தமிழ்நாட்டில் பல்கலைகழகத் துணைவேந்தர் நியமனம்
தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுலை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பின்னர் மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி ஆகியோர் பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் வழங்கியது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு, அடுத்த விசாரணையில் முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்தது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசின் முதல்வருக்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனலே தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையிலுள்ள 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியதாகவே உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசு அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடமிருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை துவங்கப்பட்டு விட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அதற்கு உயர்கல்வித்துறை சார்பில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ‛‛ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது. உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்தக் காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை'' என்றார் பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு சார்பில் நீதிபதிகள் பி.வி நரசிம்மா, ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்திய போது வழக்கு தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி மற்றும் உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கின் மனுதாரர் வெங்கடாஜலம் உள்ளிட்டவர்கள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.மேலும் துணை வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிகப்பது குறித்த அடுத்த விசாரணையின்போது முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி வழக்கைத் தள்ளி வைத்தனர்.
கருத்துகள்