மதுரை ரயில்வே கோட்டத்தில் பல பகுதிகளில் பொறியியல் பணி மேற்கொள்வதால் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.
18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16848) விருதுநகரிலிருந்து மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சிராப்பள்ளி வந்து மயிலாடுதுறைக்குச் செல்லும். அந்த நாட்களில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாகச் செல்லாது.
அதுபோல கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்:12666) 19- ஆம் தேதி விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சிராப்பள்ளி வந்து செல்லும். அன்று மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாகச் செல்லாது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 17- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (எண்:16788) திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு புறப்படும். அன்று அந்த ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை வழியாகச் செல்லாது.
மேலும் குருவாயூரிலிருந்து 17- ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாகச் செல்லாது.
அதுபோல் 18-ஆம் தேதி காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (எண்:07229) விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி வந்து செல்லும். அன்று மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாகச் செல்லாது.புறப்படும் நேரம் மாற்றம்
மேலும் 20- ஆம் தேதி காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (எண்:16352) விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி வழி செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லாது.
நாளை (புதன்கிழமை) மதுரையிலிருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட வேண்டிய கச்சிக்குடா சிறப்பு கட்டண ரெயில் (எண்:07192) 80 நிமிடங்கள் தாமதமாக பகல் 12 மணிக்கு புறப்படும். வருகிற 18- ஆம் தேதி காலை 9.10 இராமேசுவரத்திலிருந்து சரளப்பள்ளி சிறப்பு கட்டண ரயில் (எண்:07696) 9 மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்படும்.
இத் தகவலை திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்தார்.


கருத்துகள்