முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஜீத் குமார் லாக்கப் மரண விவகாரத்தில் நீதி விசாரணை தீவிரம்

குதிரைகள் ஓடிய பின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பகுதி நகை காணாமல் போனதாக புகார் கூறப்பட்டதில்   தனிப்படைக் காவலர்கள் கொடுமை செய்து படுகொலை நிகழ்த்திய வழக்கிலும் கூட நீதிமன்றத்தின் தலையீடு, ஊடகம் மற்றும் சிவில் சமூக வலைதளங்களில் அழுத்தத்தினால் தான் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றமிளைத்தோர் பணிக்  காத்திருப்புப் பட்டியலில் வைப்பது, பணியிடை நீக்கம் செய்வது, கைது செய்வது என எல்லாவற்றையும் கடந்து தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது         



சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதியரசர் சுப்பிரமணியம் அமர்வு தலையீட்டால் மட்டும் தான் இது நடந்துள்ளது அதோடு.அரசியல் அழுத்தமில்லாமல் எந்தக் காவல் நிலைய  மரணங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற நிலை தான் இதுவரை இருந்து வந்தது. அஜீத் என்ற நபர் படுகொலை மரணத்தை ஜாதி அரசியலாக்கிய கட்சிகளும் நீதி விசாரணை வழங்கிய நீதியரசரும், அஜித்குமார் என்ற தற்காலிக கோவில் காவலர் கொலை வழக்கு குறித்த வாதங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்த மூத்த 
வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வாதங்களை முடித்த பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் போது !




"அஜித்குமாரை காவலர்கள் தாக்கியதை, ஒவ்வொரு இடமாக அலைக்கழித்ததை,  அங்குள்ள பொதுமக்களில் பலர் பார்த்து, 

காணொளி எடுத்து வைத்துள்ளனர். பார்த்ததற்க்கும் பல சாட்சிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் அந்த ஆதாரங்களைத் தருவதற்கும், சாட்சி சொல்வதற்கும், அச்சப்படுகின்றனர்.காரணம் தங்களுக்கு பாதுகாப்புக் கிடைக்காது, உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. காவல்துறையினரின்  அராஜகத்தை நேரடியாகப்  பார்த்தவர்கள் என்ற முறையில்  சாட்சி சொன்னால்

காவல்துறையில் பணி செய்து வருபவர்கள்  எந்த எல்லைக்கும் போவார்கள்! என்று கூறியதாகத் தெரிவித்தார் .

அவ்வாறு சாட்சி சொல்ல வருபவர்களைப் பாதுகாக்க வேண்டியது மாநிலத்தை ஆளும் திமுக அரசாங்கத்தின் தலையாய கடமை என்றார்."




அப்படி அவர் கவலைப்பட்டது நேற்று உண்மையாகிறது, நடந்த சம்பவத்தை, காவலர்கள் அஜித் குமாரைத் தாக்கியதை, கழிவறையிலிருந்து படம் பிடித்த சக்தீஸ்வரன் என்ற இளைஞர் எடுத்த காணொளி. நீதிமன்றத்தில் முக்கிய ஆவணமாக மாவட்ட நீதிமன்றத்நின் நீதிபதி முன்னிலையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி தான் வழக்கின் போக்கையே. மாற்றியது. உண்மையை ஊருக்கு உணர்த்தியது. 


வலிப்பு நோய் வந்ததாக காவலர்கள் சொன்னது பொய் என்பதைப் படம் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இப்போது அந்த சக்தீஸ்வரனை "வீடியோவை போலியாக எடிட் செய்து விட்டேன்" என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரச்சொல்லி ரௌடிகளை வைத்து காவல்துறை நிர்பந்தம் செய்து மிரட்டுகிறது,  என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: பாதுகாப்பு வேண்டுமென்று காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளவருக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய காவல்துறையே கொன்று விடுவதாக ரௌடிகளை வைத்து மிரட்டுகிறது. வேலியே பயிரை மேயலாமா,  திருப்புவனம் வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன சக்தீஸ்வரனுக்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா என்ற நபர் தரப்பிலிருத்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளார்!





கூலிப்படையோடு தொடர்பிலிருந்த அந்த ஊழல் காவலர் கொலையாளி என அடையாளம் காட்டப்பட்ட ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என ஒரு முக்கிய சாட்சி புகார் அளித்துள்ளது இப்போது அதுவும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் திருமங்கலம்                 ஆலம்பட்டியைச் சேர்ந்த ஜெயபெருமாள் மகளான நிகிதா என்ற நபர் மீது 17 புகார் மனுக்கள் மீது CSR எனும் மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது. இதில் திருமங்கலம் காவல் நிலையத்தில் 14 ஆண்டுக்கு முன்னர் மே மாதம் 10 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, ஜே. சிவகாமி அம்மாள், (வயது 60), அவரது கணவர் ஜெயபெருமாள், (ஓய்வு குரூப் 1 அலுவலர்)( வயது 65), மகன் ஜே.பி. கவியரசு என்ற ஜே. வைபவ் சரண், மருமகள் கே. சுகாதேவி, (வயது 29), மகள் ஜே.பி. நிகிதா, விளாக்குடி, பகுதி திருமங்கலத்தைச் சேர்ந்த ஜே.பி. கார்டன்ஸ் மற்றும் விளாக்குடியைச் சேர்ந்த பகத் சிங், (வயது32), ஆகிய ஆறு நபர்கள் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 




