முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வல் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை விபரம் நாளை வெளிவரும்
கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் ரேவண்ணா மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உள்ளிட்ட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்த காணொளிக் காட்சிகள் வெளியாகி கர்நாடக மாநிலத்தின் அரசியலில் கடந்தாண்டு
நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட இருந்த நிலையில் 3,000 காட்சிக் காணொளிகள் வெளியானது தொடர்பாக அங்கு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வழக்கு, மைசூர் கே.ஆர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, பெங்களூர் பூஜ்யம் குற்றக் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு எனப் பதிவானதில் விசாரணைக்கு மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவை கர்நாடகா மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் அரசு அமைத்தது.
ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தலைமறைவான பிரஜ்வல், 2024 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் வந்த போது கைது செய்தனர்.
பிரஜ்வல் மீது பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்து புலனாய்வுக் காவல்துறை தொடர்ந்து விசாரித்த நேரத்தில், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கின் குற்றப்பத்திரிகைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது 1632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் இணைந்ததில் 45 வயது பெண் ஒருவர் கெஞ்சியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்தார் என ஹோலேநரசிபுராவிலுள்ள ரேவண்ணா குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை வீட்டில் பணிபுரிந்த பாதிக்கப்பட்ட பெண்ணை, கொரானா பெருந்தொற்று காலத்திலிருந்து பிரஜ்வல் வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து அதை காணொளிக் காட்சியாக எடுத்துள்ளார் என்பதாகக் கூறும்
அந்தக் குற்றப்பத்திரிகை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் துவங்கிய நிலையில் ஏழு மாதங்களில் 23 சாட்சிகளையும் விசாரித்து வீடியோ காட்சிகளின் மெய்த்தன்மை தடயவியல் ஆய்வறிக்கைகளையும், குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆய்வறிக்கைகளையும் நீதிமன்றம் மதிப்பாய்வு செய்தது. விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றம் ஜூலை மாதம் 18ஆம் தேதியுடன் விசாரணையை முடிதத நிலையில், பிரஜ்வல் மீது பதியப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்று 01-08-2025 தீர்ப்பு வெளியானது. அதில், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றத்தில் தண்டனை விவரத்தை நாளை 02-08-2025 அறிவிக்க உள்ளதாக உத்தரவிட்டது. தீர்ப்பு வெளியான பின்னர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய குற்றவாளி விரக்தியடைந் நிலையில் நாளை தண்டனை விபரங்களை எதிர் பார்க்கும் இந்திய மக்கள் இது ஒரு முன்னாள் பிரதமர் குடும்பத்தில் விழுந்த கரும்புள்ளியாகும்.
ஒரு பிரதமரின் பேரன் பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படுவது இது முதல் முறை.. விசாரணை நீதிமன்றத்தில் நீதி வென்றது
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் நீதி கிடைத்துள்ளது. இது மேல் முறையீடு சென்றால் இந்தத் தீர்ப்பை உறுதி செய்து வரும் தீர்ப்பு வழக்கின் போக்கை நிலை நிறுத்தும்.
கருத்துகள்