கோயமுத்தூரில் ரூபாய்.50,000 லஞ்சம் பேரூர் தாசில்தார் மற்றும் உதவியாளர் கைது .
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தாலுகாவில் ரமேஷ் குமார் தாசில்தாராக இருந்த நிலையில் ரஞ்சித் குமார் என்பவர் சால்வண்சி சான்றிதழுக்கு வங்கியில் பணம் செலுத்தி
விண்ணப்பித்திருந்தார்.இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் துவங்கி வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பலரும் ஒப்புதல் அளித்த பின்னரும், இறுதி ஒப்புதல் அளிக்காமல் ஆவணங்கள் பரிசீலனை செய்து சான்றிதழ் வழங்காமல்
மேற்கண்ட கோப்பை லஞ்சம் எதிர்பார்த்து தேக்கம் செய்திருந்தது. குறித்து ரஞ்சித் குமார், தாசில்தார் ரமேஷ் குமாரை அணுகிக் விசாரித்த போது ஆவண விடுவிப்புக்கு ரூபாய்.50,000 லஞ்சமாக கேட்டதாகவும். மேலும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று டிபார்ட்மெண்ட் வைத்துக் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகினார். அப்போது அரசு சாட்சிகள்
முன்னிலையில் புகார்தாரர் கொண்டு வந்த பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அதை லஞ்சம் கேட்ட தாசில்தாரிடம் கொடுக்குமாறு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அனுப்பினர்.
அதன்படி ரஞ்சித் குமார், ரமேஷ் குமாரிடம் பணத்தைக் கொடுக்க முயன்றார். அப்போது ரமேஷ் குமாரின் உதவியாளர் சரவணன் லஞ்சப் பணத்தை வாங்கி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் படி கூறினார். பணம் கொடுக்க முயன்ற போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சட்டென நுழைந்து பணத்தை கைப்பற்றினர்.
லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில் சிறையில் சேர்த்தனர்








கருத்துகள்