பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அளித்த புகார் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் காரணம் காட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
நடத்தும்"உரிமை மீட்க, தலைமுறை காக்க" எனும் 100 நாள் நடைபயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தடை விதித்த உத்தரவை அனைத்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், மற்றும் மாநகரக் காவல்துறை ஆணையர்களுக்கும் அனுப்பினார்.
நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் தொடங்கி10 அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் டிஜிபி அறிக்கையில் கூறியதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த மனுவின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் பாமக கொடியையோ, கட்சியின் பெயரையோ அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த நடைபயணம் பாமகவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதால், நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் பாமக நிறுவனரின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் அன்புமணியின் 100 நாள் நடைபயணத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கப்படாது என்று டிஜிபி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில் நடைப்பயணத்துக்கு தடையில்லை, என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராம்தாஸின் தமிழக உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது என பாமக வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டுள்ளார்.இரவில் நடந்தது தான் என்ன?
தடை உடைப்பு .. மருத்துவர் அன்புமணி ராமதாஸின் தீரத்திற்கு கிடைத்த திரில் வெற்றிகர நிகழ்வு
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் முதல் நாள் பயணமே அமோக வெற்றி பெற்றவுடன் அரசு தமிழட காவல்துறை மூலம் அடுத்த 99 நாட்கள் நடக்கும் பயணத்திற்கு தடை விதித்தது. அதை அனைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியது.
உடனடியாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பயணம் தொடரும் என அறிவித்த நிலையில் கூடுதலாக பாமகவின் சமூக நீதி வழக்கறிஞர் பேரவை அணி தயார் நிலையில் இருந்தது.
தடையை மீறி பயணம் தொடர்ந்தால் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு மேலும் மிகப்பெரிய அளவில் ஆதரவு அலையும் எழுச்சியும் கிடைக்கும்.
நீதிமன்றம் சென்றால் அவர் தான் தலைவர் என மருத்துவர் அன்புமணி ராமதாஸிடம் உள்ள தேர்தல் ஆணையம் வழங்கிய ஆதாரத்தைக் காட்டி அனுமதி பெற்றுவிடுவார்கள் அதோடு மட்டுமில்லாமல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் தலைவர் என நீதிமன்றமே சாட்சி வழங்கி விடும் என்பதால்,
அவசர அவசரமாக ஊடகங்களில் வெளியானது தவறான செய்தி எனவும் மருத்துவர் அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடை இல்லை என அந்தர் பல்டி அடித்துள்ளது அரசியலில் காணும் பொது நீதி அப்பட்டமான உண்மை..காவல்துறை அனுமதி- டிஜிபி அலுவலக தெளிவுபடுத்தல் மெமோராண்டம் இணைப்பில் உள்ளது. "வண்டு குடைகிற அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டுதான் இத்தனை சுவையை கூட்டியிருக்கிறது-மாங்கனி " எனும் அண்ணன் கண்மணி குணசேகரன் வார்த்தை தான்.
கருத்துகள்