திருமங்கலத்தைச் சேர்ந்த எஸ். ராஜாங்கம் (வயது 65) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், புகார்தாரருக்கும், குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களான மேலும் இருவருக்கும், அரசு பணி கிடைக்க உதவுவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது         நிகிதா தான் ஒரு ஐஏஎஸ் என  செல்லம்பட்டி மாப்பிள்ளைக்கு ஆசை காண்பித்திருக்கிறார்  தனக்கு மனைவியாக வரப்போகிறவர் ஐ.ஏ.எஸ். அலுவலர் என நினைத்து செல்லம்பட்டி மாப்பிள்ளை சிக்கிய நிலையில் திருமணம் நடந்துள்ளது. சரியாக 20 நாட்களில்  ஐ.ஏ.எஸ்.இல்லை அது பொய் எனத் தெரியவர திருமணம் விவாகரத்தானது.       ஆகவே புகார்தாரர்கள் மீது பல புகார்கள் குவிந்து வருகின்றன அவர்கள் நேர்மையான நபர்கள் அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த நிலையில் அவர்கள் மீது பலவிதமான புகார்கள் இதுவரை விசாரணை நடத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ள நிலையில் தற்போது தலைமறைவானதாக ஒரு தகவல் உள்ளது. புகார் மனுவைக் கொடுத்த நபர் தலைமறைவானாலும் இனி நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று நீதி விசாரணை நடத்தும் மதுரை மாவட்ட நீதிபதி மற்றும் சிபிஐ விசாரணை ஆகியவை வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் உயர் பணியில் இருந்தாலும் விட்டுவிட மாட்டார்கள் என்ற நிலை உருவானது மக்கள் தன் எழுச்சியாக சமூக வலைதளங்களில் ஏற்படுத்திய வைரல் தான் காரணம். “காவல்துறையில் தனிப்படைகளை கலைக்க நடவடிக்கைகள் வந்துள்ளன 





தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜுவால் உத்தரவு

உயர் அலுவலர்களின் வழிகாட்டுதலின்படியே முக்கிய வழக்குகளில் தனிப்படைகள் அமைக்கவும், விசாரணைக்கு அழைக்கும் முன்பு 35 பி நோட்டீஸ் தருவது இனி கட்டாயம் எனவும் உத்தரவு. காரணம்  வாய் வழியாக அளித்த புகார் தொடர்பாக காவலர்கள் தாக்கியதில்  உயிரிழந்த கோவில் தற்காலிகக் காவலர் அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா என்ற நபர் மீது பண மோசடி வழக்கு பல  உள்ளதாகத் தெரிகிறது.

அது குறித்து விபரம் வருமாறு:- தனது செல்வாக்கின் அடிப்படையில் 

வேலை வாங்கித் தருவதாக ரூபாய். 16 லட்சம் வரை ஒரு குடும்பத்தில் பணமோசடி செய்ததாக நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில்  துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவியாளரை தனக்கு தெரியும் எனக் கூறி நிகிதா  பல கோடி பண மோசடி செய்துள்ளார்.

பணத்தைக் கொடுத்தவர்கள் மற்றும் பயந்து கேட்காமல் விட்டவர்கள் போக சிலர் திருப்பிக்கேட்டபோது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக நிகிதா மீதும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரிகிறது. முக்கிய காவல் பணியிலுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் பெயரும் இதில் முக்கிய பத்திரிகையாளர் வெளிப்படுத்த அடிபட்டது. இவரும் நாடார் சமுதாயம் சேர்ந்தவர். மேலும் 


மோசடி வழக்கில் சிக்கிய நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரும்  இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சார்பில் உடனிருந்த நிலையில் திருமாவளவன் பேசும் போதும் அமைச்சர் பெரியகருப்பன் உதவி வழங்கும் போதும் உடனிருந்தது. 
ஜாதி தானே, ஜாதி இல்லை என்கிற திமுக ஹரி நாடாரை வைத்து இந்த விவகாரத்தைக் கையாளும் காரணம் என்ன.



அப்போதைய துணை முதலமைச்சர் என்று இந்தச் செய்தியில் அடிபடுவது மு க ஸ்டாலின் நான் முதலமைச்சராக இருந்தாலும் இது நடந்திருக்கும்.. அடிச்சா உண்மையை ஒப்புக்கொள்வார்கள் என காவல் துறை  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. என் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.. என செய்தியாளர்களிடம் திருமாவளவன் கருத்து அஜித் குமார் படுகொலை குறித்து காவல் துறை மீது கடுமையாகச் சாடாமல் ஒரு ஒத்தடம் கொடுத்த திருமாவளவன்.   குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா இல்லாமல் இருக்கும் ஒருவரைக் கொல்வது தான் எத்தனை எளிதாக இருக்கிறது 

