கர்நாடகாவில் ரூபாய்.15 ஆயிரம் ஊதியம். ரூபாய்.30 கோடியில் சொத்துக் குவித்த முன்னாள் எழுத்தர்
24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 350 கிராம் தங்க நகைகள், 4 வாகனங்கள் சிக்கியது.
கர்நாடகாவில் ரூபாய்.15 ஆயிரம் ஊதியமாகப் பெற்ற முன்னாள் எழுத்தர் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா காவல் துறையினர் நடத்திய சோதனையில் 24 வீடுகள், நான்கு வீட்டு மனைகள், 40 ஏக்கர் நிலம் ஆகியவற்றின் பதிவு ஆவணங்களும், ரூபாய்.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 4 வாகனங்களும் சிக்கியது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் எழுத்தராகப் பணியாற் றிய காளகப்பா நிதகுன்ட்டி வரு மானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக லோக் ஆயுக்தா காவல் துறையினருக்கு புகார் வந்தது. அவர் தற்காலிக ஊழியராக மாதம் ரூபாய்.15 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த நிலையில், முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து ரூபாய்.75 கோடி மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற் கொள்வதாக ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்ததாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்ததையடுத்து லோக் ஆயுக்தா காவல்துறையினர் மூன்று நாட்கள் முன்பு கொப்பலில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது
அவரது சகோதரர் ஜெகன் குன்ட்டியின் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த புலனாய்வு சோதனையில் 30 லோக் ஆயுக்தா காவல்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது காளகப்பா வீட் டில் கணக்கில் வராத 24 வீடு களின் ஆவணங்கள், 4 காலி வீட்டு மனைகளின் ஆவணங்கள், 40.8 ஏக்கர் விவசாய நிலத்தின் பதிவு ஆவணம் ஆகியவை சிக்கியது. இந்த சொத்துகள் காளகப் பா, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து ரகசிய பீரோவில் சோதனை நடத்தியதில் ரூபாய்.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகளும், 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட் களும் சிக்கின. மேலும் 16 விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள், 2 கார்கள், 2 இரு சக்கர வாகனங் களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து 96 முழுமையடை யாத திட்டங்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூபாய்.72 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக ஆதாரங்கள் சிக் கின. தினக்கூலி அடிப்படையில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றிய முன்னாள் எழுத்
தரின் வீட்டில் சிக்கிய பொரு களைக் கண்டு, லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலர்கள் வியப்படைந்தனர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா தரப்பில் கூறுகையில் "காளகப்பா நிதகுன்ட்டி மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ரூபாய்.30 கோடி மதிபிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சொத்துகளி ஆவணங்கள் உள்ளிட்டலை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவருக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தது? அவருடன் தொடர்புடைய அரசு அலுவர்கள், அரசியல் தலைவர்கள் யார் என்பது குறித்து விசாரித்துவரு கிறோம்' எனத் தெரிவித்தனர். ஆனால் இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள லோக் ஆயுக்தா தீவிரமாக ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் போது தமிழ்நாடு லோக் ஆயுக்தா அது போல நடவடிக்கைகள் ஊழல் வாதிகள் மீது பாய்ந்தது போல் தெரியவில்லை என்பதே மக்கள் மத்தியில் பேச்சு. இதை மத்திய லோக்பால் தீவிரமாக கண்காணித்து தேசம் முழுவதும் ஒரே லோக்பால் போல லோக் ஆயுக்தா சட்டமும் ஓரே மாதிரி வரவேண்டும் .




கருத்துகள்