முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் ஐஏஎஸ்கள் அரசுக்கு இணையாக அரசாங்கம் நடத்துகின்றனர்: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

தமிழ்நாட்டில் ஐஏஎஸ்கள் அரசுக்கு இணையாக அரசாங்கம் நடத்துகின்றனர்: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்


திமுகவின் காலஞ்சென்ற தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞரி மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாளில் சாகித்திய அகாடமி போல  இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய திமுகவின் அரசு. அதன்படி இந்த திட்டத்தின் தமிழ்நாட்டு முதல் பெண் ஐ.பி.எஸ்.  திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து திலகவதி மற்றும் மறைமலை இலக்குவனார் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி உத்தரவிட்டிருந்தநிலையில் இதே போன்ற கோரிக்கையுடன் கவிஞர் வைரமுத்து உட்பட இருவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், “இந்த வழக்கு விசாரணையை  பிற்பகலுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை பிற்பகல் 02:15 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது கவிஞர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், “ஏற்கனவே பெண் ஐபிஎஸ் அலுவலர் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு  தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை  பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  இதனைக் கேட்ட நீதிபதி, “இது ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர்களின் செயல் ஆகும். ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர்கள் அரசுக்கு இணையான ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிருஷ்டவசமானது எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அலுவலர்களுக்குத் தெரியாது. அவர்கள் அதிகார தொனியில் தான் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிநி இருந்திருந்தால் இதை ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உயர் அலுவலர்களை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்” எனத் தெரிவித்தார்.             ஐபிஎஸ் உயர் அலுவலராக  இருந்து ஓய்வு பெற்ற எழுத்தாளர், தமிழ் சினிமாவில் பாடல் எழுதி கோடி கோடியாக சம்பாதித்து  கோடிகளில் வாழும் தமிழ்நாடு எங்கும் அசையா சொத்துக்கள் வைத்திருக்கும் கவிஞர் ஒருவர் 

என எழுத்தாளர் கோட்டாவில் வீடு ஒதுக்கீடு கேட்டவர்கள் பெயர்களை பார்த்தால் தலை சுற்றுகிறது. 

இதனால் இதற்கு ஒதுக்கீடு தராத உயர் ஐஏஎஸ் அலுவலர்களை  நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதெல்லாம் உணர்வு சம்பந்தப்பட்டது என்று வேறு சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். 

ஆனால் எனக்கு ஒரு கேள்வி. இவ்வளவு கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் பலர், எழுத்தாளர் என்ற காரணத்திற்காகவும் இலவசமாக அரசிடம் வீடு கேட்கிறார்கள்.‌

ஒரு ஏழை எழுத்தாளனுக்கு இருக்கும் அற உணர்வு கூட உங்களுக்கு இல்லையே? இதற்கு மேலும் அந்த வீட்டை வாங்கி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று உயர் நீதிமன்றமும் கேட்பதில்லை மக்களும் கேட்பதில்லை.‌ 

எழுத்தாளர் என்றால் முதலில்  ஒரு அற உணர்வு இருக்க வேண்டும். அதுவே இல்லை இவர்கள் எப்படி எழுத்தாளர் கேட்டகிரியில் வீடு கேட்கிறார்கள். கவிஞர் வைரமுத்து முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு நெருக்கமானவர்! தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர். அடிக்கடி இருவரும் ஒரே மேடையில் சந்தித்து உரையாற்றி வருகிறார்கள்.

அப்படி இருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு வீடு தரப்படுவதாக ஆணை வெளியிடப்பட்ட பிறகு, ''ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு இந்த வீடு தரப்படமாட்டாது'' என புது ஆணை வெளியிட்டு, வீடு தராமல் நிறுத்தி வைக்கப்பட்டது தான் இதில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. இது மிகப் பெரிய நிர்வாகத் தவறு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கே  அவமானமாகப் பார்க்க ப்படுகிறது.

'ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு வீடு தர வேண்டிய அவசியமில்லை' என்றால், அதை விருதுக்கு முன்பே தீர்மானித்திருக்க வேண்டும். ஒன்றைத்  தந்து விட்ட பிறகு, திருப்பி வாங்குவது என்பது சம்பந்தப்பட்ட  படைப்பாளிகள் கவிஞர் வைரமுத்து, திலகவதி, ராஜேந்திரன் போன்றோருக்கு மன உளைச்சலை உருவாக்கும் என்பது மட்டுமல்ல, அரசின் நம்பகத் தன்மையையே கேள்விக்குள்ளாகும். 

இனி விருது தரப்போவோருவோருக்கு இந்த புதிய நிபந்தனையை செயல்படுத்தலாமே தவிர, தந்துவிட்ட பிறகு அதை அவர்களிடம் இருந்து பறிப்பது நாகரீகமல்ல.

