இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான நட்பை வளர்ப்பதில்
இந்திய புலம்பெயர்ந்தோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் அவர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி கூறுகிறேன். என் தெரிவித்தார் பிரதமர்
நரேந்திரமோடி இந்த நிலையில்
தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் தூத்துக்குடியில் ரூபாய் 4800 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், தொடங்கி வைக்கிறார் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி வருகை தரும் நிகழ்ச்சி ரூபாய் 381கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத் திறப்புவிழா நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் சட்ட மன்ற கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் தற்போது விமான நிலையத்தை பார்க்கும் போது ஒரு சிறந்த ஆட்சி பாரதத்தில் நடப்பது உறுதி ஆகிறது எங்கும் வளர்ச்சி எதிலும் வளர்ச்சி இது பாஜகவின் தாரகை மந்திரம் இங்கு பேச்சு மட்டுமே அல்ல செயல் மட்டும் தான் ரூபாய் 381 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
26 ஆம் தேதி மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தூத்துக்குடி மக்களின், வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது.. இந்த நிலையில் கடலோரக் காவல்படையினர், கடலோர பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா 26- ஆம் தேதி நடைபெறுகிறது.பிரதமர் நரேந்திர மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
விழாவில் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் ரூபாய்.548 கோடியில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூபாய்.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் போட்டு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அந்தப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து முழு பரிசோதனைக்கு பின்னரே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹங தலைமையில் திருநெல்வேலி சரக டி.ஜ.ஜி. சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் அடங்கிய சுமார் 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
அதே போன்று கடலோரக் காவல்படையினர், கடலோர பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனி விமானங்கள் சில தூத்துக்குடியில் இறக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் 100 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் இன்று விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு பாதுகாப்புப் படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன.
பிரதமர் வருகையையொட்டி காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படுகிறது.
கருத்துகள்