விசிக பிரமுகர் வன்னியரசின் தவறான பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியின்,
தமிழ்நாடு தலைமை செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் ".பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தவர் தான் ராமர், ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்" என்று நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும், பிராமண சமுதாயத்தையும் இழிவு படுத்தி பேசி வருவதை தன் தொழிலாக கொண்டிருக்கும் இந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். எந்த ஒரு சமூகத்தையும், மதத்தையும் அவதூறாக பேச யாருக்கும் உரிமையில்லை.
ஒரு ஜாதியை அவமானப்படுத்தும் விதத்தில் தரக்குறைவாகவும், ஒரு மதத்தினரின் நம்பிக்கைகளை கீழ்த்தரமாகவும் பேசும் தரம்கெட்ட இந்த நபரை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும். மேலும், பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் தரம் கெட்டு பேசும் இந்த நபரின் கருத்துக்களை பத்திரிகைகள் இனி வெளியிடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். மேலும் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிராமணர்களை,
பிராமண ஜாதியை, ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வரும் இவரை தொலைக்காட்சி நிறுவனங்கள் புறக்கணித்து சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து ஜாதி வெறியோடு, மதவாத சிந்தனையோடு செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில், அந்த கட்சியை தடை செய்ய வேண்டும்.
எனக் கூறியுள்ளார். அதோடு பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறித்தும் பேசியுள்ளது விவாதத்திற்கு உள்ளாகின்றன விசிக சார்ந்த வன்னியரசு மீது கொலைக் குற்றம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடைபெற்று நீதிமன்றத்தில் நிறுபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பிரமாமானப் பத்திரம் உள்ள ஒரு கொலை குற்றவாளி எங்களின் சமூக சமூக நீதிக் காவலரை எதிர்த்துப் பேச எப்படி தைரியம் வந்தது மீண்டும் இது தொடர்ந்தால் நிச்சயம் அதற்கான எதிர்வினை இருக்கும் என வேலூர் மேற்கு மாவட்டம் பாமக சார்பாக வன்மையாக கண்டனங்கள் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





.jpg)



கருத்துகள்