காலஞ்சென்ற திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை
2023 ஆம் ஆண்டில் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில், 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டதில் ரூபாயா.75 லட்சம் செலவில் 1,817 சதுரடி பரப்பளவில் 4 அடி உயரத்தில் பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ளதை அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மு.கருணாநிதி சிலை அமைந்துள்ள இடத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். இந்த நிலையில் நேற்று அதிகாலை மு.கருணாநிதியின் சிலையில் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்தது. அதிகாலையில் சிலை வழியாகச் சென்றவர்கள் திமுக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்ததால் அங்கு குவிந்தனர். உதவிக் காவல் ஆணையர் அஸ்வினி, அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர் குழுவினரும் ஆய்வு செய்தனர். அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் டாக்டர் விஸ்வநாதான். (77 வயது) காது, மூக்கு, தொண்டை நிபுணர் மற்றும் டாக்டரானவர் சேலம் 5 ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் மட்டும் தனியாக காரில் வந்து கருப்பு பெயிண்ட்டை எடுத்துச் சென்று மு.கருணாநிதியின் சிலையின் மீது ஊற்றி விட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முதியவரான டாக்டரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதில் அவர் துணிச்சலுடன் கூறியதாவது
"நாட்டில் பசி பஞ்சம் பட்டினி, ஏழைகள் மதுபோதைக்கு அடிமையாகி வருவதாகவும், இந்த வேளையில் இந்த இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா? என நினைத்தேன். கருணாநிதி சிலையைப் பார்க்கும் போதெல்லாம் மனஅழுத்தம் ஏற்பட்டது. இதனால் 5 லிட்டர் கருப்பு பெயிண்டை வாங்கி வந்து ஊற்றியதாக" அவர் தெரிவித்துள்ளார். ஆக சேலம் பகுதி மக்கள் கோபம் டாக்டர் மூலம் வெளிப்பட்டது. சட்டப்படி அவர் செய்த செயல் தவறு ஆனால் அவர் கோபம் தீர அரசு நடவடிக்கை தேவை என்பதே பெரும்பாலான மக்கள் கருத்து.
கருத்துகள்