முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்ச நீதிமன்றம் உத்தரவு வந்த பிறகு.தெரு நாய்களுக்கு ஆதரவாகப் போராடும் நபர்கள் பின்னணி

தெரு நாய்களுக்கு ஆதரவாக போராடுவதன் பின்னணி இதுதான் 

இந்தியாவில் ராபீஸ் ஊசியின் வர்த்தகம்  ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கு நடக்கிறது என்று கூறுகிறார்கள் 

தெருநாய்களை ஒழித்தால் அந்த லாபம் இந்த கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு கிடைக்காது அதனால்தான் இந்த போராட்டமே தவிர விலங்குகள் மேல் உள்ள அக்கறை அல்ல,

கேட்பாரற்று தெருவில் திரியும் நாய்களால் மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடு கோழி, பூனை போன்ற மற்ற உயிரினங்களும் வாழ முடியவில்லை

தெருநாய்களுக்கு ஆதரவாக போராட வந்திருப்பவர்கள் ஆளுக்கு 2 நாய்களை உங்கள் வீட்டில் வளர்க்க தயாரா. என்று கேட்டுப்பாருங்கள் ஓடி விடுவார்கள்...“தண்ணீர் வைத்தால் நாய்களின் கோவம் குறையும்” - நடிகை அம்மு நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாய் கடியினால் உருவாகும் ரேபிஸ் வைரஸ் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெருநாய்க்கடி அதிகமாக இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் இருக்கும் தெரு நாய்களை 8 வாரங்களில் பிடிக்க கெடு விதித்தது. 


இந்த உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக இருந்தாலும் நாய் விரும்பிகளுக்கு மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை சதா, இந்த உத்தரவு நாய்களை பெருமளவில் கொல்லும் நோக்கில் அமையும் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள், இயக்குநர் வசந்த், நடிகை வினோதினி, நடிகை அம்மு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இயக்குநர் வசந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என சொன்னார் வள்ளலார். மேலும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார். இந்த பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. உயிர்களுக்கானது. அந்த ஒரு மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை பார்க்க வேண்டும். கண்டிப்பாக நாய்கள் கடிக்கிறது இருக்கிறது. ஆனால் அதற்காக எல்லா நாய்களையும் காப்பகத்தில் அடைப்பது சரியானது கிடையாது. அதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாய் கடியை தாண்டி தினமும் நிறைய விஷயங்கள் நடக்கிறது. ஒரு புள்ளிவிவரத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன். தினமும் பாலியல் துன்புறுத்தல்கள் கிட்டத்தட்ட 87 நடக்கிறது, கொலை சம்பவங்கள் 80 நடக்கிறது, சாலை விபத்தில் இறப்பு 462 நடக்கிறது. நாய்கள் கடி சம்பவம் வெறும் 0.15 சதவீதம் தான். இதை நான் வாக்குவாதத்திற்காக சொல்லவில்லை. இதை அன்போடு பார்ப்பதற்காக சொல்லவில்லை. இந்த தெருக்கள் நமக்கும் மட்டும்தானா? முதலில் தெருநாய்கள் என சொல்வதே எனக்கு வருத்தமாக இருக்கிறது. நாய்களை அடைத்து வைப்பது சரியான தீர்வல்ல” என கூறியுள்ளார்.




இதனிடையே நடிகை அம்மு பேசுகையில், “நாய்களை வாயில்லாத ஜீவன் என ஏன் சொல்கிறோம். ஏனென்றால் அதுவால் பேசமுடியவில்லை. நம் நாட்டில் சில பிரச்சனைகள் குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் தெரு நாய்கள் தான். ஏனென்றால் நாய்கள் தான் அதை பாதுகாக்கிறது. அது இருப்பதால் தான் நாம் தைரியமாக சாலையில் செல்கிறோம். நாய்களுக்கு பசி இருப்பதனால் தான் மனிதர்களை வந்து கடிக்கிறது. ரேபிஸ் நோயை தடுப்பதற்கு நாய்களுக்கு சாப்பாடு போட்டு அதன் பசியை தீர்க்க வேண்டும். இது மனிதாபிமானம் உள்ளவர்கள் எல்லாரும் செய்யலாம். தண்ணியை வைத்தால் நாய்களின் கோவம் குறையும். நாய்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்தால் அடில் ரேபிஸ் இருக்கும் நாய்கள் இருக்கும் பட்சத்தில் அது எல்லா நாய்களுக்கும் பரவும். அதனால் ரேபிஸை பரவச் செய்வதற்காக இந்த முன்னெடுப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதா” எனக் கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளர் கந்தசாமி  சென்னை K.M.C. அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .அயனாவரம் - ஐசிஎஃப் பகுதியில் உள்ள அவரது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வரும்போது தெருநாய் விரட்டி - குறுக்கே பாய்ந்ததில் கை கால்களில் பலத்த காயம் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார் அவரது தொடர்புக்கு : (99401 50001)முன்பெல்லாம் வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும்.கழுத்தில் அதை தொங்க விட்டு இருக்க வேண்டும்..குறிப்பிட்ட இடை வெளியில் மாநகராட்சியில் இருந்து தடுப்பூசி போட்டு போவார்கள்.. மற்ற நாய்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுருக்கு போட்டு பிடிக்க பட்டு ஊசி போட்டு 10 விநாடிகளில் வலியில்லாமல் போய் சேர வைக்க படும்.. அப்போது இந்த கருணை மகான்கள் எங்கே போய் இருந்தார்கள்?எதிர்ப்பு இருந்தால் நாய் ஆர்வலர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தைந்து தெரு நாய்களை கொடுத்து விட வேண்டியதுதான்.சில இடங்களில் தெருக்களில் இருக்கும் நாய்களை அவ்வப்போது பிடித்துச் சென்று ந்யூட்டர் செய்து பிறகு வேறு எங்கோ கொண்டு விட்டு விடுகிறார்கள். அவை புதிய இடத்தில் குழம்பிப் போய் தவிகின்றன. அதனால் மிகவும் வயலண்ட்டாக நடந்து கொள்கின்றன. தவிர ABC  செய்வதனால் அவற்றின் ஃபிசியலாஜிகல் தேவை பூர்த்தி அடையாததனால் கூட மிகவும் வெறி பிடித்து அலைகின்றன. போகும் வரும் அனைத்து வண்டிகள் மீதும் பாய்கின்றன. முக்கியமாக இரு சக்கர வாஹனங்களில் செல்வோர் பயந்து போய் கீழே விழுந்து விடுகின்றனர். இது தவிர பல இடங்களில் குழந்தைகளை கடித்து வேறு வைத்து விடுகிறது. மற்றும் தங்களுக்குள் சண்டை சச்சரவு என்று இரவில் தூங்க கூட விடாமல் பெரும் ரகளை செய்கின்றன.