உண்மையில் நடந்தது இதுதான் என்று ஒரு தரப்ப செய்திகளைக் காண நேர்ந்தது

அதன்படி- நிகிதா தன் தாயாரோடு கோவிலுக்கு வந்தார், தாயாரால் கோயில் பிரகாரத்துக்குள் நடக்க முடியாதென்பதால் அங்குள்ள சக்கர நாற்காலி சேவையைப் பயன்படுத்த விரும்பினார்






பக்தர்களின் வசதிக்காக சக்கரநாற்காலி இலவசம் தான்.. உடன் வருபவரே தள்ளிக்கொண்டு சென்றால் பிரச்னையில்லை,

அங்குள்ள யாரையாவது  தள்ளிக்கொண்டு வருவதற்கு நாடினால் அவர்களுக்கு எதாவது பணம் தரவேண்டியது இயல்புதானே. அது லஞ்சமா இல்லை வேறா என்பது அறநிலையத் துறை மட்டுமே அறிந்த உண்மை.

நாற்காலியைத் தள்ளிச் செல்வதற்கு காவலாளியான அஜீத் முன்வந்தார், அதற்காக அவர் ஐநூறு ரூபாய் கூலி கேட்டார், இது இலவச சேவைதானே உனக்கு ஏன் பணம் தரவேண்டும் என்று நிகிதா கோபப்பட்டார்,

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது (நான் நூறு ரூபாய் தர்ரேன்னு சொன்னேன், அவரு ஐநூறு ரூபாய் கேட்டாரு.. என்று நிகிதா காணொளியில் சொல்லியிருக்கிறார்)









மேலிடத்து செல்வாக்குடைய நிகிதாவுக்கு கோவில் காவலாளி தன்னிடம் வாக்குவாதம் செய்தது அவரது கெளரவப்பிரச்னையானது.

அவர் கோவில் பணி அலுவலரிடம் புகார் செய்தார் 

நிர்வாகி அஜீத்குமாரைக் கண்டித்தார்..

இது போதாது என்று கருதிய நிகிதா

தலைமைச் செயலகத்தில் உயர் பொறுப்பிலுள்ள ஐ.ஏ.எஸ் அலுவலரை அழைத்து அஜீத் என்பவர் தன் காரிலிருந்த நகையைத் திருடிவிட்டதாகக் கூறுகிறார்

அந்த ஐ.ஏ.எஸ் உயர் அலுவலர் சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரை அழைத்து எப்.ஐ.ஆர் எதுவும் பதியாமல் நகையை மீட்டுத்தர வேண்டும் என உத்தரவிடுகிறார்  எனவும். அவரும் துணைக் கண்காணிப்பாளரை அழைத்து உத்தரவிட்டார், துணைக் கண்காணிப்பாளர் தன் பொறுப்பிலிருந்த சிறப்புப்படைக் காவலர்களை அழைத்து நகையை மீட்டுவர உத்தரவிட்டார் 


அந்தக் காவலர்களும் நகைத்திருட்டே நடக்கவில்லை என்பதை அறியாமல் உண்மை விசாரணைக்கு உட்படுத்தாமல் இல்லாத நகையை மீட்பதற்காக அஜீத்தை அடித்தே கொன்று விட்டார்கள்‌.

இதன் விளைவாக-ஒரு பாவப்பட்ட குடும்பம்  தன் தலைமகனை இழந்தது ஐந்து காவலர்கள் படு கொலை வழக்கில் சிறை சென்றார்கள்  துணைக் காவல் கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார் 

காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் யாரென்று அறியப்படாத தலைமைச் செயலக உயர் அலுவலர் மக்களால் சபிக்கப்படுகிறார் முதல்வர் மன்னிப்புக் கோரினார்  இத்தனைக்கும் காரணம். நான் யார் தெரியுமா என்னும் நிகிதாவின் தன் அகங்காரம்

தனக்கு மேலுள்ளவர்களிடம் அகங்காரம் காட்டுவதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம், பாவப்பட்டவர்களிடம் காட்டும் அகங்காரத்திற்கு பணத்திமிர் என்று பெயர், அதிகார வர்க்கத்தைத் தெரியும் என்ற ஆணவத்தால் ஐநூறு ரூபாய்க்காக ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது

இதை வள்ளுவர் வாக்கில் கூறினால்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா

என்கிறது                                      திருபுவனம் பேராட்சித் தலைவரின் கணவரான தி.மு.க.,வைச் சேர்ந்த சேங்கைமாறன், தி.மு.க.,வைச் சேர்ந்த மகேந்திரன், திருப்புவனம் தி.மு.க., நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோருடன், மானாமதுரை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சேர்ந்து, உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் பேரம் பேச முற்பட்டது காவல்துறை உயர்  அலுவலர்கள் அனுமதி இல்லாமலா என்பது நீதி விசாரணை மூலம் தெரிய வரும். 

மானாமதுரை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,மூர்த்தி ஆகியோர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்? என் பலரும் வினவும் நிலையில் இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து காவல்துறை உயர் அலுவலர்களைக் காப்பாற்ற தி.மு.க., அரசு முயற்சிக்கிறதா? என் ஊடகங்கள் வினவும் நிலையில் உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன்  வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் வழங்கினார்.

