முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதியரசர் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகிப் பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவு.         


நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டது நீதிமன்றத்தில் நடந்தது பற்றி அவர் விளக்கி உள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். மதுரையைச் சேர்ந்தவர் அனைத்து ஜாதியினரும் அர்ச்கராகலாம் எனும் வழக்கு, திருப்பரங்குன்றம் ஆலயத்தில் சம்பந்தப்பட்ட சிக்கந்தர் சமாதி வழக்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வழக்கு , காவல்நிலைய மரணங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான பல பொது நல வழக்குகளில் ஆஜராகியவர். மேலும் பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகரன் அமர்வு முன்னிலையில் விசாரணக்கு வந்த வழக்கில் வேறு ஒரு வழக்கறிஞர்


ஆஜராகி வருவதாக   வாஞ்சிநாதனே கூறும் நிலையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து ஜூலை மாதம் 24 ஆம் தேதி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரானார். அப்போது நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், "நீங்கள் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு நான் மத ரீதியாக, ஜாதிய ரீதியாகத் தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறீர்கள்.





இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் ஜாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.  நீதியரசர் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய புகார் மனு தொடர்பாக, அது சம்பந்தமாக நீதிபதி வழக்கறிஞரை அழைத்து பதில் சொல்ல வேண்டும் என உத்தரவிட்ட இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நடந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்






வழக்கறிஞர் வாஞ்சிநாதன். "பல்வேறு தீர்ப்புகளை தொகுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு புகாரை அனுப்பினேன். புகார் அளிப்பது ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கை. அந்த புகார் விவரங்களைப் பற்றி நான் பொதுவெளியில் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் ஒரு தஞ்சை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி தொடர்பான மேல் முறையீடு வழக்கில் நான் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த வழக்கில் நான் விலகிய பின்னர் மற்றொரு வழக்கறிஞர் ஆஜராகி அந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நான் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய புகார் மனுவின் நகலை ஸ்கேன் செய்து ஒரு வழக்கறிஞர் மட்டுமே உள்ள குழுவில் பதிவிட்டுள்ளார். அது எனக்குத் தெரியாது.






இந்த நிலையில் வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராக வேண்டும் என நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாக வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து தெரிவித்தார்கள். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் பணியாற்றும் ஒருவர் எனக்கு போன் செய்து  சம்மன் வந்ததாகத் தெரிவித்தார். அதில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டி ருந்ததன்படி நான் ஆஜர் ஆனேன்.







அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "நீங்கள் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு நான் மத ரீதியாக, ஜாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் ஜாதிய ரீதியில், மத ரீதியில் உள்ளதாகச் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.அதற்கு நான், "உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது எனத் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது இதற்கு எப்படி பதில் அளிப்பது? நீங்கள் எழுத்துப்பூர்வமாகக் கூட கேள்வி எழுப்பினால் நான் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கிறேன்." என்று கூறியதாக," தெரிவித்தார்.  நீதிமன்றத்தில் கண்ட உத்தரவு விபரங்களின் படி 





"Judged by the principles laid down above, the conduct of Thiru. Vanchinathan prima facie constitutes criminal contempt of court. That is why, we could not have dropped the proceedings following his statement that he is no longer the counsel for the third respondent in this writ appeal. We, therefore, persisted with our query as to whether he continued to maintain that one of us (GRS,J) is being casteist while discharging his judicial duties. Thiru.S.Vanchinathan refused to answer this question. Instead, he wanted us to pose this query in writing. We, therefore, direct the Registry to serve the following questionnaire to Thiru. S. Vanchinathan to enable him to respond on 28.07.2025 at 01.15 P.M in person:

"Whether you, S.Vanchinathan (Enrl. No.1867/2004) stand by your imputation of caste bias on the part of Justice G.R.SWAMINATHAN in the discharge of his judicial duties?"

AT OF JUDICATUR

W.A(MD)No.510 of 2023

5.Call this case on 28.07.2025 at 01.15 P.M. Thiru. S. Vanchinathan is

VEB (directed to be present in person then.

[G.R.S., J.] & [K.R.S., J.]

