பொது வாழ்விலோ பணியிலோ உள்ள நபர்கள் கைதாகி, 30 நாட்கள் சிறையிலிருந்தால் பதவி நீக்கம் புதிய சட்டத் திருத்தம்
பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, 30 நாட்கள் சிறையில் இருந்தால்
அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்; மக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.இந்திய அரசு கொண்டு வரம் புதிய சட்டத்திருத்தத்தில், ஒரு நபர் 30 நாட்களுக்கு மேல்
சிறையிலிருந்தால், அவர் வகிக்கும் பதவியை இழக்க வேண்டும் எனும் விதி உள்ளது. இது பொது வாழ்வில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இருவருக்குமே பொருந்தும்.
இந்தப் புதிய சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் இதன் மூலம், குற்றவியல் வழக்குகளில் விரைவான தீர்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்படும் ஒருவர், தனது பதவியை தாமாகவே இழப்பார் என்ற விதி, பொது வாழ்வில் தூய்மையை நேர்மையைப் பேணுவதற்கும், குற்றவாளிகள் பதவியில் நீடிப்பதனை அருகதை இல்லை ஆகவே அதைத் தடுப்பதற்கும் கொண்டுவரப்படுகிறது.
அதில் சில முக்கிய விதிகள்: பொதுப் பிரதிநிதிகள்:நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றவர்கள் 30 நாட்களுக்கு மேல் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் பதவியை தாமாகவே இழப்பார்கள்.
அரசு ஊழியர்களும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் தங்கள் பதவிகளை இழப்பார்கள்.
இந்த விதி, குற்றவியல் வழக்குகளில் விரைவான தீர்ப்புகளை வழங்குவதை ஊக்குவிக்கும்.
இந்த விதி, பொது வாழ்வில் தூய்மையை பேணுவதற்கும், ஊழலை தடுப்பதற்கும் உதவும்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் 30 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பது அவர்களின் பதவியை மற்றும் பணியை பறிக்க வழிவகுக்கும். இதை முன்தேதியிட்டு அமல்படுத்த வழி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதே. இதில் மையக் கருத்து. இதேபோல் எத்தனையோ ஊழல் வழக்குகள் நீதி மன்றத்தில் மற்றும் லோக் ஆயுக்தாவில் தீர்வு காணப்படாமல் பல வருடங்களாக நிலுவையில் உள்ளன அதை கணக்கில்கொள்ளாத நீதி மன்த்திற்க்கு மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்களும், குடியரசுத் ததலைவரும் உடனடி தீர்வுகாணவேண்டும் என உத்தரவு இடுவதற்க்கு எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது என மூத்த வழக்கறிஞர்கள் தரப்பில் வாதம் எழுகிறது.
மோசமான சூழலால் தலையிட நேர்த்தது என்பதெல்லாம் கட்டுக்கதையாகவே பார்க்கும் நிலையில் இதைவிட மோசமான சூழலில் உள்ள வழக்குகள் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தீர்வுகாணாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு தீர்வு வந்தால் தான் பொது வாழ்வில் உள்ள நபர்களுக்கு மக்கள் மீதான பயமும் மரியாதையும் வரும்அரசு சார்ந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு காவலில் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாநில அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கவுன்சிலில் உள்ள மந்திரிகள் மற்றும் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் ஆகியோரை அகற்றுவதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்ற மக்களவையில் மூன்று மசோதாக்களை தாக்கல் செய்து பேசுகிறார்
எந்தவொரு அமைச்சரும், பதவியில் இருந்த போது, நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முப்பது நாட்களாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றால் இந்தக் குற்றம் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கிறது -இது நிறைவேற்ற மாநிலத்தின் ஆளுநரால் பதவியில் அவர் இருந்து அகற்றப்பட வேண்டும், மேலும் ஆளுநர் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும்,









கருத்துகள்