உத்தரவு அமல்படுத்தப்பட்ட விதம் அப்படி 

இது எப்படி நடந்தது?  கவிஞர் வைரமுத்து விவகாரத்தில் ஒரு முற்போக்கு நாளிதழ் தான் தொடர்ந்து கேள்வி எழுப்பி  கவிஞர் வைரமுத்து போன்ற வசதியான எழுத்தாளருக்கு ஏன் வீடு தர வேண்டும்.. எனப் பிரச்சினையை துவக்கி வைத்தது. அவருக்கு எதிரான ஒரு 'லாபி' திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு வீடு கிடையாது என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டது. கவிஞர் 

வைரமுத்துவிற்கு வீடு மறுக்கப்பட்ட பிறகு, நிச்சயமாக அவர் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினிடம் அது குறித்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தி, நிவாரணம் தேட முயலாமல் நீதிமன்றம் சென்றிருக்கமாட்டார் என்பதால், அவர் வட்டாரத்தில் விசாரித்த போது கவிஞர் வைரமுத்து முதல்வரிடம் பல முறை இதை கவனப்படுத்தியது  உறுதியானது.

விவகாரம் கவிஞர் வைரமுத்துவிற்கு வீடு தர வேண்டியது அவசியமா? இல்லையா? என்பதல்ல. அவருக்கு வீடு தருவதில் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், ஒன்றை முதலமைச்சரே அறிவித்துவிட்ட பிறகு, அதை உயர் அலுவலர்கள் மாற்றி அமைக்கும் நிலையையே சுட்டிக் காண்பித்துள்ளனர் பலர் 

ஆக, 'முதல்வராலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை' என்ற நிலையில் தான், நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து 

விவகாரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்ட நீதிபதியவர்கள், ’’இவையெல்லாம் ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் செயல். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் உயர் அலுவலர்கள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது. தமிழறிஞர்களுக்கு வீடு ஒதுக்குவது உணர்வுப்பூர்வமானது. இதெல்லாம் ஐஏஎஸ் அலுவலர்களுக்கு தெரியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் இதை ஒரு போதும் அனுமதித்திருக்கமாட்டார்’’ என்றார்.

உண்மை தான்! உயர் அலுவலர்கள் இஷ்டப்படி ஆட  கலைஞர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அவர்கள் வலியுறுத்தினாலுமே கூட,  தவறான முடிவை எடுக்க அனுமதிக்கமாட்டார்.

ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக தற்போது நீதிபதியவர்கள் கூறியது போல, உயர் அலுவலர்கள் இணை அரசாங்கம் நடத்தி வருவது, சாம்சன் விவகாரத்திலும் உறுதியானது. தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரத்தில்  கூட நீதிமன்றம் சென்றே நிவாரணம் பெற முடிந்தது. லோக் ஆயுக்தா வழக்கு விவகாரங்கள் கூட அப்படித்தான் 

கணிசமான தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தொழிற்சங்கத்தை நிறுவினால், அவர்கள் விண்ணப்பித்த 90 நாட்களில் அதை பதிவு செய்து தர வேண்டும் என்பது பதிவுத் துறை, தொழிலாளர் நலத் துறை சட்டத்திலேயே உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணியின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல்வரை சந்தித்து இதை தெளிவுபடுத்தியும், தீர்வு கிடைக்காமல் தான் நீதிமன்றம் சென்று சாதகமான தீர்ப்பு வாங்கினர். இது தொழிலாளர்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயரை பெற்றுத் தந்தது.

அடுத்ததாக தற்போது தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அது அதற்காக உருவாக்கப்பட்ட 14 கல்வியாளர்கள் உருவாக்கி தந்த 520 பக்க கல்வி கொள்கை வரைவு அல்ல. 83 பக்கத்திற்கு ஒரு உயர் அலுவலர் தன்னிச்சையாக எழுதியதே தற்போது கல்விக் கொள்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் கல்வியாளர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் மன வருத்தத்தை அந்தக் கல்வியாளர்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.

நான் ஏற்கனவே பலமுறை தமிழ்நாட்டில் அலுவலர்கள் இராஜ்ஜியம் தான் கொடிகட்டிப் பறக்கிறது என்பதை தற்போது அது நீதியரசர் தீர்ப்பு காரணமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எல்லாமே உயர் அலுவலர்கள் நினைத்தபடி தான் நடக்கும் என்றால், பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் அரசு எதற்கு? முதல்வர் எதற்கு? என்பதே அரசியல் கட்சிகள் மத்தியில் எழு வினா?

உண்மையிலேயே அறத்தின் பால் நின்று சமுதாய விழிப்புணர்வுக்காக பாடுபட்டு பொருளீட்டாத ஏழை எழுத்தாளர்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டம். அதை இவர்கள் அபகரிக்கப் பார்க்கிறார்கள். என சாமானிய மக்கள் பேசுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...