இயக்குனர் ஒளிப்பதிவாளர் நடிகர் என தன் ஆளுமையை செலுத்தி தமிழ் திரைப்படங்களில் தனக்கென ஒரு இடம் பிடித்த வேலுபிரபாகரன் காலமானார் நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை 20 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
2009 ஆம் ஆண்டில் சே.எசு.கே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக தேவதாசி திரைப்படத்தை இயக்க சம்மதித்து கையெழுத்திட்டார். இப்படம் 16 ஆம் நூற்றாண்டின் காதல் கதையைச் சொல்வதாக திட்டமிடப்பட்டிருந்த படி படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இவர் முகமூடிக் கூத்து என்ற பெயரில் மற்றொரு திரைப்படத் திட்டத்தையும் பின்னர் முக்கிய வேடமேற்று நடிக்கும் கலைஞனின் காதல் என்ற மற்றொரு திரைப்படத் திட்டத்தையும் தொடங்கினார். படத்திட்டங்கள் தொடங்குவதில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததால் 2017 ஆம் ஆண்டு ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற திரைப்படத்தின் முன்னோடிக் காட்சி விளம்பரம் வெளியிடப்படும்வரை இவர் பல ஆண்டுகளாக
திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். பிரபாகரன் ஒரு காலத்தில் நடிகையும் இயக்குநருமான பி. ஜெயதேவியை மணந்தார். பின்னர் தான் இயக்கிய காதல் கதை (2009) திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த செர்லி தாசை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தன் அறுபது வயதில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலுப்பிரபாகரன் அறிவித்தார். நடிகை சில்க் ஸ்மிதா இவரது கட்டுப்பாட்டில் சிலகாலம் இருந்த நிலையில்
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த வேலு பிரபாகரன், தனது 68வது வயதில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அதிகாலையில் இறந்தார்.
மேலும் தகவல்கள் தொடர்பு கொள்ள: இராஜஙேலு : 9848847761 ஜெகதீஷ் : 9597776288 தகவல் உதவி : கோவிந்தராஜ் PRO
கருத்துகள்