முன்னாள் மத்திய மந்திரியும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி 79வது வயதில் இன்று காலை காலமானார்.
நுரையீரல் பாதிப்புக்காக எட்டு மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த ஒரு மாத காலமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.டி.ஆர்.பாலு எனும் தளிக்கோட்டை ராஜுத்தேவர் பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், 1996 ஆம் ஆண்டு முதல் சென்னை தெற்கு மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 1957 ஆம் ஆண்டு முதல் திமுக கட்சியிலிருந்து வருகிற அரசியல் விசுவாசத்திற்காகவும் அவர் இப்போது திமுகவின் பொருளாளராக உள்ளார் , செப்டம்பர் 3, 2020 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக அவர் ஆகஸ்ட் 2018 முதல் ஜனவரி 2020 வரை திமுக வின் முதன்மைச் செயலாளரானார்.
2024 ஆம் ஆண்டு பாலு தனது நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து எழுதிய "குரலற்றவர்களுக்கான எனது குரல்!" என்ற புத்தக வெளியீட்டு விழாவில்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பதவியில் உள்ளார்
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் 2004–2009 ஆம் ஆண்டு பதவியில்
பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
1999–2003 வரை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் 1996–1998 ஆம் ஆண்டு பிரதமர் எச்.டி. தேவகவுடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்தவர்
டி.ஆர்.பாலசுப்ரமணியம் (இளமுருகு ராசுதேவர்) 15 ஜூன் 1941 ல் பிறந்தவர் (வயது 84) மன்னார்குடி தொகுதி தளிக்கோட்டை இவருக்கு இரண்டு வாழ்க்கைத் துணைவியர்கள் ரேணுகா தேவி மற்றும் பொற்கொடி மகன் TRB ராஜா மாநில அமைச்சர்.


கருத்துகள்