனநாயகம்" என்று பேசினாலும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தெளிவான பதிலோ, நடவடிக்கையோ இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க அரசு அஞ்சுவதாக கேள்வி எழுப்பிய போது, அரசு தரப்பு மவுனமாகவே இருந்தது.
மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் நடத்தியபோது, அவை குற்றச் செயலாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதுபோன்ற தீர்ப்புகள் இருந்தும், மதுவிலக்கு கோரிக்கைகளை அரசு புறக்கணித்து வருகிறது. மக்களின் கோபம், கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிராகவும், அரசின் செயலற்ற தன்மைக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
நேர்மையாகப் பணியாற்றிய ஒரு டிஎஸ்பி, தனது காரை இழந்து, அவமானத்துடன் சீருடையில் நடந்து செல்ல வேண்டிய நிலை, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் மீது பெரும் கேள்வியை எழுப்புகிறது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கும்போது, அதில் பணியாற்றும் நேர்மையான அலுவலர்கள் பழிவாங்கப்படுவது, அரசின் முன்னுரிமைகளை கேள்விக்கு உள்ளாக்குகிறது. அரசு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஊழல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மதுவிலக்கு கொள்கையை மறு ஆய்வு செய்து, மக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும். நேர்மையான அலுவலர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், "நேர்மைக்கு இடமில்லை" என்ற கசப்பான உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகிவிடும். DSP க்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் அறிக்கையை திருத்த மறுத்ததால் உயர் அலுவலர்கள் என்னை பழிவாங்குவதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனத்தை உயர் அலுவலர்கள் பறித்ததாகவும், இதன் காரணமாக டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டிற்கு நடந்தே செல்வது போன்ற வீடியோ காணொளிக் காட்சிகள் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து வாகனம் பறிக்கப்படவில்லை. முக்கிய அலுவல் பணிக்காக அவர் பயன்படுத்தி வந்த வாகனம் பெறப்பட்டு, அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவர் பயன்படுத்தி வந்த வாகனமே அவரிடம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன் பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கடந்த 11 ஆம் தேதி அமைச்சர் மெய்யநாதனின் பாதுகாப்புப் பணிக்காக எனது வாகனம் தேவைப்படுவதாகக் கேட்டனர். ஆனால், இது வழக்கமான நடவடிக்கை கிடையாது. என்னுடைய வாகனத்தை நான் தரமுடியாது என்று கூறினேன். அதனை ஏற்காத அலுவலர்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டதால் எனது வாகனத்தை வழங்கினேன். பின்னர் என்னிடம் வாகனம் இல்லை. அலுவலகப் பணிகளைச் செய்வதற்குக் கடினமாக இருப்பதாக நான் தொடர்ந்து முறையிட்டேன் அதன் பின்னர் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருந்த வாகனம் ஒன்றை எனக்கு ஒதுக்கீடு செய்தனர்.
மேலும் அமைச்சரின் பாதுகாப்பிற்காக வாகனத்தை கேட்டுப் பெற்ற நிலையில், எனது வாகனம் முதல்வரின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து நான் நேர்மையாகப் பணியாற்றுவதால் என்னை நேர்மை இல்லாத அலுவலர்கள் டார்கெட் செய்கின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் அறிக்கையை திருத்த மறுத்ததால் உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்....இப்போது சுந்தரேசன் செய்தி மீடியாக்களின் முன், நடக்கும் பின்னணிகள் குறித்துப் பேசிவிட்டார்.
"சீனியர் ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் இரண்டு பேர் செய்கிற வேலையும், அவர்கள் பேசுகிற வார்த்தைகளும் மிகவும் மோசமானது, அவர்கள் தான் என்னுடைய இந்த நிலைமைக்குக் காரணம்" என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
பணி நேரத்தில் சீருடையில் உயர் அலுவலர்கள் குறித்து செய்தி மீடியாக்கள் முன் கருத்துச் சொன்ன வகையில் டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை பாயக்கூடும். காவல் சட்டத்துக்கு எதிரானது சுந்தரேசன் பேச்சு. அது தெரியாமல் அவர் டிஎஸ்பி பதவி உயர்வு வரை வந்திருக்கவே முடியாது. விளைவு குறித்துத் தெரிந்தே தான் விரிவாகவே பேசியிருக்கிறார்.
ஒரு பக்கம் ஒரு சில காவல் அலுவலரின் மனிதம் தொலைத்த செயல்பாடுகளால் நிகழும் லாக்கப் மரணங்கள்,
இன்னொரு பக்கம் காவல்துறைக்கு அவர்களின் மேலதிக அலுவலர்கள் மூலம் கொடுக்கும் இதுபோன்ற அழுத்தங்கள். தீர்வு தான் என்ன? இந்த நிலையில்
கார் விவகாரத்தில் DSP சுந்தரேசன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு, பதில் தன்னை டார்கெட் செய்வதாக DSP சுந்தரேசன் கூறிய நிலையில், எந்த அலுவலலரும் அழுத்தம் தரவில்லை என மயிலாடுதுறை S.P ஸ்டாலின் விளக்கம்.டிஎஸ்பி M.சுந்தரேசன் பழிவாங்கப்படுவதற்கு தற்போது புதிய காரணம் தெரிய வருகிறது M.சுந்தரேசன்தான், தமிழ்நாடு காவல் துறை அலுவலர்கள்,ஒரு கொலை வழக்கின் கைதியை கடுமையாகூஅ தாக்கி,சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டதை உண்மை என்று அறிக்கை அளித்தது! இந்த நிலையில் நடந்து சென்ற டிஎஸ்பி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்
டிஎஸ்பி சுந்தரேசன் 2005 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நந்தம்பாக்கத்தில் பணிபுரிந்த போது வழக்கு ஆவணங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என ஒழுங்கு நடவடிக்கை
வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து பாஸ்போர்ட் வழங்குவதற்கு பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு
2008 ஆம் ஆண்டில் துரைப்பாக்கம் காவல் எல்லையில் முடிவுற்ற வழக்கை சுட்டிக்காட்டி மிரட்டி ரூபாய் .40,000 கையூட்டு வாங்கியதாக குற்றச்சாட்டு
|துரைப்பாக்கம் எல்லையில் 2 டாஸ்மாக் கடை மேலாளர்களை மிரட்டி சட்டவிரோதமாக மது விற்றதாக மாதம் ரூபாய்.3000 வாங்கியதாக குற்றச்சாட்டு
துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது பெண்ணிடம் புகார் வாங்காமல் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு பழகி வந்ததாகக் குற்றச்சாட்டு
தனக்குப் பழக்கமான பெண்ணை உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து தரக்குறைவாகப் பேசி அடித்ததாகவும் குற்றச்சாட்டு
காவல் நிலையத்தில் இருந்த காவலர்களை தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளதாகத் தகவல். இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை இந்த நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் டி.எஸ்.பி. சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது
கருத்துகள்