பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் டாக்டர் இரா.அன்புமணி 2026 ஜூன் வரை தொடர்வார் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில்
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாநகர் (மேற்கு) சட்டமன்றப் பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை மற்றும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை. என்றும்
அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30- ன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கடநங 02.07.2025 ஆம் தேதி புதன்கிழமை முதல் இரா. அருள் அவர்கள் நீக்கப்படுவதாகவும். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸின் தீவிர ஆதரவாளரான சட்ட மன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டார். ஆனால், அருளை நீக்க வேண்டுமானால் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், பா.ம.க., சட்டசபை கொறடாவாக அருளே தொடர்வார் என்றும் மருத்துவர் ச.ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், பா.ம.க., கொறடா பொறுப்பிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் இரா. அருளை நீக்க வலியுறுத்தி அன்புமணி ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்டசபைச் செயலாளரிடம் மனுக் கொடுத்தனர். கட்சியின் தலைவர் டாக்டர் இரா.அன்புமணி அளித்த பரிந்துரைக் கடிதத்தை, பா.ம.க., சட்ட மன்ற உறுப்பினர்கள் கள் வெங்கடேஷ்வரன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் சட்ட மன்றப்பேரவைச் செயலாளரிடம் வழங்கினர்.
போட்டியாக, பா.ம.க.,வின் கொறடாவாக தானே தொடர்வேன் என்றும் மருத்துவர் ச.ராமதாஸின் ஒப்புதல் கடிதத்தோடு, சபாநாயகரை சட்ட மன்ற உறுப்பினர் அருளும் சந்திக்கிறார். இந்த நிலையில், பா.ம.க.,வின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்கக் கோரி, தலைவர் மருத்துவர் இரா.அன்புமணி தரப்பு சட்ட மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே பாலு உடன் சென்று சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் மனு அளித்தனர். .. இதில் பொது நீதி யாதெனில்: ஜி.கே.மணி தரப்பில் ஆதரவாளர்கள் சேர் விடாமல் தந்தை டாக்டரும் மகன் டாக்டரும் இருவரின் ஆதரவாளரான இரா.அருளை வைத்து ஒரு நாடகம் ஜி.கே.மணியை கட்சி நடவடிக்கைகள் செய்ய முடியாமல் தடுக்க ஒரு சரியான அரசியலை கையில் எடுத்துள்ளதை அரசியல் சாணக்யர்கள் மட்டுமே அறிவார்கள்... அருள் இருதரப்பு அருளைப் பெற்றவர் என்பதை நாம் அறிவோம். இங்கு நடப்பது ஜிகே.மணிக்கு வைக்கப்பட்ட செக் எனப் பாருங்கள்
கருத்துகள்