உலகப் புராதனச் சின்னமான செஞ்சிக்கோட்டை
சரபோஜி வழியில் ஏகோஜி வெங்கோஜி, ராஜா தேசிங்கு வந்து தஞ்சாவூர் வரை ஆண்ட மராட்டிய வழியில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ! சுயராஜ்யத்தின் உருவகம், ஹிந்து சாம்ராஜ்யத்தின் சிற்பி, இன்று, அவரது மரபு உலகளவில் எதிரொலிக்கிறது. மராத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் ராணுவத் தளங்களில் தமிழ்நாடு செஞ்சி கோட்டை உள்ளிட்டவை ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரியம் முயற்சியால் இன்று, பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் (WHC) 47வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
செஞ்சி கோட்டை , இப்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பாரதத்தின் பாரம்பரியத்திற்கு ஒரு வரலாற்று வெற்றி!இந்தியாவிலுள்ள மராட்டிய அரசின் 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. மகாராஷ்டிராவில் 11 மற்றும் தமிழ்நாட்டில் 1 என மொத்தம் 12 கோட்டைகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை இடம் பெற்றுள்ளது.
இந்தியாவிலுள்ள மராட்டிய அரசின் 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. இராஜா தேசிங்கு அல்லது இராஜா தேஜசிங் என்பவர் சொருப்சிங்கின் வீர மகனாவார். பொந்தில் ராஜ்புத் வம்சாவளியானவர் பொது ஆண்டு 1714 ல் செஞ்சி பகுதியை ஆட்சி செய்தார்.
1677 ஆம் ஆண்டு முதல் மராத்தியர் வசமிருந்த செஞ்சிக் கோட்டையை முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலி கான் தலைமையில், ஆற்காடு நவாப், மதுரையின் விஜயநகர நாயக்கர் வழி வந்த ராணி மங்கம்மாள் ஆகியோர் இணைந்து, 1690 செப்டம்பரில் செஞ்சியை முற்றுகையிட்டனர். எட்டாண்டுகள் நீடித்த முற்றுகையின் முடிவில் 1698 ஆம் ஆண்டில் செஞ்சிக் கோட்டை முகலாயர் வசம் வந்த பிறகு கோட்டையின் தலைவராக புத்தோல்கண்ட் ராஜ்புத் இனத்தவரான சரூப் சிங்கை நியமித்தார். இவரது மகன் தான் தேசிங்கு ஆவார்.தேசிங்கு ஆற்காடு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆற்காடு நவாப் சையத் உலுக்கான்-I 1714 ஆம் ஆண்டு செஞ்சி மீது படையெடுத்தார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கியப் போர் நடந்தது.
தேசிங்குராஜன் வீரமாக அவருடைய "நீலவேணி" என்னும் குதிரையுடன் போரிட்டார். அவருக்கு முகமது கான் என்ற நண்பர் தன்னுடைய "பஞ்ச கல்யாணி" என்ற குதிரையுடன் உதவினார். நவாப்பின் 8,000 குதிரை வீரர்களைக் கொண்ட படையை எதிர்த்து தேசிங்கு ராஜனின் 350 குதிரைவீரர்கள் கொண்ட படை போரிட்டது.அப்போது பீரங்கிக் குண்டுகள் பொழிய, நடந்த போரில் நீலவேணி எனும் குதிரை கால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டது. தன்னை எப்படியும் கொன்று விடுவார்கள், முதுகில் குண்டு பாய்ந்து இறந்தால் புறமுதுகுகாட்டி ஓடிய மன்னன் என வரலாறு சொல்லும் என கருதிய ராஜா தேசிங்கு, தன் வாளை வானத்தில் எறிந்து மார்பைக்காட்டி வீரமரணமடைந்தார்.
18 வயதேயான தேசிங்குராஜன் போரில் மரணமடைந்து அவரது குறுகிய கால ஆட்சி வீழ்ந்தது. ஆற்காடு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் புதிதாய் திருமணமான மனைவி ராணிபாய் உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆற்காடு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆற்காட்டுக்கு அருகில் உருவாக்கினார்.
