ஐராவதமான ஐயப்பன் யானையின் நல்லடக்கம் 55 வயதான சபரிமலையின் செல்லப்பிள்ளையான கஜராஜா மணிகண்டன் யானை நேற்று மாலை உடல் நலக்குறைவால் காவமானது.
பிரபல திரைப்பட நடிகையும் வேலாயுதன் நாயர் மனைவியுமான கே.ஆர். விஜயாவுக்குச் சொந்தமாக இருந்த நிலையில் யானை, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. அப்போதைய சபரிமலை தந்திரியால் அதற்கு மணிகண்டன் எனப் பெயரிடப்பட்டது. கஜராஜா என்றும் அன்பாக அழைக்கப்பட்ட மணிகண்டன், சபரிமலை சன்னிதானத்தில் புனிதமான திடம்புவையும் உற்ச்சவ மூர்த்தியையும் ஏந்தி உலா வந்தவர் பல ஆண்டுகள் சேவை செய்தார். செல்லப்பிள்ளையான மணிகண்டன் யானை 55 ஆண்டு கடந்த நிலையில் நேற்று மாலை உடல் நலக்குறைவால் உயிர் துறந்தது.
பல ஆண்டுகளாக, யானை, கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும் போது, அவர்களின் மீது மாலை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்.
சபரிமலை கோவிலில், பல யானைகள் உள்ளன, அவற்றில் மணிகண்டன் என்ற யானை, கே.ஆர்.விஜயா வழங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த யானை, சபரிமலை கோவிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக வழங்கப்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் வரவில்லை. ஐராவதம்
(பிரபஞ்சத்தின் எட்டு மண்டலங்களைக் காக்கும் எட்டு யானைகளில் ஐராவதமும் ஒன்று என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த எட்டு யானைகள் அஷ்டதிக்கஜங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஐராவதம் கிழக்கு மண்டலத்தைக் காக்க வேண்டும். (அத்தியாயம் 66, ஆதி பர்வம், மகாபாரதம்). கூறுகிறது. ஆகவே யானைகள் ஆலயத்தில் இருப்பது தெய்வீக நிலை புனித நடைமுறை ஆகும். யானைக்கு பந்தயம் அரண்மனை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பலரும் அஞ்சலி செலுத்தினர்
கருத்துகள்