24.07.2025 " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பல வழக்குகளில் ஆஜராகிறார். அடித்தள மக்களின் சமூகப்  பிரச்னைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய மரணங்கள், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலையில் சமாதி ஆதரவு விவகாரம் உள்ளிட்ட பலீ வழக்குகளில் கம்யூனிஸ்ட் சித்தாந்த வழியில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.  இந்த நிலையில் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என 

8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். 



சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆனால், அந்தப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவும் 

அதனையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு வழக்கில் நீதிபதியின் செயல்பாடு முறையற்றதாகவோ, தவறானதாகவோ இருப்பதாக ஒரு வழக்கறிஞர் கருதினால் அதை அவர் கடிதமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பலாம் என்ற நடைமுறையை பின்பற்றி மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாகும் என்ற கேள்வி எழுந்திருப்பதை  8 மேனாள் நீதிபதிகள் ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது.  என்கிறார் 



மேலும் ஒரு வழக்கறிஞர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் எப்படி சமூக வலைத்தளங்களில் அதிமுக வழக்கறிஞர் ஒருவரால் பகிரப்பட்டது என்ற கேள்வியும், இக்கடிதத்தை காரணமாக வைத்து கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியே அவ்வழக்கறிஞரை நீதிமன்றத்தில் சம்மன் செய்து விசாரிக்க முடியுமா என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

நீதிமன்ற நடைமுறைகள் முறையற்றதாகவும் தவறானதாகவும் அமைந்து விடக்கூடாது என சமூக அக்கரை கொண்ட குடிமக்கள் கருதுவது நியாயமானதே" என்று பதிவிட்டுள்ளார் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த எட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கம்யூனிஸ்ட் சித்தாந்த வழியில் இப்போதும் செயல்படும் நபர்கள் தான் என்பதை நாடே அறியும்.   உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, டி.அரிபரந்தாமன், சி.டி.செல்வம், அக்பர் அலி, பி.கலையரசன், எஸ்.விமலா, கே.கே.சசிதரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர்  இவர்களின் கடந்த கால செயல்பாடும் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது. நமது பார்வையில் இவர்கள் பொதுவான நபர்கள் தானா என்றால் இல்லை ஒரு கொள்கை சார்ந்த நபர்கள் தான் என்பதே இதற்கு ஆதரவும் எதிர்ப்பு என பல விமர்சனங்கள் எழுகின்றன அதில் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஆதரவாகவும், நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகவும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து ஒரு சார்பாக பேசுவதையே தன் வழக்கமாக கொண்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் சார்ந்த சமூகத்தை குறிவைத்து பேசுவது பிராமண சமூகத்தின் மீது அவருக்குள்ள காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகிறது. திராவிடர் கழக வீரமணியையும், முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களையும் தன் கருத்துக்களுக்கு ஆதரவாக மேற்கோள் காட்டி பேசுவதிலிருந்தே அரிபரந்தாமனின் உள்நோக்கத்தை தெளிவாக்குகிறது. ஒரு நீதிபதியை வெளிப்படையாக விமர்சிக்கும் அரிபரந்தாமன் அவர்கள்  கம்யூனிஸ்ட் அல்லது திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்படுவதை விட்டு விட்டு, முன்னாள் நீதிபதி என்ற அடைமொழியோடு கருத்துக்களை வெளியிடுவது முறையல்ல. இன்னும் அவர் தான் ஒரு நீதிபதியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

என பாஜகவின் மாநில துணைத் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் 

நாராயணன் திருப்பதி. தெரிவித்துள்ளார்.மேலும் இதில் நீதிமன்றத்தில் உள்ள உத்தரவில். நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் செயல் சரிதான் என்பது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரான வழக்கில் இருந்து நன்றாகவே தெரிகிறது. இதில்  பாஜகவின் சித்தாந்த நெறிமுறை எதிர்ப்பாளர்கள் மட்டுமே வாஞ்சிநாதனை ஆதரித்து செய்திகள் தருகின்றனர். தீர்ப்புகளைக் காணும் போது நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது குற்றம் சாட்டும் அந்த எட்டு முன்னாள் நீதிபதிகளும் தங்களையும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது என்பதே நடுநிலை வழக்கறிஞர்கள் கருத்தாக இருக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...