குப்பைக் குத்தகை வரவு ராம்கி ரெட்டிக்கு ஆனால் செலவு மட்டும் அரசுக்கு சென்னை ரிப்பன் மாளிகை
முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில்.
13 நாட்களாக நடந்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவர்கள் கேட்கும் சலுகைகள் எங்கே?
அவர்கள் கேட்பது மாநகராட்சியின்_ -ஊழியர்களாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே
அரசு அறிவித்த சலுகைகள் தனியார் காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்களிடம்
வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிடைக்குமா
அதோடு பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பளம் அரசு உறுதி செய்யுமா என்பதே அனைத்துக் கட்டப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் காவல் துறையினர் குவிப்புக்குப்- பின்னர் கைது. நடவடிக்கைகள் அரசு பணிக்கு சேர்ந்த பின் தனியார் குத்தகை நிறுவனங்கள் மூலம் பணி என்பதை தொழிலாளர் நலச் சட்டம் அனுமதிக்கிறதா என்பது இங்கு எழு வினா ?
"தூய்மைப் பணியாளர்களை அப்புறப் படுத்துக" - என உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கைது நடவடிக்கை என்பதாகத் தான் தகவல்.
அரசு தானாக இதைச் செய்யவில்லை என்பதாக கூறலாம் ஆனால்
இரவு 11.45 மணி தொடங்கியது கைதும் தூய்மைப் பணியாளர்களை அகற்றும் பணியும். கைகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளுடன், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் ஆதரவில் இருந்த போராட்டக் காரர்களை காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். பெண்களில் சிலர் அதே இடத்தில் மயங்கியும், விழுந்தனர். குரலற்றவர்களின் குரல் மாநில அரசுக்குக் கேட்காமல் போனது. ரிப்பன் பிரபு கட்டிய மாளிகை போராடும் இடமல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஆனால் ரிப்பன் என்ற அன்னியர் கட்டிய மாளிகை அதிகமான ஊழல் கமிஷன் வாங்கும் இடமாகவே மக்கள் பார்வைக்குத் தெரிகிறது. கமிஷன் வாங்க இடையூறு செய்யாமல் விலகிச் செல்ல வேண்டும்
அவர்கள் "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை".உண்மையிலேயே அவர்கள் அடிப்படை உரிமைப் போராட்டம் மெய் சிலிர்க்கிறது!
நிச்சயம் இந்த போராட்டம் வரலாறு. சென்னை அப்போது தான் ஒரு நல்ல தலைவர் இல்லாத நிலை உணர்ந்து சீராக நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருந்த ஒழுங்கமைவும், கட்டுப்பாடும், இரவு, பகல் எனத் தொடர்ந்து குடும்பத்தை விட்டு அமர்ந்திருந்த பெண்களின் மன உறுதியும் சுயநலம் உள்ள பலரை வியப்பில் ஆழ்த்தின.
இவர்கள் இயற்கை உபாதைகளை எப்படியெல்லாம் சமாளித்திருப்பார்கள் ? இந்தப் 13 நாட்களுக்கான சம்பள இழப்பு ஒரு புறமும், மறு புறம் தினசரி உணவுக்கான செலவுகளையும் எப்படிச் சமாளித்திருப்பார்கள்? யார் செய்தது என பார்க்க வேண்டும் 'இதுவல்லவா? பட்டாளி வர்க்கத்தின் அசல் போராட்டக் குணம்' என பலர் மனம் பெருமிதப்பட்டது.
விரிந்த முக்கிய சாலையின் ஒரு ஓரமாக பிளாட்பாரத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மழை மற்றும் வெயில் மத்தியில் நடந்த இந்தப் போராட்டம் பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் தரவில்லை. சாலைப் போக்குவரத்து அதன் இயல்பில் நடந்து கொண்டிருந்ததை அங்கு சென்றவர்கள் நாம் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்தோம்.
இப்படி இருக்க, இந்தப் போராட்டத்தை பொதுமக்களுக்கு இடையூறு என்று வழக்கு போட்டதே தவறானது. உண்மையை யாரும் உறுதிபடுத்திக் கொள்ள முடியும். அப்படி இருக்க ஒரு வடிகட்டிய அரசு தரப்பில் வந்த மெய்த் தன்மை காணாத பதில் அடிப்படையில் இந்த போராட்டத்தை நீதிமன்றம் தடை செய்தது மிகவும் வேதனைக்குரியது என போராட்டத்தில் பங்கேற்ற பலரது வாதம்.
