முதற்கட்ட அறிக்கை மூலம் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு தகவல்
இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் AAIB முதலில் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
அதன் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் 'கட்-ஆஃப்' நிலைக்கு சென்றன. இந்த இரண்டு சுவிட்சுகள் தான் என்ஜினை நிறுத்தும் பணிக்காக பயன்படுகிறது விமானம் அதன் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகமான 180 நாட்ஸ் என்ற அளவை பிற்பகல் 1 மணி 38 நிமிடம் 42 நொடியாக இருந்த போது எட்டியது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே, என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-க்கான எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகள் ஒரு விநாடி இடைவெளியில் கட்-ஆஃப் நிலைக்குச் சென்றது.
ஏன் நீங்கள் கட்-ஆஃப் செய்தீர்கள் என ஒரு விமானி கேட்க, நான் அப்படிச் செய்யவில்லை என சக விமானி பதிலளிப்பது பதிவாகி உள்ளது. இதில் கேள்வி கேட்டவரும் பதிலளித்தவரும் யார்? எனத் தெளிவாக்கவில்லை.
10 விநாடிகள் கழித்து, என்ஜின் 1-ன் கட்-ஆஃப் சுவிட்ச் 'கட் ஆஃப்'பில்லிருந்து 'ரன்' ஆக மாறியது. பின்னர் நான்கு விநாடிகள் கழித்து, எஞ்சின் 2-ன் கட்-ஆஃப் சுவிட்சும் 'கட் ஆஃப்' என்பது 'ரன்' ஆக மாறியது. " அப்போது நேரம் பிற்பகல் 1 மணி 38 நிமிடம் 56 நொடி.
அதன் பின்னர் 9 விநாடிகள் கழித்து, விமானிகளில் ஒருவர் தரையில் இருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு "மேடே, மேடே" என்று ஒரு செய்தியை அனுப்பினார். அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை, சிறிது நேரத்திற்குப் பிறகு விமானம் மோதி விபத்தில் சிக்கியது.
என்ஜின்கள் வேலை செய்வதை நிறுத்தியபோது, ரேம் ஏர் டர்பைன் அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்க தானாகவே செயல்படுத்தப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து வந்த சிசிடிவி காட்சிகள், விமானம் மேலே பறக்கத் தொடங்கிய போது, அதாவது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேம் ஏர் டர்பைன் -RAT செயல்படுத்தப்பட்டது. விமானப் பாதையில் பறவைகளின் நடமாட்டம் எதுவும் பெரியளவில் பதிவில்லை. விமான நிலைய ஓடுபாதை எல்லையைக் கடப்பதற்கு முன்பே விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியதென அறிக்கை இருக்கிறது. விமானியும் விமானக் குழுவினரும் உடற்பகுதியுடன் இருந்ததாகவும். அறிக்கையின்படி, 2 விமானிகளும் மும்பையைச் சேர்ந்தவர்கள், விமானம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ஆமதாபாத்தை அடைந்த அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்தது.
அனைத்து விமானிகளும் விமானக் குழுவினரும் உள்ளூர் நேரப்படி காலை 06:25 மணிக்கு சுவாசப் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்கள் 'விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள்' எனக் கண்டறியப்பட்டது.
விமானத்தின் எரிபொருள் மாதிரிகள் திருப்திகரமாக உள்ளதாகவும் கூறும்
அறிக்கையின்படி, ஏர் இந்தியா விமானத்திற்கு எரிபொருள் டேங்கிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் "திருப்திகரமானவை" எனக் கண்டறியப்பட்டது.
விபத்துக்கு எரிபொருள் பிரச்னை ஒரு காரணமாக இருக்கலாம் என விமான நிபுணர்கள் முன்பே கூறியிருந்தனர். எரிபொருள் பிரச்னை அல்லது அடைப்பு இரண்டு என்ஜின்களும் செயலிழக்க காரணமாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.
ஆனால்,விமானத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் திருப்திகரமாக இருந்ததாக அறிக்கை உள்ளது.
முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியான பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது.
அதில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தோடு துணை நிற்கின்றோம், விசாரணை முகமைகள் நடத்தும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறோம் எனத் தெரிவித்தது. விசாரணை நடைபெற்று வருவதால் எந்த ஒரு குறிப்பிட்ட தகவல்களுக்கும் எங்களால் கருத்தை தெரிவிக்க இயலாது என ஏர் இந்தியா தெரிவித்தது
தற்போதுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முதல் கட்ட அறிக்கை மட்டுமே என்பதால் கூடுதல் தகவலுக்காக மத்திய அரசு கூற்றுப்படி காத்திருக்கலாம்
இருந்தாலும் அறிக்கையிலுள்ள சில விபரங்கள் ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு சென்றது தெளிவாகிறது.
இது தொழில்நுட்பக் கோளாறா? மென்பொருள் சிக்கலா? மனிதப் பிழையா? என்பன போன்ற இன்னும் பல கேள்விகள் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
கருத்துகள்