அதனால் தெரு நாய்களை பிடித்து பாதுகாப்பாக வைத்துப் பராமறிப்பது மிகவும் அவசியம். இதை எல்லாம் பார்த்த பிறகும் தெரு நாய்களை பிடித்து பாதுகாப்பகங்களில் பாதுகாப்பது பற்றிய நீதி மன்றத் தீர்ப்பை தவறு என்று சொல்வீர்களா சோ கால்ட் அனிமல் லவர்ஸ்?

ஆனால் இதை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டி இருக்கிறது. நாய்கள் அகற்றப் பட்டால் எலி, பெருச்சாளி, சில இடங்களில் குரங்கு கூட பெருகி விடும் என்று சொல்லப் படுகிறது. இதையும் கருத்தில் கொண்டு சரியான தீர்வு எட்டப் பட வேண்டும்.

ஆனால் தெரு நாய்களால் மனிதர்களுக்கு பெரும் தொல்லையாகவும், ஆபத்தாகவும் இருப்பது 100% உண்மை.  தெரு நாய்கள் மீது அக்கறை காட்டும் விலங்குகள் நல ஆர்வலர்கள் .ஆடு மாடு பன்றி கோழி போன்ற பறவைகள் கால்நடைகளைக் கொன்று சாப்பிட மாட்டார்களா? அவர்கள் சைவமா அசைவமா 

அவற்றின் மீது மட்டும் ஏன் அக்கறை கொள்வதில்லை!?

ஆடு மாடு பன்றி கோழி போன்ற விலங்குகளைக் கொன்று சாப்பிடாத விலங்குகள் நல ஆர்வலர்கள் எத்தனை பேர்கள்!?  மற்றும் நாகலாந்து மாநில நாய் கறி விற்பனை தடுக்க முடியுமா என்பதே எழு வினா.          "NON VEG சாப்பிட மாட்டேன்னு சொல்லுங்க பாக்கலாம்..!"  கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமே, யார் பராமரிப்பிலும் இல்லாத தெரு நாய்கள்தான் ஊரில் அதிகம். சுயமாக அவைகளே முகக்கவசம் அணிந்திட வாய்ப்பு இல்லை. நாட்டு நாய்களான தெருநாய்களை வீட்டுக்குக் கொண்டு வந்தோ, அல்லது உயர்ரக நாய்களை ஆர்டர் போட்டு இறக்குமதி செய்தோ வளர்க்கிறவர்கள்; அவைகளுக்கு மாஸ்க் போட்டு வெளியே கூட்டிப் போவது இல்லை. அதே வேளையில் அவர்கள் மாஸ்க் போட்டிருப்பார்கள். 

கயிறுகட்டி வாக்கிங் அழைத்துப்போகும் போது பிற தெருநாய்கள், "யார்றா நீ, எங்க ஏரியாவ்ல?" என்ற கேள்வியோடு அட்டாக் செய்வதும், பதிலுக்கு முதலாளியோடு வாக்கிங் வந்த நாய் தெருநாய்களை அட்டாக் செய்வதும்;

 சில நேரங்களில் நாயின் முதலாளி 

மீதே அட்டாக் நடப்பதும்; அவ்வப்போது பார்க்கிற காட்சிகள்தான். ஆள் கடிபடாத வரை இவையெல்லாம் நியூஸ் ஆவது இல்லை.

