தர்மஸ்தலா விவகாரத்தில் பொய்ப் புகாரளித்த சின்னையா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
தர்மஸ்தலா வழக்கில் டில்லியில் சின்னையாவைச் சந்தித்த நபர் யார்?
தர்மஸ்தலாவிலிருந்து மண்டை ஓடுகளை டில் லிக்கு கொண்டு சென்றதாகக் கைதான சின்னையா, அளித்த ‘பகீர்’ வாக்கு மூலம்.
கர்நாடகா மாநி லம், தட்சிண கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப் பட்டதாக 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக் கப்பட்டதாகக் தகவல் கூறப்பட்ட வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு க்குழு
விசாரித்து வருகிறது.
மேற்கண்ட வழக்கில் பொய் புகார் அளித்த மாண்டியா மாவட்டத்தில் சிக்கப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னையா, (வயது 53) என்பவர் இரண்டு நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து, எஸ்.ஐ.டி., அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்னையா அளித்த வாக்குமூலம் குறித்து எஸ்.ஐ.டி., காவல் துறையினர் தரப்பில் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் இருந்த சின்னையாவை, ஒரு கும்பல் தர்மஸ்தலாவுக்கு அழைத்து வந்து, வனப்பகுதியில் போலியாக ஒரு மண்டை ஓடு, சில எலும்பு கூடுகளைப் புதைத்துள்ளது.
இன்னொரு மண்டை ஓடு, எலும்பு கூடுக ளுடன் தர்மஸாலாவிலிருந்து டில்லிக்கு, சின்னையாவை காரிலேயே அழைத்துச் சென்றுள்ளனர்.
டில்லியில் அவரை ஒரு வர் சந்தித்துள்ளனர். அவர், சின்னையாவிடம் நீதிமன்றத்தில் எப்படிப் பேசவும் காவல் துறை முன் எப்படி நடந்து கொள்ள
வேண்டுமெனப் பயிற்சி கொடுத்துள்ளார்.
பின்னர், சின்னையாவை டில்லியிலிருந்து தர் மஸ்தலாவுக்கு அழைத்து வந்து புகார் கொடுக்க வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது போன்று தர்மஸாலா சென்று மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, பொய்ப் புகார் அளித்த சுஜாதா பட் டையும், ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர். விமானங்கள் முடிவில் உண்மை வெளிவரும்






















கருத்துகள்