தேவகோட்டையில் நடந்த சுதந்திரப் போராட்டக் களம் ஆகஸ்ட் புரட்சி 78 பேரை படுகொலை செய்த நிகழ்வுகள் நினைவு
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் நிகழ்ந்த ஆகஸ்ட் புரட்சியில் உத்தமர் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் நாளான இன்று தேவகோட்டையில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 78 பேர் பலியானார்கள். அதை யாரும் நினைவு கூறவில்லை அதனால் தான் வரலாறு அறியாத பலரும் தற்போது தமிழ்நாட்டில் வாழும் நிலை என்று கூறுகிறோம். ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி 1942 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ஆணைக்கிணங்க சுதந்திரப் போராட்டம் நாடெங்கிலும் இந்திய தேசிய ராணுவம் விரைவில் பரவியது, அப்போது தேவகோட்டையில் நூற்றுக்கணக்கான பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின் போது
நீதிமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டது.. அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்கார அரசு162 பேரை சுட்டுக் கொல்லும் நிகழ்வு அப்போது மேற்கு வங்கத்திலும் நடைபெற்றது. தேவகோட்டை சுதந்திரப் போராட்ட தியாகிகள் 78 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதை நினைவுக் கூற கூடத் தமிழ்நாட்டில் ஆட்களில்லை என்பது தான் வேதனையான விடயம். யார் யாரோ கையில் ஆட்சி சென்று விட்டது என்ன செய்ய, இப்படித்தான் இருக்கும். இந்தத் தேவகோட்டை சம்பவத்தின் நினைவாக அங்கே ஒரு வளைவு கட்டப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், மாவட்ட ஆட்சித் தலைவராவது அங்கே சென்று மரியாதை செலுத்தி இருக்கலாம். ஆனால் செலுத்த வில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை…




கருத்துகள்