மானாமதுரை டி. எஸ்.பி., சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், டிஜிபி  தரப்பில் வெளிவந்த அறிவிப்பில் 

முக்கிய பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும்

குடும்பமாக வாகனங்களில் 


செல்பவர்களிடம் வாகனத் தணிக்கை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது

சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்தியை பயன்படுத்தக் கூடாது

கோவில் திருவிழாவில் ஜாதியப் பாகுபாடு, மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்




காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் எதுவும் இருக்கக் கூடாது. இவையனைத்தும் 

சிவகங்கை காவலர்கள் நடத்திய படுகொலை மரணத்தைத் தொடர்ந்து மண்டல காவல்துறை உயர் அலுவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல் இருந்த போதும் இந்த  வழக்கில் அவர் பெயர்தான் பெரிய அளவில் விவாதிக்கப்படுகின்றன காவல்துறையினர் மீதான புகாரை காவல்துறையினரே விசாரிக்க முடியாது -  ஆகவே நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடக்கிறது நிச்சயமாக உண்மை ஒருவாரத்தில் நீதிமன்றத்தில் வந்துவிடும் என்ற நிலையில் சிவகெங்கை அஜித்குமார் கொலை வழக்கில் உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு காவல்துறையில் தனிபடைகள் கலைப்பு எனும் அறிவிப்பு. காவல்துறையில் மானாமதுரை DSP சண்முக சுந்தரத்தின் ஆர்வம் தான் அஜித் படுகொலைக்கு காரணம்! அதே கோவிலின் முன்பு ஆட்டோ ஒன்று களவு போயுள்ளது.  காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் cctv ஐ காவல்துறை கழட்டி விட்டார்கள்.CBI விசாரணையில்  வெளிவரும் உயர் அலுவலர்களுக்கு   அஜித்குமார் செத்த பிறகு தான் தகவல் தெரியுமாம்.IG பிரேம் ஆனந்த் சின்ஹா ஊரில் இல்லை! இலவச மனைப் பட்டா. திமுக சார்பில் முதல் கட்டமா 5 லட்சம் அரசு 50 லட்சம். என்பது  இதில் ஏதோ பெரிய தவறு தான் நடந்திருக்கு அதில் நகை ஹரி நாடாருக்கு அங்கு என்ன வேலை? DSP ஐ தற்போது வரை கைது செய்யப்படவி்லை 

அரசு தரப்பில் சாரி என்று வார்த்தை முதல்வர் தரப்பில் வருகிறது விருகம்பாக்கம் பகுதியில் இருந்த சேலம் ஆர் ஆர் பிரியாணிக் கடையில் மன்னிப்புக் கேட்டு துவங்கியது இப்போது திருபுவனம் அஜீத்குமார் சாவில் வந்து  நிற்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தும் நிலையில் அஜித்குமார் வழக்கில் முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் தற்போது மத்திய அரசில் IAS அலுவலருமான  G.லதாவின் உத்தரவில் ADGP மற்றும் சண்முக சுந்தரம் DSP மற்றும் சிறப்புப்படை  செய்த படுகொலை என பேசப்படுகிறது ஆனால் நீதி விசாரணை என்பது யாரும் குறுக்கீடு இல்லாமல் நடந்து வருகிறது (நிகிதாவின் தந்தை ஒய்வு பெற்ற DRO நிலை அலுவலர்) நிகிதாவின்  தந்தையும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக முன்பிருந்த லதாவும் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் என்பதால் இது பொய் புகார் கொடுத்த நிகிதா விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் தலைமறைவு என்பது ஏற்புடையதாக இல்லை சிபாரிசு படுகொலை குற்றம் முழுமையாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை வரும்.

ஆலயக் காவல் வேலைக்குச் சென்ற தனியார் பணி சாமானியனுக்கு திருடன் பட்டம் பட்டம். கஞ்சா வழக்கிலும், கடத்தல் வழக்கிலும் இதுவரை எத்தனை இளைஞர்களை இதுபோல போலி FIR போட்டு அவர்களின் எதிர்காலத்தை காவல்துறை பாழாக்கி சீரழித்துள்ளது என்பதற்கு இந்த அஜீத் குமார் வழக்கே சாட்சி. நாம் பார்தத பல ஊழல் காவல் அலுவலர்கள் உதாரணமாக கூற முடியும் அது தாங்கள் அரசு பணியாளர்கள் என்பதை மறந்து நடக்கும் 

அதிகாரத் திமிர்.        திருப்புவனம் அஜீத் குமாரின் லாக்அப் டெத் கொலை வழக்கில் முதல் குற்றவாளி தலைமை காவலர் ராஜா இவர் அஜீத்குமாரை அடிக்கிற வீடியோ தான் வெளியிடப்பட்டது. நாடார் சமூகத்தை சார்ந்த அஜீத்குமாக்கு ஆதரவாக போராட்ட களத்தில் முதலில் இறங்கியது அகமுடையார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான். கொலை குற்றவாளி எந்த சமூகமாக இருந்தாலும் காவல்துறை சார்ந்த குற்றவாளி தான். இதன் மூலமாக தேவர் - நாடார் - தேவேந்திரகுல வேளாளர் என திசை திருப்ப பலர் முயல்கிறார்கள் சில முற்போக்கு சாராத பிற்போக்குவாதிகள்.