வீரமரணமடைந்த ராஜா தேசிங்கின் உடலை அப்படியே விட்டுவிட்டுச் செல்லாத ஆற்காடு நவாப் சையத் உலுக்கான், மூலம் செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். தேசிங்கு மற்றும் அவரது படைதளபதி முகமது கான் ஆகியோரின் சமாதிகள் நீலாம்பூண்டி எனும் சிற்றூரில் உள்ளது. செஞ்சி துருகத்தை அதாவது கோட்டையை ஆளும் தேரணிராஜன், டில்லி பாதுஷாவிடமிருந்த தெய்வலோகப் புரவியை அடக்குவதில் தோல்வி கண்டு, முன்பே ஒப்புக்கொண்ட நிபந்தனையின்படி சிறையிலடைக்கப்படுகிறான். செஞ்சியில் பிறந்து வளர்ந்த தேசிங்கு தனது ஐந்தாவது வயதில் நண்பன் மவுத்துக்கானுடன் டில்லி சென்று, அரங்கனின் அருளால் புரவியை அடக்கித் தந்தை தேரணி சிங்கைச் சிறைமீட்டு, பாதுஷாவிடம் குதிரையும் பொன்னும் பரிசுகளாகப் பெற்றுத் திரும்புகின்றான்.தேசிங்கு எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போது அவன் பெற்றோர் இறந்து விடுகின்றனர். தேரணிசிங்கின் தம்பி தரணிசிங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தேசிங்கை வளர்க்கிறான். தேசிங்கு தன் பதினெட்டாவது வயதில், செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பில் அமர்கின்றான். - விளம்பரம்-
-விளம்பரம்- அப்போது மத்திய அரசனான டில்லி பாதுஷா வரி செலுத்தும்படி ஆர்க்காட்டு நவாபுக்கு ஆணை அனுப்பவே நவாபு தன் ஆளுகைக்கு உட்பட்ட கோட்டைத் தலைவர்களுள் செஞ்சியை ஆளும் தேசிங்கு பன்னிரண்டு ஆண்டுகள் வரிப்பணம் கட்டவில்லை என்பதை அறிந்து, பணத்தை உடனே கட்டும்படி தோற்றமல்லன் என்பவன் மூலம் ஆணை அனுப்புகிறான். தேசிங்கு அதைக் கேள்வியுற்று தன் வளர்ப்புத்தந்தை தரணிசிங்கிடம் கூறுகிறான், தரணிசிங் ஆளையனுப்பித் தோற்றமல்லனை வரவழைக்கிறான். “நவாபுவைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன்” என்று தோற்றமல்லனிடம் ஓலை கொடுத்து அனுப்புகிறான் தேசிங்கு. ஓலையில், “ஆண்பிள்ளையானால் நவாபுசாயபை இங்கே வரச் சொல்லும் அசல் பெண் பிள்ளையானால் நவாபுசாயபை அங்கே இருக்கச் சொல்லும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் சண்டைக்கு வரச் சொல்லும்” என்று எழுதப்பட்டிருந்தது கண்டு கோபமுற்ற நவாபு தன் ஆட்சிக்குட்பட்ட பாளையக்காரர்கள் அனைவரையும் திரட்டிக்கொண்டு, செஞ்சிக்கு அருகிலிருக்கும் தேவனூரில் தங்குகிறான். படைகளின் வருகையை, பூஜை செயயும், தேசிங்கிடம் தரணிசிங் கூற, 'அரைக்கால் நாழி பொறு, பின்வந்து அவர்களைப் பத்தல் பத்தலாய்க் கிழிக்கிறேன்’ என்று கோபமாய்ப் பதிலளிக்கிறான். தேசிங்கின் படை வருவதற்கு முன் ‘சுபங்கிதுரை’ என்பவன் தேவனூரின் உள்ளே நவாபின் அனுமதியுடன் புகுந்து கொள்ளையடிக்கிறான். பாதிக்கப்பட்ட மக்கள் தேசிங்கிடம் முறையிடுகின்றார்கள்.வரிப்பணம் செலுத்தி நவாபுடன் சமாதானம் செய்து கொள்ளலாம் எனக் கூறிய தரணிசிங்கின் அறிவுரையைப் புறக்கணித்து, வழுதாவூரிலிருக்கும் தன் நண்பன் மாவுத்துக்கானுக்குச் செய்தி அனுப்புகின்றான் தேசிங்கு. திருமணக் கோலத்திலிருந்த அவன் திருமணச் சபையில் உள்ளவரை வணங்கி, விடை கொடுத்து அனுப்புமாறு கேட்கிறான். அவன் தாயார் ‘கங்கணம் கட்டியபின் சண்டைக்குப் போனால் குண்டுபாயுமடா மகனே’ என்று கூறி அழுகிறாள். செஞ்சிக்கோட்டை என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வரும் ஒரு பெயர் தேசிங்கு ராஜா ஆகும். ஊர்களில் திண்ணைகளில் அமர்ந்தபடி பாட்டி சொல்ல தேசிங்கு ராஜா கதை கேட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
16-17ஆம் நூற்றாண்டுகளில் செஞ்சிக்கோட்டையை தேசிங்கு ராஜாவும் அவரது உற்ற நண்பரும் தளபதியுமான மெஹபூப் கான் என்னும் மாவுத்துக்கானும் ஆட்சி செய்திருக்கின்றனர்.
தேசிங்கு ராஜாவுக்கு பிறகு செஞ்சியை ஆண்ட அவரது மகன் ஸ்வரூப் சிங் ஆற்காட்டு நவாபுக்கு எதிரான போரில் வீர மரணமடைந்திருக்கிறார்.
1714 ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப்புகள் வசம் செஞ்சிக்கோட்டை போய் விட்டாலும் தேஜ் சிங் என்னும் தேசிங்கு ராஜன் நாட்டுப்புற கதைகள் மற்றும் பாடல்கள் வழியே இன்றும் மக்களிடையே வாழ்கிறார். தமிழ்நாட்டில் வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு, பல இடங்களில் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆனது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக உள்ளது.
செஞ்சிக் கோட்டையை, 13 ஆம் நூற்றாண்டில் தேவகிரி ஆண்ட யாதவர்கள் எனும் கோனார்கள் வம்சம் சார்ந்தவர்கள் கட்டத் துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டுகள் கோட்டையை விரிவுபடுத்தினர்.
இந்தக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
ஜைனர்கள்
செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்
கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.
பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்கு தெற்கில் பனமலை பகுதியில் ஒரு கோவில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகைக் கோயில் உருவாக்கப்பட்டது இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 ஆம் ஆண்டு பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்காலக் கோவில் முலம்
செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்கிறது. தற்போது நாடோடி நரிக்குறவர் மக்கள் மராட்டிய வழி வந்த வன விலங்குகள் வேட்டை நடத்திய புலம் பெயர்ந்த படை வீரர்கள் தான் அது குறித்து வரலாறு உண்டு
கருத்துகள்