நாம் தமிழர் கட்சி சீமான் உடன் பக்கத்தில கருப்பு சட்டை அணிந்து நிற்பவர் தான் தீரன் திருமுருகன்.. இவர் யார் தெரியுமா!?
மேய்ச்சல் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு விலக்கி ஆடு மாடு மேய்க்க உரிமை வேணும்.,காடு எங்கள் நிலம்னு ஆடு மாட்டை கூட்டி வச்சு கூட்டம் நடத்திக்கிட்டு இருந்தாரே..அதுக்கு காரணமே இந்த நபர் தான், ஆனால்
2022 ஆம் ஆண்டு மேகமலை சரணாலயத்தில ஆடு மாடுகள் மேய்க்க போனா வனத்தோட அடிப்படையே மாறிடும்னு வழக்குப் போட்டு ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியதே இந்த நபர் தான். இப்போது 2025 ஆம் ஆண்டில் ஆடு மாடுகள் மேய்க்கணும்னு போராட்டம் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி. அதுக்கு திரள்நிதி வேறு வசூல் நடக்கிறது. அயல் நாட்டு நபர்கள் அரசியல் கட்சி என்பதால் கணக்கில் வராமல் பணம் நன்கொடைகள் வழங்கும் நிலையில் இந்தப் போராட்டம் என்பது கிராமத்து பேச்சு நடைமுறையில் கூற வேண்டுமானால் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் சீமான் கட்சி என மேகமலை வசிக்கும் பழங்குடி மக்கள் பேசுகின்றனர்.இது குறித்த ஒரு மறந்து போன மக்களுக்காக கடந்த காலப் பார்வை :- வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாதென வனத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை உயர் நீதிமன்றத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.திருமுருகன் என்ற தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் மேகமலை வனவிலங்கு மற்றும் சரணாலயத்தில் வனவிலங்கு காப்பாளர், தேனி வனச்சரக மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு வன சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், வன பாதுகாப்பு சட்டத்தின் விதிகளையும் மீறுவதாகும். எனவே மேய்ச்சலுக்கு கால்நடைகளை வனப்பகுதிக்குள் செல்வதற்கு தடை வேண்டுமென கோரியிருந்த
மனு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்வதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வனத்துறைக்கு உத்தரவிட்டனர். இது அறியாமல் மேய்ச்சல் நிலம் மீது திடீர் பரிவு காட்டும் அரசியல் ஏதோ ரியல் எஸ்டேட் மோதலாகவே பார்க்கும் நிலை உள்ளது
கருத்துகள்