பொதுவாக காவல்துறையின் மூலமாக நடக்கும் மரணங்கள் அரசுக்கு தெரியாதென்றாலும் அது  பயங்கரவாதம் தான், அவர்கள் தங்கள் மேல் அலுவலர், ஆட்சியாளர்களின் ஏவலர்கள் என்பதே நிதர்சனம். "இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?"

என்று வினா எழுப்பியிருக்கிற சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை), இது போல நூறு கேள்விகளை கேட்டுள்ளது. அடிக்கடி இப்படி கேட்டு பழகிடுச்சுன்னா  முக்கியமிழந்த  சாதாரணம். அப்படித்தான் காலந்தோறும் நடக்கிறது.

திருமணத்துக்கு காத்திருந்த ஒரு இளைஞனை அடித்தே கொன்ற, சம்சாரிகள் ஆறுபேரையும் விடுவிக்கக் கோரி, அவர்களின் சம்சாரங்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள். 

அம்பு இங்கே. எய்தவன் எங்கே?  ஒரு நபர்களுக்கும் பதில்  தெரியவில்லை. "எய்தவனே இல்லை, நாங்களாகவே நாண் பூட்டி நாங்களாகவே முன்னேறி அஜீத்குமார் கதையை முடித்தோம்" என்று அந்த அம்புகளே வாக்குமூலம் அளித்தாலும் வியப்பில்லை. காரணம் அரசு பணியை தங்கள் அதிகார பணி என நினைக்கின்ற நிவை தான் 

"அஜீத்குமாரை விசாரிக்கும் போது அவருக்கு கஞ்சா கொடுத்து போலீசார் கொடுமைப் படுத்தியதை நேரில் பார்த்தேன்" என்கிறார், நேரடி சாட்சி, மனோஜ்பாபு. என்ற நபர் 

அஜீத்குமார் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனோ, "எனக்கு உரிய பாதுகாப்பு இல்லை, அச்சமாக இருக்கிறது; ஆனாலும் கவலை இல்லை. சம்பவத்தை கூடவே இருந்து பார்த்த பிறரின் பாதுகாப்பையாவது உறுதிப் படுத்த வேண்டும்" என்கிறார் பேட்டியில். அவருக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல் கோவில் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அஜீத்குமாரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்த கார்த்திக், காவல்துறை அலுவலர் ஒருவரின் கார் ஓட்டுநர் என்பது அடுத்த டுவிஸ்ட். 

நேரடி சாட்சிகளை  பாதுகாக்கணும் இதுவே தற்போதைய நிலை. அஜீத்குமார் உடலில்  சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். 

வெளிப்புறக் காயங்கள் மொத்தம் 50. 

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது 

வயிற்றின் மையத்தில் கம்பு (தடி) 

வைத்து குத்தப்பட்ட காயம் இருக்கிறது.

 மருத்துவ அறிக்கையில் தகவல்

தப்பித்து ஓடும்போது கால்தடுக்கி விழுந்ததில், 'உடைவு' என்று விசாரணைக் கைதிகளின் கை-கால் கட்டுகளுக்கு 

ஒரு காலத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது. 

 பத்து நபர்கள் பாதுகாப்புல இருக்கும் போதே, கைதி ஓட்டம் பிடிக்கிறார் என்றால் உங்கள் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது பாருங்கள் என ஜூடிசியல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப..

விசாரணைக் கைதிகள் தப்பித்து ஓடினால்தானே கேள்வி எழுகிறது. 

அதை மாற்றுவோம் என்று இருக்கும் இடத்திலேயே, பாதுகாப்பிலேயே -  வழுக்கி விழுந்து, உடைந்து - உடைத்து, எழுந்து கொள்வது போன்ற நவீன கழிவறைகளும் அதி நவீன குளியலறைகளும் தருவிக்கப் பட்டது. 

அதுவும் கொஞ்ச நாள்களில் கேள்விக்கு உள்ளானது. 'மண்டைக்கு மேலருக்குற கொண்டை காட்டி குடுத்துடுச்சே' என்பது போல பின்னணி மொத்தமும் வெளிச்சத்துக்கு வந்தது. 

ஒரு வாரம் முழுவதும் இடது கை, வலது கால் என்றும் அடுத்த வாரம் முழுவதும் வலது கை,  இடது கால் என்றும் உறுப்பு ஏரியாக்கள் மாறி மாறி மாவுக் கட்டு போடப்பட்ட விசாரணை கைதிகளின் புகைப்படங்களும் அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு (?) கொண்டு போய் சேர்த்த காவலரின் புகைப்படங்களும் வெளியாகின. 