மேலும் நமது அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு போராடும் உரிமையைத் தந்துள்ளது. தொழிலாளர்களுக்கு தங்கள் உழைப்பிற்கான கூலியை வலியுறுத்த உரிமையுள்ளது. இதையும் மீறி நீதிபதி போராட்டத்திற்கு தடை விதித்தது துரதிர்ஷ்டவசமானது எளியோருக்கு இழைக்கப்பட்ட கொடுமை. அடுத்ததாக
ஆட்சியாளர்கள் தாங்களே முடிவெடுத்து இந்தப் போராட்டதை ஒடுக்கினால் மக்களிடம் கெட்ட பெயர் என்பதால், நீதிமன்றம் வழியே இதை அரசியல் சூட்சுமமாகச் செய்த நிலையில். பிரதமரையோ, முதல்வரையோ நாம் கடுமையாக விமர்சிப்பதைப் போல, நீதிபதியை யாரும் விமர்சிக்க முடியாது.
நள்ளிரவில் கைது செய்யும் போது அந்த தாய்மார்களிடையே ஏற்பட்ட வேதனையையும் கொந்தளிப்பும், அவர்கள் கண்களில் வழிந்த கண்ணீரும் பார்க்கையில். நெஞ்சை பதைபதைக்க வைத்தது. தாய்மார்களின் கதறலை பொருட்படுத்தாமல் குண்டுக்கட்டாக அவர்கள் தூக்கி செல்லப்பட்ட போதும், சிலர் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போதும் அறியாமல் பலருக்கும் உள்ளம் துடித்து அழுகை பீறிட்டது.
இந்தப் போராட்டத்தின் இறுதி நிகழ்வை பெரும்பாலான சில காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போதிலும், சமூக ஊடகங்களில் பலர் நேரலை செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தந்ததற்காக கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த வளர்மதியும், நிலவு மொழியும் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து பலரும் அதிர்ச்சியானார்கள்.
ஆந்திரப்வில் இருக்கும், ஊரை அடித்து உளையில் போடும் ஒரு கார்ப்பரேட் ராம்கி ரெட்டி சம்பாதித்து கொழுப்பதற்காக, காலம் காலமாக உழைத்த நம் மண்ணின் பெண்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நியாயமா என பல கட்சியின் குரல் கேட்க சிலர் வாய் மூடி வேடிக்கை பார்க்க ? அதுவும் ஒரு வகை அரசியல் தான்
எத்தனையெத்தனை வழிமுறைகளில் டாஸ்மாக், மணல் குவாரிகள், பொதுப் பணித் துறை மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றில் சம்பாதித்து கொள்கிறீர்களே போதாதா? இந்த ஏழைகளை ஒட்டுமொத்தமாக ஒப்பந்ததாரருக்கு விற்று கமிஷன் பார்த்து காசு பார்க்காவிட்டால், என்ன குறைந்துவிடப் போகிறீர்கள்.? என மதுவந்தி உள்ளிட்ட பலர் வினா எழுப்ப
‘திமுக ஆட்சியில் நாம் பாதுகாக்கப்பட்டோம் . நமக்கு தந்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றினார்’ என காலமெல்லாம் நன்றி பாராட்டி இருப்பார்களே.
13 நாள் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தைக் கடைபிடிப்பது அவரது அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கோழைத்தனமாகும். இரண்டில்
ஒரு கம்யூனிஸ்டு மற்றும் விசி.கவின் தூய்மை பணியாளர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்காமல் வெறுமனே ஒரு நாள் வந்து வாழ்த்திச் சென்றது முறையல்ல. நீங்கள் வழி நடத்தி, தலைமை தாங்கி இருக்க வேண்டாமா?
இதற்கிடையில் சின்மயி, மதுவந்தி, அம்பிகா.. போன்றவர்கள் வந்து ஆதரித்துச் சென்றதை வைத்து திமுக சார்பில் ஆதரவாளர்கள் தூய்மை பணியாளர் போராட்டத்தை களங்கப்படுத்துகிறார்கள். போராடும் எளியோருக்கு உற்ற துணையாக இருக்கத் தவறியது யார் குற்றம்…?
இந்தச் சூழலில் மனசாட்சியுள்ள திமுகவினர் தூய்மை பணியாளர்களுக்கு நியாயம் வழங்கக் கோரி, தங்கள் கட்சித் தலைமைக்கு நிர்பந்தம் தந்திருக்கலாமே. அன்று
Police crackdown against Sanitation workers Protest, CPM announces protest against police action.
Protest will take place at 6 pm.11 ஜோன்ல , 2 ஜோன் மட்டும் தான் அரசுக்கு ஆதரவு தரல மற்ற 9 ஜோன் அரசு தரப்பு நடவடிக்கைக்கு ஒத்துக்கிட்டாங்க.
12 சுற்றுக்கு மேல பேச்சு வார்த்தை நடத்தி இருக்கு.
70 சதவீதம் பணியாளர்கள் இதற்கு உடன்படுறாங்க.
