2017-ஆம் ஆண்டில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் உள்ள நாட்டில் பணிக்குச் சென்ற கேரளா பெண்
நிமிஷா பிரியா அந்த நாட்டின் பிரஜையான மஹதி என்பவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்டை) மீட்க நிமிஷா பிரியா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்தால் மஹதி உயிரிழந்தார். அவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷா பிரியாவுக்கு ஜூலை மாதம் 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. இந்த நிலையில் அந்தத் தண்டனையை தள்ளி வைத்தனர் கிராண்ட் முப்தி அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏமன் அரசிடமிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. வெளிவிவகார அமைச்சகம் ஜூலை 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்குவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ஏமனில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு செவிலியர் பிரியாவின் குடும்பத்திற்கு உதவுவதற்காக அமைச்சகம் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது ஏமன் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்சாமுவேல் ஜெரோம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் சிறை அலுவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலக நபர்களுடன் தனிப்பட்ட முறையில் இத்தகவல் குறித்து சரிபார்த்தேன். அதன்படி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது." என தெரிவித்தார்.
மாறாக, கொலையானவரின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி தனது சட்டப்பூர்வ உரிமையை முறையாகப் பயன்படுத்தி, ஏமன் சட்டத்தின்படி மரண தண்டனையைத் தொடர அரசாங்கத்துக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்றும் சாமுவேல் ஜெரோம் கூறினார்.
"நீதி என்பது ஒரு விளையாட்டல்ல, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் குரல் கேட்கப்பட்டு, அது மதிக்கப்பட வேண்டும்." என சாமுவேல் ஜெரோம் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்