இதுவும் ஜூடிசியல் நீதிமன்றத்தில் பார்வைக்குப் போகவே, மாவுக்கட்டுகள் அண்மைக் காலமாக இல்லை.  மாற்றாகத்தான் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கிற சம்பிரதாயம் தொடங்கி வைக்கப் பட்டிருக்கிறது. இதுவும் ஜூடிசியல் நீதிமன்றத்தில் கவனம் பெறும்வரை நீடிக்கும். அதன் பின்னே, புதியதொரு வழிவகை  கண்டுபிடிக்கப் படும்.

ஐபிஎஸ் தேறி மாவட்ட பயிற்சி கண்காணிப்பாளர் வேலைக்கு சேர்ந்த ஒருசில மாதங்களில் பலரின் பற்களைப் பிடுங்கி விசாரணையில் உலக சாதனை படைத்த பல்வீர்சிங் போன்றோர் பணியில் தொடர்ந்தால் இதுவாகத்தான் இருக்க முடியும்.

"பதவி உயர்வோடு பல்வீர்சங், மீண்டும் சர்வீசில் பீடுநடை போடத்தான் போகிறார் என்றே அந்த ஏரியாவில் சாதாரணமாகச் சொல்கிறார்கள்.

சந்தன மரம் கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்றதை பிரகடனப் படுத்திய ஐபிஎஸ் விஜயகுமாரை அவரது டீம் அதிரடிப்படையினர் தோளிலேற்றி வைத்து கொண்டாட்ட நடனமிடுகிற நிலை ஒருபக்கம் என்றால் - விஜயகுமாரோ, வீரப்பனைக் கொன்ற பெருமையை கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றி கொண்டாடி தீர்த்துக் கொள்கிறார். இப்படியான புரிதல்களை பொதுமக்கள் பலர், ஆண்டுக்கணக்கில் பேசியும் கைவசமுள்ள கிளைக் கதைகளோடு இணைத்தும் பேசி வருவதைப் பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவைகள் நாட்டுப்புற கதைப்பாடல்களாக பெருமையோடு பேசித்திரிகிற அளவு வளர்ந்து நின்றாலும் வியப்பில்லை.

"நடந்தது துப்பாக்கி மோதல் தான். திட்டமிட்ட என் கவுண்ட்டர் அல்ல" என்று ஒவ்வொரு என் கவுண்ட்டரின் போதும் காவல்துறையினர் சொல்லி வந்தது முன்னொரு காலம். 

 என் கவுண்ட்டர்கள் குறித்தான எதிர்ப்புக் குரலோ பொது வேதனையோ, இன்னபிற எதுவோ பொதுவாகவே மக்களிடம் இல்லை. "இந்த மாதிரி நாலு பேர சுட்டுக் கொன்னாத்தான் அடங்குவானுங்க" என்கிற மக்கள் குரலே சட்டம் மற்றும் நீதித்துறை பயிற்சி முறை இல்லாத காவல்துறைக்கு போதுமானதாக இருக்கிறது. 



இப்போதெல்லாம், "துப்பாக்கி மோதலில்  எதிர்பாராது நடந்த சம்பவம் இது" என்று நீட்டிமுழக்கி நடுங்கி தயங்கி சிரமப்பட்டு இதை விளக்குவதில்லை. "போலீசை வெட்டி துப்பாக்கியால் சுட முயன்றான். சிலருக்கு காயமும் உண்டானது. அதன் பின்னரே இரண்டு ரவுண்டுகள் சுட்டோம்" என்று சொல்லி விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். 

விசாரணைக் கைதிக்கு, கை விலங்கு போட்டுத்தானே அழைத்துப் போனீர்கள்?  என்ற கேள்வி முன்வைக்கப் பட்டால், பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கவே கைவிலங்கை கொஞ்சம் தளர்த்தினோம். திடீரென்று மண்ணில் புதைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எங்களை சுட முயன்றான். வேறு வழி இல்லை. முடித்து விட்டோம் -என்று பதில் வருகிறது.



கைஉடைப்பு, கால் உடைப்பு, மாவுக்கட்டு, சுட்டுப்பிடிப்பு போன்ற காவல்துறையினரின்  அனைத்து செயல்களையும் ரசித்து களித்து ஆதரவுக்குரல் கொடுத்த அதே மக்கள்தான், போலீசுக்கு 'என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்'  என்று "டிபி" வைத்தும், 

கட் - அவுட் நிறுத்தியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடித் தீர்த்தார்கள்.

 இப்போதும் அவர்களே தான் சிவகங்கை மாவட்டத்து திருபுவனம் (மடப்புரம்) அஜீத்குமார் உயிரிழப்பை கண்டித்தும்; குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  நீதிமன்றத்தில் மட்டுமே நீதியை நிலை நாட்ட வேண்டும் காவல்துறை அந்த பணியைச் செய்யக்கூடாது.

