திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கூட்ஸ் ஆயில் ரயிலில் தீ விபத்து சரக்கு ரயில் தடம் புரண்டதால் இந்த விபத்து
ஏற்பட்டதை அடுத்து 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தெரிந்து தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். சென்னை துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற கூட்ஸ் ஆயில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடுகிறார்கள் சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப் பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. அதனால் அந்தப் பகுதிக்கு காச நோய் உள்ளிட்ட நோய் இருப்போர் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்
தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள். இந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் எட்டு அதி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளதுசென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கும் நிலையில்
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு மாற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள் விபரம்:- 1.காலை 5.50 மணிக்கு சென்னையிலிருந்து மைசூருக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (ரயில் எண் 20607). 2. காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து மைசூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (ரயில் எண் 12007). 3. காலை 6.10 மணிக்கு சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு புறப்படும் கோயம்புத்தூர் விரைவு ரயில் (ரயில் எண் 12675). 4.காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (ரயில் எண் 12243) 5. காலை 6.25 மணிக்கு சென்னையிலிருந்து திருப்பதிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (ரயில் எண் 16057). 6. காலை 7.25 மணிக்கு சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு புறப்படும் டபுல்டெக்கர் விரைவு ரயில் (ரயில் எண் 22625). 7. காலை 7.40 மணிக்கு சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் (ரயில் எண் 12639. 8. காலை 9.15 மணிக்கு சென்னையிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாகர்சோல் செல்லும் விரைவு ரயில் (ரயில் எண் 16003)இந்த ரயில்கள் எல்லாம் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்