மதுரை மாநகராட்சியில் வீடு மற்றும் இதர கட்டிடங்களுக்கு ஊழல் மூலம் சொத்து வரியை குறைவாக
மதிப்பிட்டு நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகள் செய்ததாக குற்றம் தொடர்பாக மதுரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மதுரை மாநகராட்சியின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், மதுரை 3-வது மண்டலத்தின் தலைவர் பாண்டிச்செல்வியின் உதவியாளர் தனசேகரன், மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையரின் உதவியாளர் கார்த்திகேயன், லஞ்சம் வாங்கி மற்றும் ஊழல் நடவடிக்கைத் தரகர்கள் உசேன், ராஜேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் திமுக கட்சி சார்ந்த மண்டலக் குழுத் தலைவர்களான சரவணபுவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, சுவிதா ஆகியோர் மற்றும் அவர்களது கணவர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தினர். இந்த நிலை அறிந்து மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று ஜூலை மாதம் 7-ஆம் தேதி மாலை வந்தவர்களுடன் சட்ட மன்ற உறுப்பினர் தளபதி, திமுகவின் மாவட்டச் செயலாளர் . மணிமாறன் வந்தனர்.
சொத்து வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் என பலரிடமும் நான்கு மணி நேரம் விசாரணை நடத்திய அமைச்சர்கள் குழுவினர்
மதுரை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் விசாரணைக்கு அழைக்கப்படாத மண்டல குழு தலைவர் வாசுகி ஆகியோர் தங்களது பொறுப்பு ராஜினாமா செய்து கடிதங்களை அமைச்சர்கள் குழுவிடம் கொடுத்தனர். இதே போல நிலைக்குழுவின் உறுப்பினர்களான கண்ணன், மூவேந்திரன் ஆகியோரும் ராஜினாமா செய்து கடிதங்களைக் கொடுத்தனர்.
மேலும் மேயர் இந்திராணிக்கு அமைச்சர்கள் குழு கடும் எச்சரிக்கையை விடுத்திருப்பதாகவும். மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், கடந்த மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை எடுக்கப்டலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே சொத்துவரி ஏய்ப்பு விவகாரத்தில் தற்போது பொறுப்புக்களை ராஜினாமா செய்துள்ள மண்டலத் தலைவர்களில் 4 பேர்களின் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் . மதுரை மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி குறைவாக நிர்ணயிக்கப்பட்ட
வழக்கில் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் நடந்த விசாரணை முடிவில் ஓய்வுபெற்ற மாநகராட்சி உதவி ஆணையர், மண்டலம் 3 ன் தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் அலுவலர்களுடன் சேர்ந்து மண்டலத்தலைவர்களும் பல கோடி மோசடி செய்துள்ளார்கள் என்பது விசாரித்ததில் உறுதியாகியது.
மண்டலத்தலைவர்களை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்வது என்ன விதமான தண்டனையோ
திமுகவின் கட்சிகாரர்கள் என்பதால் தண்டிக்க அச்சமா? என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்தது இந்த நிலையில்
தமிழ்நாட்டில் முழுவதும் இத்தகைய ஊழல் மற்றும் தவறுகள் தொடர்ந்து நடக்கிறது. அங்கெல்லாம் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. ஆகவே இது தேர்தல் நேர நாடகமாகவே பார்க்கப்படுகிறது.
கருத்துகள்