உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இதில் பலர் சிக்கி உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள். சாமோலி மாவட்டத்தில் ஹெலாங் அருகில் விஷ்ணுகாட் நீர்மின்சாரத் திட்ட தளத்தில் நிலச்சரிவில் 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர் உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் நிலச்சரிவில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். பித்தோராகர் மாவட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் புதையுண்டனர், நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ITBP மற்றும் NDRF படைவீரர்கள் ஈடுபட்டனர் உத்தரகண்டில் நிலச்சரிவு குறைப்புக்கான ரூபாய் 125 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மற்றும் முதல் கட்டமாக ரூபாய் 4.5 கோடியை விடுவித்துள்ளதாக உயர் அலுவலர்கள் டெல்ஹ்ராடூனில் தெரிவித்தனர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை வரவேற்ற முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "மாநிலத்தின் பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிலச்சரிவுகளுக்கு நீண்டகால தீர்வைக் கண்டறிவதற்கான ஒரு தீர்க்கமான முயற்சியாக இந்தத் திட்டமுள்ளது" என்றார்.நிலச்சரிவுகளால் அடிக்கடி பாதிக்கப்படும் ஐந்து உணர்திறன் வாய்ந்த இடங்கள் இந்த திட்டத்திற்காக முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், மாநிலத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு நீண்டகால தீர்வு காணப்படும் என்று மாநில உயர் அலுவலர்கள் நம்புகின்றனர்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், டேராடூனில் உள்ள உத்தரகண்ட் நிலச்சரிவு தணிப்பு மற்றும் மேலாண்மை மையமும் திட்டங்களைத் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தன, அதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், உள்துறை அமைச்சகமும் ரூபாய் 125 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தன.
ஆய்வுப் பணிகளுக்காகவும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காகவும் முதல் கட்டமாக ரூபாய் 4.5 கோடி முன்பணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. கடந்த 16 ஜூன் 2013 அன்று உத்தரகண்ட் கேதர்நாட்டில் மழை வெள்ளம் பயங்கரமான பேரழிவை உண்டாக்கியது.
கேதார்நாட்டில் சுமார் இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் இறந்தனர். இந்த பயங்கர பேரழிவு மூன்று நாட்கள் நீடித்தது. கேதார்நாட்டில் சிக்கிகொண்ட ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் பாதையில் ஏற்பட்ட மண் சரிவில் உள்ளே சிக்கி விட்டனர்.
17 நாட்களாக அவர்களை மீட்க்கும் பணி இடைவிடாது நடந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்