அப்போது ஏன் இந்த 2 zone ல் மட்டும் இந்தப் பிரச்சினை நடக்கிறது? யாரு இதை வழி நடத்துறாங்கனு தெரியவில்லையே? தூய்மைப்பணியாளர் போராட்டம்
தொடர்ந்து பத்தாவது நாளாக நாட்டின் கடைநிலை கூட அல்ல; கடைசி நிலை ஊழியர்கள், வீதியில் இறங்கி அல்ல; வீதியில் கிடந்தே போராடி விட்டார்கள்.
துப்புரவு என்பது தூய்மை என்று ஆனதைத் தவிர வேறெந்த வாழ்வியல் முன்னேற்றமும் காணாதவர்கள், இவர்கள்.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கூலியாக மாதம் 22 ஆயிரத்து 950 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 2025 முதல் சென்னை ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களின் தூய்மைப்பணிகள் தனியார் கைகளில் கொடுக்கப் பட்டிருக்கிறது. சம்பளமாக மாத்துக்கு 16 ஆயிரத்து 950 ரூபாய் .
தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஏரியாக்கள், அடுத்ததாக
குறி வைக்கப் பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்கள் இப்படி தனியார் கைகளுக்குப் போய்விட்டது.
அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி இப்போது என்ன நியாயம் பேசுகிறாரோ, அதைத்தான் திமுக தலைவரான முதல்வர். மு.க.ஸ்டாலின் அப்போது பேசினார். "தி.மு.க ஆட்சி அமைந்ததும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நல்ல காலம் ஏற்படும்" என்றார்.
நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில்
வேலை பார்த்து வந்த இரண்டாயிரம் பேரை எந்த நிபந்தனையும் இல்லாமல், தினக்கூலியாக 750 ரூபாய் சம்பளத்தில் சேர்த்துக்கொள்ள 'தனியார்' ஒப்பந்த நிறுவனத்துக்கு தாயுள்ளத்தோடு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
"குடுத்தத வாங்கிட்டு வேலையைப் பாப்பியா" என்று யாரும் சொன்னார்களா, தெரியவில்லை.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களைத் தொடர்ந்து நெரிசல் மிகுந்த வண்ணாரப்பேட்டை,
பிராட்வே, மண்ணடி, எழும்பூர், புதுப்பேட்டை ஏரியாக்களும் அகற்றாத குப்பை கூளங்களால் லேசாக துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. வானிலை அறிக்கை சொல்வது போல, மழைப் பொழிவு நான்கு நாள் தொடர்ந்தால் நாற்றத்தோடு சுகாதார சீர்கேடும் மொத்தமாய் சேர்ந்து கொள்ளும்.
மருத்துவ முகாம் கட்டாயம் தூய்மைப் பணியாளர்கள் சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதமும், உத்தரவும் முழு விவரம் ரிப்பன் பிரபு மாளிகை முன்பு போராட்டம் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாகப் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த காவலதுரையினருக்கு உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூபாய். 276 கோடிக்கான ஒப்பந்தத்தை ராம்கி என்ற ஆந்திரப் பிரதேச தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பாக சட்டவிரோதமாக நடைபாதை மற்றும் சாலையைமறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கோரி தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது நடந்த வாதப் பிரதி வாதங்கள் குறித்த விபரம். மனுதாரர் தேன்மொழி தரப்பில் தாக்கல் செய்த மனுவானதில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரியின் வாதத்தில்: தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வாதத்தில்: சட்டவிரோதப் போராட்டத்தைக் கைவிட்டு நடைபாதையை காலி செய்ய வேண்டும் என காவலதுறை தரப்பில் ஆகஸ்ட் மாதம்.7 ஆம் தேதி அன்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு வாதிடுகையில் : மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பாகத்தான் போராட்டம் நடத்த முடியும். இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமது உத்தரவில் : தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த உரிமை உண்டு என்றாலும், போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலைகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.எனவே, உரிய அனுமதியின்றி நடைபாதையில் போராட்டம் நடத்தி வரும் அவர்களை காவலதுறை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதேநேரம் முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி கோரினால் அதற்கு சட்டப்படி பரிசீலித்து காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.
வாழ்வாதாரம் பாதுகாக்கக் கோரி.. இந்த நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவரான வழக்கறிஞர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கே.சுரேந்தர் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த வாதம்:
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.குமாரசுவாமி: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், இதுவரை பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்தும் சென்னை தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் தற்போது ரூ.750 ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.500 மட்டும்தான் கிடைக்கும். பாதி பேருக்கு வேலை கிடைக்காது. அதனால்தான் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: தூய்மைப் பணியாளர்கள் யாரும் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலமாக பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கெனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது 5, 6-வது மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்.
தனியார் ஒப்பந்த நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மொத்தம் 1,900 தொழிலாளர்கள் தேவை என்ற நிலையில் பணியில் சேருவதற்கான தேதி ஆக.31 வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சுரேந்தர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அப்போது தள்ளி வைத்தார்.
கருத்துகள்