பாரதப் பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வருகை தந்தார்.
சுமார் ரூபாய்.7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் பாதையை தொடங்கி வைத்தார்
ரூபாய்.15,610 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ கட்டம்-3 திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று மாலையில் 3 வந்தே பாரத் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பிரதமர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இன்று கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் பயணம் மேற்கொண்டார்
பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் பாதையை பிரதமர் தொடங்கி வைத்தார் ரூபாய்.7160 கோடி மதிப்பிலான
பெங்களூரு மெட்ரோவின் 3வது கட்டத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் ரூபாய்.15,610 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோவின் மூன்றாவது கட்டத் திட்டத்திற்கு
பிரதமர் அடிக்கல் நாட்டினார் பெங்களூருவிலிருந்து 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10 ஆம் தேதி இன்று கர்நாடகாவிற்கு வருகை தந்தார். பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் காலை 11 மணியளவில் 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு, பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்து, ஆர்.வி. சாலை (ராகிகுடா) முதல் எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார்.
பிற்பகல் 1 மணியளவில், பெங்களூருவில் நகர்ப்புற இணைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர். பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுகிறார்.
பெங்களூரு மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆர்.வி. சாலை (ராகிகுடா) முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் நீளம் 19 கி.மீ.க்கும் அதிகமாகும். இதன் 16 நிலையங்கள் சுமார் ரூ.7,160 கோடி மதிப்புடையவை. இந்த மஞ்சள் வழித்தடம் திறக்கப்பட்டதன் மூலம், பெங்களூருவில் செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க் 96 கி.மீ.க்கும் அதிகமாக அதிகரித்து, இந்தப் பகுதியில் உள்ள பெரும் மக்களுக்கு சேவை செய்யும்.
பிரதமர் ரூபாய்.15,610 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பெங்களூரு மெட்ரோ கட்டம்-3 திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவார். இந்த திட்டத்தின் மொத்த பாதை நீளம் 44 கி.மீட்டருக்கும் அதிகமாக இருக்கும், இதில் 31 உயர்நிலை நிலையங்கள் இருக்கும். இந்த உள்கட்டமைப்பு திட்டம் குடியிருப்பு, தொழில்துறை, வணிக மற்றும் கல்வி பகுதிகளுக்கு நகரத்தின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும்.
பெங்களூருவிலிருந்து 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூருவிலிருந்து பெலகாவி, அமிர்தசரஸ் முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் நாக்பூர் (அஜ்னி) முதல் புனே வரையிலான ரயில்கள் இதில் அடங்கும். இந்த அதிவேக ரயில்கள் பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும்.





கருத்துகள்