வழக்கு விசாரணையை, புலனாய்வை, தடயங்களை (இப்போது சிசிடிவி காட்சித் தொகுப்பும் அவற்றில் இணைந்துள்ளது), சாட்சியங்களை சேகரித்து முறையாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி நீதித்துறை மூலம் தண்டனை பெற்றுத்தருவதில் காலங்காலமாகவே காவல்துறையின ருக்கு ஏதோ உளவியல் சிக்கல் இருக்கிறது. அந்தச் சிக்கலை களைந்து காவல்துறை காவலராக இருக்கத்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர தாங்களே நீதிபதிகளாகி விடக் கூடாது. தீர்ப்பெழுதும் அதிகாரத்தையும் காவலரே  எடுத்துக் கொண்டால் நீதிமன்றங்களின் தேவையாக என்ன இருக்கப் போகிறது?  தாசில்தார் வேலைமை தலையாரி செய்ய முடியாது 

போலீசார், ஆகாயமார்க்கமாகவோ வேற்றுக் கிரகத்தில் இருந்தோ இந்த பூமிக்கு வந்தவர்களல்ல. நம்மில் நம் குடும்பங்களில் இருந்து போன யாரோ ஒருவர் தானே காவலர்?  அப்படிப்பட்ட குடும்ப உறவுகளை எதிரிகளாக எதிர் திசையில் நிறுத்தி விமர்சிக்கும் சூழல் உருவானது எப்படி?  கை தட்டி உற்சாகப் படுத்த வேண்டிய இடத்தில் அதை செய்யாமலும் கண்டிக்க வேண்டிய இடத்தில் அமைதி காத்தும் நின்றிருந்த நாம் தானே உண்மைக் குற்றவாளிகள் ?

அஜீத்குமார் இறப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை எழுப்பியுள்ள கேள்விகளும் காட்டமான சுட்டல்களும் உத்தரவுகளும் அறிவுரைகளும் மிக ஏராளம்.  திருப்புவனம் பகுதியில் காவலர்களால் அடித்துப் படுகொலைமான அஜித்குமார் மீது வாய் வழிப் புகாரளித்த நிகிதா மீது குவியும் மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன 

2011-ஆம் ஆண்டில் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரிடம் ரூபாய்.11 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு

பச்சன் கோப்பன்பட்டியை சேர்ந்த வினோத் குமாரிடம் விஏஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி 

ஆலம்பட்டியை சேர்ந்த முத்துக்கொடிக்கு சத்துணவு வேலை வாங்கி தருவதாக ரூபாய்.2.5 லட்சம் மோசடி செய்ததாக புகார்

முருகேசன் என்பவரிடம் நூலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய்.2.5 லட்சம் மோசடி

செக்கானூரணி தேங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வத்திடம் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூபாய்.25 லட்சம் மோசடி எனப் புகார்

திருமங்கலத்தை சேர்ந்த தெய்வம் என்பவருக்கு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூபாய்.9 லட்சம் மோசடி எனப் புகார்திருமங்கலம் பச்சன் கோப்பன்பட்டியைச் சேர்ந்த வினோத் குமாருக்கு விஏஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் .7 லட்சம் மோசடி

திருமங்கலம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிகிதா மீது 17 பேர் புகார்  இதில் பலர் புகார் கொடுக்காமல் கடவுளிடம் முறையிட்ட பலர் வெளியே தெரியவில்லை.  நிவேதா என்ற இந்த மோசடிப் பெண் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகளை செய்து இவை அத்தனையும் வெளிவராத அளவுக்கு சம்பந்த பட்ட உயர் அலுவலர்களும் உடந்தையா இருந்திருக்கிறார்கள்.

அஜித் குமார் என்ற ஒரு உயிர் பலியான பின்னர் தான் இவையெல்லாம் வெளியே வருகிறது, அல்லது தெரிகிறது. மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருளால் தான் இவர் அடையாளப் படுகிறார் இவருக்கு தண்டனை நெருங்குகிறது. 

இப்போது இவர் தாவரவியல் துறை பேராசிரியராகப் பணிபுரியும் திண்டுக்கல் எம்.வி முத்தையா பிள்ளை அரசு கலை கல்லூரியில் இவரிடம் பயிலும் மாணவிகளிடம் தேவையற்ற வார்த்தைகளால் வசைபாடி தனது கொடூர முகத்தைக் காட்டியதில்

இவர் மீது கல்லூரி நிர்வாகம் தாண்டி 

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர் மாணவிகள்.