"திடீர்ன்னு ஏன் மனிதர்கள் இப்படி நாய்கள் மீது நாய்கள்போலவே விழுந்து கடித்து பிராண்டி வைக்கிறார்கள்?" என்ற சிலரது ஆதங்கக்குரல்களை இப்போது கேட்க முடிகிறது. 

காலங்காலமாக நாயாட்டம் அதிகம்தான் நண்பர்களே. கிராமங்களிலும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகரின் ஒதுக்குப்புற புறநகர்களிலும்; இதுநாள் வரையிலும் 'கடி' பணிகள் இருந்து வந்த வேளையில்; அது பெரிதாகப் பேசப்பட வில்லை. இப்போது, எங்கு கடிக்க வேண்டுமோ அங்கேயும், யாரைக் கடிக்க வேண்டுமோ அங்கேயும்; எந்த ஏரியாவில்  கடிக்கவேண்டுமோ அங்கேயும்; மிகச் சிறப்பாக நாய்கள் கடித்துவைத்த காரணத்தால்; எல்லா ஏரியாவும் FB ஏரியா ஹைலைட்ஸ் சிம்பிள் போல ஹைலைட் ஆகியிருக்கிறது.

இரவுகளில் வீடற்ற மனிதர்கள் படுத்து உறங்கும் மேம்பால நடைபாதைகளில் நபர் ஒருவருக்கு ஒருநாய் பாதுகாப்பு (?) என்ற கணக்கில் நாய்களும் படுத்துக் கிடக்கும். 

நடைபாதை (பிளாட் பார்ம்) இல்லாத மேம்பாலங்களைத் தவிர - எல்லா மேம்பாலங்களும் மனிதர்கள் -நாய்கள் என்ற இணைப்பை பார்க்கலாம்.

இரவு 10 மணிக்கு படுக்கை விரிக்கப் பட்டு மறுநாள் காலை ஆறுமணியளவில் படுக்கை கலைக்கப்படும்.

பயபுள்ள இம்புட்டு டீட்டெய்ல்டா சொல்லுதேன்னு மூக்கில் விரல் வைப்பது வேண்டாத வேலை. மேம்பால ஏரியாக்களை இரவுகளில் கடப்பது இப்போதும் உண்டு. அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக ஜாகிங் போகும் பழக்கம் அப்போது உண்டு. ஆக, அதிகாலையிலும் இரவுகளிலும்  இதை தொடர்ச்சியாய் பார்த்துள்ளேன். 

நெடுஞ்சாலைகளில் நெரிசல் இருக்கும் வேளைகளில், உள்வட்டச் சாலையை கார்மூலம் பயன்படுத்திப் பார்ப்பதைக் காட்டிலும்; நடந்தும், டூ வீலரில் கடந்தும் பார்த்தோர்; ஆகச்சிறந்த மாமன்னர்கள் தான்.

சென்னை ஜாபர்கான் பேட்டை - குமரன் நகர்வாசி கருணாகரன். வீட்டு வாசலில் வைத்தே கருணாகரனை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில்  கருணாகரன் இறந்து போயிருக்கிறார்.

பக்கத்து வீட்டு நாயின் உரிமையாளரான 'பூங்கொடி' யையும் அதே நாய் கடித்ததில் அடுத்ததாக பூங்கொடி அட்மிட்.

கிருஷ்ணகிரி - தேன்கனிக் கோட்டையில், வளர்ப்புநாய் குதறிய விவகாரத்தில்; இருவர் மோதல். கத்திரிக் கோலால் குத்தி இருவரில் ஒருவர் படுகொலை. (நாய் பாதுகாப்பாக இருக்கிறதாம்).

சேலம்- கொங்கணாபுரம் பகுதியில், 'ரேபிஸ்'  தொற்று பாதிப்பில் இருந்த நாய் கடித்ததில்; கூலித் தொழிலாளி குப்புசாமி  மரணம்டெல்லியில், தெரு நாய்களை, காப்பகங்களில் அடைக்கும் வழக்கு விசாரணை முடிவில், நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவு தொடரும் என்றும், நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆக்ரோஷமான நாய்களைத் தவிர, மற்ற நாய்களை ஏபிசி எனும் கருத்தடை செய்து, அவைகளுக்கு தடுப்பூசி போட்டு, விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்புதெருநாய் விவகாரம் குறித்து மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

"தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் உத்தரவு மாற்றியமைப்பு

பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு  ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி  மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும்

வெறிநாய், கடிக்க முற்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாக்க வேண்டும், ரேபிஸ் பாதித்த நாய்களை விடுவிக்கக் கூடாது இடையீட்டு மனு தாக்கல் செய்யும்

நாய் மீதான ஆர்வலர்கள் ரூபாய்.25 ஆயிரம், NGO-க்கள் ரூபாய்.2 லட்சம் செலுத்த வேண்டும்

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, 

தெரு நாய்களுக்கு உணவளிக்க  தனி இடம் உருவாக்க வேண்டும்" #dog  

அனைத்து உயர்நீதிமன்றங்களில்  உள்ள வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவு 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...