சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பிலுள்ள கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், தெலுங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர, ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, கர்நாடகா மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விபு பக்ரூ, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அசுதேஷ் குமார், பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விபுல் மனுபாய் பஞ்சோலி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தர்லோக் சிங் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இராமச்சந்திர ராவ், திரிபுரா மாநிலத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்