நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழ்நாடு மாநில பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவியில் உள்ளார்
இவர் திருமணம் செய்து கொள்ளாத முழு நேர ஆர் எஸ் எஸ் தொண்டர் இவர், சென்னையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் நேற்று திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த
இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இல.கணேசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்.
நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அண்ணன் குடும்பம் சென்னையில் உள்ளது. அவர் சென்னை வந்திருந்த நிலையில், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாக கூறப்படடது. அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நல்ல நினைவாற்றல் கொண்ட தலைவர் யாரையும் பெயர் ஞாபகம் வைத்து அழைத்தவர் அவரைப் பழகிய 1987 காலம் நாம் அறிந்து மற்றும் நம்மை அறிந்த தலைவர்.
இல. கணேசன் 16 பிப்ரவரி 1945 ல் தஞ்சாவூரில் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடி அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினராவார்.பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் முழுநேரப் பிரச்சாரகராக இருந்தவர் பின் கட்சியின் தேசியச் செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் .பின்னர் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலக்குமிராகவன் - அலமேலு மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பொதுவாழ்விற்கு வந்தவர் தெலுங்குப் பிராமணர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 ஆம் ஆண்டில் ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டிலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றார்
ஆகஸ்டு 22, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் இருந்த போது 17 வது மணிப்பூர் மாநில ஆளுநராக சண்முகநாதனுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் ஓம் சாந்தி
கருத்துகள்