மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு திமுகவின் மேயர் கணவர் கைதால் பதவி பறிபோகும் நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. கணவர் பொன் வசந்த், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் ஆதரவாளராக இருந்ததற்கு பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். 20024-ஆம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமார், 150 கட்டிடங்களில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக பூஜ்யக் குற்றக் காவல்துறையில் புகார் செய்தார். ஆனால், உள்ளூர் திமுகவின் அரசியல் அழுத்தம் காரணமாக ஆணையர் கொடுத்த புகார் மீது ஏழு மாதங்களாக வழக்குப்பதிவு செய்யாமல் முடக்கிய நிலையில் 150 கட்டிடங்களில் நடந்த சொத்துவரி குறைப்பு மட்டும் மறுசீரமைக்கப்பட்டு புதிய வரி விதிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் 100 வார்டுகளில் நடந்த பிற வணிகக் கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குடியிருப்பு வரி, ‘ஏ’ கிரேடுக்கு பதில் ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடு விதிப்பும் மறுசீரமைக்கப்படாததால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி நிதி இழப்பு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பின் சொத்துவரி முறைகேடு வழக்கு வேகமானது.
மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணைக்கு ஆணையர் அனுமதி வழங்கியதால் சொத்துவரி முறைகேடு புகாரை வழக்குப்பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் உள்ளிட்ட 19 பேரை ஆணையர் சித்ரா பணியிடை நீக்கம் செய்தார் .இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளும் பறிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன்வசந்த் ஆகியோர் மட்டும் விசாரணைக்குக் கூட அதுவரை அழைக்கப்படவில்லை. இது பதவி இழந்த மண்டலத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியானது.
இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளும் பறிக்கப்பட்டன.
சொத்துவரி முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக, இந்த வழக்கில் மேயர் இந்திராணி, அவரது கணவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சொத்துவரி விதிப்புக் குழு தலைவர் விஜய லெட்சுமியின் கணவர் கண்ணனின் வாக்கு மூலத்தில் மேயர் கணவர் பொன் வசந்த், மேயர் கணவரின் பி.ஏ.வாக இருந்த பொன்மணியின் கணவர் ரவி மூலம், பல்வேறு கட்டிடங்களில் சொத்து வரி முறைகேடு செய்ததாக தெரிவித்திருந்தார்.
அதனால், பொன்வசந்த் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் இதற்கிடையில் நேற்று மேயர் இந்திராணி, கணவர் பொன் வசந்த்தைப் பற்றி 2 பக்க அளவில் எழுதப்பட்ட புகார் கடிதத்தை, பதிவுத் தபால் மூலம் யாரோ மர்ம நபர்கள் 100 வார்டு கவுன்சிலர்களுக்கும் அனுப்பிய
கடிதத்தை யார் அனுப்பியது என்று காவல்துறை விசாரித்து வந்த சூழ்நிலையில் நேற்று சென்னையில் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை மற்றும் திமுக மேலிடத்தின் அதிரடி நடவடிக்கைகளால் மண்டலத் தலைவர்களைப் போல் இந்திராணியின் மேயர் பதவியும் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேயராகவே செயல்பட்ட ‘பொன் வசந்த் குறித்து வந்த தகவலின் படி மேயர் இந்திராணி பொறுப்பேற்ற நாள் முதல் பெயரளவுக்கு மட்டுமே அவர் மேயராகச் செயல்பட்டார். அவரது கணவர் பொன்வசந்த் தான், மேயர் பங்களாவில் அமர்ந்து கொண்டு அலுவலர்கள், ஊழியர்களை இயக்குவது, வார்டுகளில் ஊழியர்களுக்கு உத்தரவிடுவது, டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வது என மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிட்டார் அதனால் மேயர் கணவருக்கும், ஆணையராக வந்தவர்களுக்கும் இடையே நீடித்த மோதல் ஏற்பட்டதால் 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது.
மேயர் இந்திராணியின் தொடர்பு எண் தற்போது வரை அலுவலர்களுக்கும், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கும் வழங்கப்படவில்லை. மேயர் கணவர் பொன்வசந்த்தைத்தான் அனைவரும் தொடர்புகொள்ள வேண்டியதிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்வசந்த் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். ஆனாலும், கடைசி வரை மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. என்கின்றனர் மாநகராட்சிப் பணியாளர்கள் .மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், பதினான்காம் நபராகக் கைது செய்யப் பட்டிருக்கிறார். மதுரை மாநகராட்சியில்,
ரூபாய் 150 கோடி சொத்து வரி முறைகேடு புகார் தொடர்பாக திமுகவிலிருந்து நீக்கப் பட்டிருந்தார், இந்திராணியின் கணவரான பொன். வசந்த்.
உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு 33 சதவீதமல்ல, 100 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தாலும்; கணவர், அண்ணன், தம்பி, அப்பா போன்ற உறவுகள் தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். பகுதி வாசிகள் முதல் அலுவலர்கள் வரை மேயருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால்
"கவுன்சிலர் இருக்காங்களா?" என்றவுடன்
"சொல்லுங்க. நான்தான் பேசுகிறேன், என்ன விஷயம்ன்னு சொல்லுங்க"
என்கிற உரையாடலைக் கடந்து போகாத ஆட்களைப் பார்க்கவே முடியாது. அது ஊராட்சி மன்றம் துவங்கி மாநகராட்சி வரை இதே நிலை தான்.
"நான்தான் பேசுகிறேன்" - என்ற ஒற்றைச் சொல்லின் பின்னே தான், மிகவும் வெளிப்படையாக, மகளிருக்கு எதிரான; அவர்களின் ஆற்றலை; தனித் தன்மையை உடைத்து நொறுக்கும் 'ஆதிக்க' சக்தியாக; ஆண்கள் மற்றும் உறவுகள் இருக்கின்றன; அவர்களின் பின்னேதான் அரசியல் கட்டமைப்பும் இயங்கும் படி இருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளாகவே இப்படித்தான் உள்ளாட்சி கள நிலவரம் உள்ளது; பலரும் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
என்றாவது இந்த நிலை மாறாதா என்ன? அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் முறைகேடுகள் நீக்க
மாற்றம் வரவேண்டும். அதுவும் விரைவில்.
கருத்துகள்