மடப்புரம் அஜித்குமார் கொலை குறித்து சி.பி.ஐ. சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணை அலுவலராக துணைக் கண்காணிப்பாளர் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார்.
இவர் பல மாநிலங்களில் முக்கியமான சில வழக்குகளை விசாரித்தவர் . வழக்கு விசாரணையை அதிகாரபூர்வமாக தன் துவங்கியுள்ளவர்
விசாரணையை நடத்த துணைக் கண்காணிப்பாளர் மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அலுவலர்கள் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தவர்களுக்கு மதுரையிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
மதுரையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அலுவலர்கள் குழுவினர் நேற்று முதல் விசாரணையை முறைப்படி துவங்கினர். முன்னதாக தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மதுரை, சிவகங்கை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களிடம் சி.பி.ஐ. அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் பிற்பகலில் திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர். மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அளிக்கப்பட்ட நீதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அஜித்குமாரின் பெற்றோர், சகோதரர், நண்பர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள், நகை மாயமானதாக புகார் தெரிவித்த நிகிதா மற்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் என பட்டியலிட்டு சி.பி.ஐ. தரப்பில் விசாரணை நடத்த உள்ளார்கள்.
அதற்கு முன்னதாக அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் டெல்லியிிருந்து வந்த அலுவலர்கள் உடன் மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ளவர்களும், உதவியாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
தற்போது, சி.பி.ஐ. வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் எதிரே அறநிலையத்துறைக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்திலுள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது இனி நிகிதா மீதான மோசடி புகார்கள் மொத்தமும்
திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திடம் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ11 லட்சம் மோசடி
ஆலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கொடியிடம் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ2.50 லட்சம் மோசடி
மதுரை செக்கானூரனி செல்வத்திடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி
திருமங்கலம் தெய்வத்திடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி
பச்சன்கோப்பன்பட்டி வினோத் குமாரிடம் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடிமதுரை தென் இந்திய பார்வார்டு பிளாக் நிறுவனர் திருமாறனை திருமணம் செய்வதாக நடித்து திருமணமான இரவே ஓடிப் போனவர் நிகிதா. பின்னர் திருமாறனுக்கு விவகாரத்து தருவதற்காக அவரிடம் ரூ10 லட்சம் மோசடி. இதேபோல பலரையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு பின்னர் விவாகரத்தில் கையெழுத்து போட பணம் பெற்று மோசடி செய்துள்ளார் நிகிதா. இது குறித்த தீர்வு இந்த விசாரணை முடிவில் வெளிவரும்
கருத்துகள்