முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்கம்புணரி ஜெஸ்ரில் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் மர்ம மரணத்தில் தாளாளர் உள்ளிட்ட நால்வர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஜெஸ்ரில் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் மர்மமாக உயிரிழந்ததில், பள்ளித் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.


மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மாணவன் மரணம் தொடர்பாக, பள்ளி தாளாளர் சங்கரநாராயணன் (வயது 62), முதல்வர் சிவகாமி (வயது 60), மகன் மகேஸ்வரன் (வயது 22), மற்றும் பள்ளி வாகன மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ (வயது 33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .  உயிரிழந்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாணவன் காரிலிருந்து இறங்கவில்லை என ஓட்டுநர் கூறிய நிலையில், உணவுப் பெட்டி காலியாக இருந்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினர். 

மாணவன் இறந்தது குறித்து தகவலறிந்த காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்குச் சென்று, இறந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 


இதற்கிடையில், மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காரணமாக, சிங்கம்புணரி - திண்டுக்கல் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டது.  மாணவனின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்  சிங்கம்புணரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவர் ஜெஸ்ரில் சிபிஎஸ்இ பள்ளி என்ற பெயரில் புதிதாகத் திறந்து. 




மதுராபுரி மற்றும் வேங்கைபட்டியைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வந்தனர் அதில் பாலமுருகன் மகன் அஸ்விந்த் (வயது 7) இரண்டாம் வகுப்பில் படித்துவருகிறான்  நேற்று முன்தினம் பள்ளிக்குப் புறப்பட்ட நிலையில், பள்ளி வாகனம் வராததால், மாற்று ஏற்பாடாக பள்ளியின் சார்பில் காரில் வந்து மாணவர் அஸ்விந்தை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளியின் பணியாளர்களோ அல்லது வேறு நபர்களோ, சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மாணவருக்கு வலிப்பு நோய் வந்ததனால், சிங்கம்புணரி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அதிர்ச்சியைடைந்த பெற்றோர்கள் சிறுவனைக் காண  அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், முன்னதாகவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததைக் கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, சிறுவனைப் பார்த்த போது அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்தவாறு இருந்ததனால், சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றனர். (அப்பா படக்காட்சி போல) ஆனால், பள்ளி நிர்வாகத்தின் அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். ஜெஸ்ரில் பள்ளியில் காருக்குள் மூச்சுத்திணறி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிங்கம்புணரி ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் ஜூன் 30 ஆம் தேதியில் மர்மமான முறையில் சிறுவன் இறந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் அவரது உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓடிவிட்டனர். நீதி விசாரணை வேண்டி உறவினர்கள் 7 மணி நேரம் மறியலில் ஈடுபட்ட போது தற்காலிக சமரசம் செய்யப்பட்டு மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



நேற்று காலை மாணவனின் தந்தை பாலமுருகன், உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் கூடி தெரிவித்த போது  மாணவனை அழைத்துச் சென்ற அதே காரில் தான், உடலையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அந்தக் காரிலுள்ள தனது மகனின் ஸ்கூல் பேக், சாப்பாடு கொண்டு சென்ற பை ஆகியவற்றை சோதனை செய்ய தடயவியல் அலுவலர் காரைத் திறந்து ஆய்வு செய்த போது மாணவனின் மதிய உணவு டப்பா காலியாக இருந்தது. புத்தக பையை டி.எஸ்.பி., செல்வகுமார் உள்ளே எடுத்துச் சென்றார். அதை வெளியில் வைத்தே திறந்து காட்ட பெற்றோர் வலியுறுத்தினர். அதற்கு டி.எஸ்.பி., மறுத்தார். இதனால் உறவினர்கள் காவல் நிலையத்தில் வாசலில் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகே பெண்கள் மறியல் செய்தனர். அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தேவகோட்டை சார் ஆட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களைச் சூழ்ந்துகொண்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மறியலால் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அஸ்விந்த் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஓட்டுனர் ஜான்பிரிட்டோவிடம் காவல் நிலையத்தில் விசாரித்த போது, பள்ளி வேன் பழுதான நிலையில் 6 மாணவர்களை காரில் அழைத்துச் சென்றதாகவும், பள்ளியில் அஸ்விந்த் காரை விட்டு இறங்காததை கவனிக்காமல் கதவைச் சாத்திவிட்டு சென்று, மாலை கதவைத் திறந்த போது அஸ்வின் உள்ளே மூச்சுத் திணறி இறந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்மாணவன் வகுப்புக்கு வராததால் ஆப்சென்ட் போட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த பெற்றோர், எதற்காக தங்கள் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்தது என்று கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், மதிய உணவு கொடுத்து விட்ட டப்பாவில் இருந்த உணவை மாணவன் சாப்பிட்டுள்ள நிலையில் எப்படி வகுப்பறைக்கு வராமல் இருக்க முடியும், தண்ணீர் பாட்டில், மூடி எப்படி காருக்குள் தனியாக சிதறிக் கிடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினர்.

மாணவனின் சித்தப்பா தினேஷ், தனது 5 வயது மகள், மாணவர் அஸ்விந்த் தன்னுடன் காரில் இருந்து இறங்கி வகுப்பறைக்கு வந்ததாகவும், மதியம் சாப்பிட்டதாகவும் கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாணவரின் தந்தை பாலமுருகன் கூறும்போது, பள்ளியில் வேறு ஒரு சம்பவத்தில் தனது மகன் இறந்து விட்ட நிலையில் அதை மூடி மறைக்க நிர்வாகம் கட்டுக்கதை கட்டி திசை திருப்பி உள்ளதாகவும், காவல் நிலையத்தில் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் பள்ளி முதல்வர் சிவகாமி அவரது கணவர் தாளாளர் சங்கரநாராயணன், சிவகாமியின் மகன் மகேஸ்வரன், வாகன மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ ஆகியோரைக் கைது செய்தனர். வாகனம் பறிமுதலானது கைதானவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.இதில் பொது நீதி யாதெனில் தகுதிகள் இல்லாத கல்வி நிறுவனங்கள் தனியார் வியாபாரக் கடைகள் போல வந்த நிலை தான் இதுபோன்ற தவறுகள் நடக்கும் நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...