அதற்கும் நடவடிக்கை இல்லை என்று தெரியவருகிறது.மாணவிகளை தகாத முறையில் நடத்தியது, வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது, சக பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியது, கல்லூரி முதல்வருக்கு கட்டுப்படாதது போன்ற பல்வேறு அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில் நிகிதாவை இடமாற்றம் செய்யுமாறு அவரது துறையின் மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நிகிதா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மூலம் மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கைகள் எடுக்காமல் நிலுவையில் இருந்த இந்தப் புகார் இப்போது தான் கல்லூரிக் கல்வித்துறை விசாரணை நடத்தி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்கிறது அதுவும் ஊழல் தான். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் ஆன திருமாறன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: நிகிதா என்ற பெண்ணை 21 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர்கள் செய்த திருமண மோசடியில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். அப்போது நான் சிறிய ஆள். செல்வாக்கு கிடையாது. திருமணம் செய்து தாலி கட்டி ஓடிவிட்டு, வரதட்சணை வழக்கு போட்டு, குடும்பத்தை அலைக்கழித்தனர். ரூ.10 முதல் 20 லட்சம் பணம் வாங்கியுள்ளனர். 2004 ஆம் ஆண்டில் இது பெரிய பணம். மிரட்டி பணம் வாங்கி உள்ளனர். அனைவருக்கும் தெரியும். நான் தைரியமாக வெளிப்படையாக பேசக்கூடியவன். மற்றவர்கள் சொல்லவில்லை.அப்போதே என்னிடம் ரூபாய்.10 லட்சம் வாங்கிக் கொண்டு விவாகரத்து கொடுத்தனர். பெண் என்பதால், ஆராயாமல் வழக்கு போடுவதும், எழுதி கொடுப்பதை புகாராக எடுத்துக் கொண்டு அந்த கதையை நம்பி பல  குடும்பங்களை சித்ரவதை செய்கின்றனர். அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட வலி இன்று அஜித்குமார் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. இவர் நிகிதாவின் நான்காவது கணவர் அவருக்கு நிகிதா முதல் மனைவி  மற்ற கணவர் மூவரும் வாய் திறக்கவில்லை சிபிஐ விசாரணை முடிவில் அது வெளிவரும் ஆனால் இவர் வாய்மொழியாக சொன்ன புகாரால் அஜித்குமார் இறந்துள்ளார். பெண்களுக்கு தரும் பாதுகாப்பை அடிக்கடி தறவாக பயன்படுத்தி பல்வேறு தவறுகளை செய்துள்ளார். கேட்டால், படித்து இருக்கிறேன் என்பார்.

தாலி கட்டி ஓடி விடுவதுடன், வரதட்சணை புகார் கொடுப்பார். மேடையில் தொந்தரவு கொடுத்தனர். நகையை குறைவாக கொடுத்தனர் எனக் கேட்டதாக புகார் தெரிவிப்பார். அவரின் புகாரை படித்து பார்த்தால் சிரிப்பு தான் வரும். இவர்களை வெளியே வர விடக்கூடாது. கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.

இவர்களுக்கு காவல்துறையில் செல்வாக்கு உள்ளது. அது வரும் வழி தான் தெரியவில்லை. நிகிதாவின் தந்தை சப்லெக்டராக இருந்தவர். தாயாரும் அரசுப்பணியில் இருந்துள்ளார். இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவது, ஏமாற்றி வந்தனர்.

2004 ஆம் ஆண்டு அவருடன் எனக்கு திருமணம் நடந்தது. என் சார்பில் ஏராளமான வி.ஐ.பி.,க்கள் வந்தனர். அவர்கள் தரப்பில் 15 பேர் மட்டும் வந்தனர். திருமணம் முடிந்த அன்று இரவு பாலும் பழமும் சாப்பிடச் சென்ற இடத்திலிருந்து நிகிதா ஓடிவிட்டார்; அவரின் தந்தை பின்புற வழியாக ரூபாய்.10 லட்சம் வாங்கிக்கொண்டு தான் விவாகரத்து கொடுத்தனர். அன்று எனக்கு என்ன துன்புறுத்தல் இருந்ததோ, இன்னும் இருந்துள்ளது. எனது சகோதரர் வழக்கறிஞராக இருந்தும் எங்களால் சமாளிக்க முடியவில்லை. பல காவல்துறை அலுவலர்களின் ஆதரவு அந்தக் குடும்பத்துக்கு உள்ளது. எப்படி என்று தெரியவில்லை. அவர்கள் நகையை தொலைக்க வாய்ப்பில்லை. எனக் கூறினார்.நிகிதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 211 அல்லது அதற்கு ஈடான பிஎன்எஸ் சட்டப்படி நடவடிக்கை பாயும். மேலும் காவல்துறை நடத்திய நிகழ்வு என்பது புகார் இல்லை என்ற நிலையில் ஆய்வு செய்யாமல் காவல்துறை 35 பி நோட்டீஸ் வழங்காமல் அஜீத் குமாரை கூட்டிச்சென்று அடித்துக் கொலை செய்த லாக்கப் மரண வழக்கு கைது செய்யப்பட்ட காவலர்கள் உள்ளிட்ட இன்னும் பல குற்றவாளிகள் உண்டு என்ற நிலையில்  தண்டனை கிடைக்கும் .நீதி விசாரணையில் தப்பிக்க முடியாது அதன் பின்னர் சிபிஐ விசாரணை வரும் தெளிவு கிடைக்கும். ஆனால் அஜீத் குமார் மரணம் என்பதற்கு அரசு பாதிப்பை ஏற்படுத்திய குற்றவாளிகள் தரப்பில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் அரசியல் கட்சிகள் நீதி கிடைக்க போரட வேண்டுமே அன்றி ஆளாளுக்கு அரசியல் செய்து நிதி வழங்கக் கூடாது. நீதி மன்றத்தில் விரைவில் குற்றமிளைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் ... இப்போது நடப்பது ஜாதி அரசியல் அது தவறு என்பதுடன் காவல் துறை பணியாளர்களுக்கு முறையான சட்டப் பயிற்சியும் மனித உரிமைகள் குறித்த தெளிவான பார்வை குறித்து பயிற்சி மற்றும் நீதித்துறை குறித்து உரிய பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பது தான் இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...