முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பராய்த்துறை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேக விழா

அகண்ட காவிரிக் கரையில் அமைந்த  திருப்பராய்த்துறை ஆலயத்தில் சித்தம் சிவமயமாய் வெள்ளிக் கிழமை காலை     ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன      மஹா கும்பாபிஷேக விழாக் காணீர் 


திருச்சிராப்பள்ளி மாவட்டம்,‌ ஸ்ரீ ரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை ஈசனாக 
அருள்தரும் பராய்துரைநாதர்  ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பிகை  அருள் பாலிக்கும் 

ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்  ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஹிந்து சமய மறுமலர்ச்சிக் காலம் சைவம் வளர்ந்த நால்வரில் 


திருஞானசம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான், மாணிக்கவாசகப் பெருமானும் , அருணகிரிநாதரும், பட்டினத்தாராலும் பாடப் பெற்ற  பராயத்துறை சிவலோகன் என்ற மூர்த்திப் பெருமையும் தாருகாவனம் என்ற ஸ்தலப்பெருமையும் அகண்ட காவிரி என்ற முதல் துலாஸ்நான தீர்த்தப் பெருமையும் கொண்ட






திருப்பராய்த்துறை சிவாலயத்தை முற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் திருப்பணிகள் நடத்தி அது முகலாயப் பேரரசர் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி அலி மலிக்காபூர் நடத்திய கொடூரமான தென்னிந்திய முகலாயப் படையெடுப்பு காரணமாக அழிவுகளைச் சந்தித்து மற்றும் பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின்  ஆட்சிக் காலத்தில் மேலும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் 











விஜயநகரப் பேரரசின்  மன்னர் விஸ்வநாத நாயக்கர் மூலம் காநாடு காத்தான் நகரத்தார் கௌல் கிரையம் கொடை பெற்ற நில புலங்கள் உரிமை அடங்கிய 
ஸ்ரீ தாருகாவனேஸ்வர சுவாமி தேவஸ்தானம்





திருச்சிராப்பள்ளி ஜில்லா திருப்பராய்த்துரை அகண்ட காவேரி தென்கரையிலுள்ளதும் நால்வராலும் அருணகிரிநாதர் சுவாமிகளாலும் பாடப் பெற்றதுமான



ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பாள் சமேத ஸ்ரீபராய்த்துரை  நாதர் ஆலயமானது இராமநாதபுரம் ஜில்லா கானாடுகாத்தான் திருவாளர் வெ.வீர,நாகப்ப செட்டியாரவர்களால் சுவஸ்தி ஸ்ரீ சோபகிருது வருஷம் தை மீ 21 ௨ 3.2-1904. ஆம் வருஷத்தில் பாலாலயஸ்தாபனம் செய்து தூதளமாகத்திருப்பணி செய்ய ஆரம்பித்து சாதாரண வருஷம் ஆனி மாதம்  ஞாயிற்றுக்கிழமை மகாகும்ப அபிஷேகம் நடத்தப்பெற்றும் அவர்களுக்குப்பிறகு அவர்கள் குமாரர்களால் ராஜ கோபுரம் நந்தி மண்டபம் விக்கிளேஸ்வரர் தெண்டாயுதபாணி ஆலயம் முதலான பரிவார ஆலயங்களும் கல்யான மண்டபம் திருக்குளம் திருமதில் வெளி மண்டபம் முதலான திருப்பணி வேளைகள் முதளமாக நடத்தி வந்து சுவஸ்தி ஸ்ரீ சால்வாகன சகாப்தம் 1862.விக்கிரம வைகாசி மாதம் 13 ஆம் தேதி 26.5 1940, நாளில்  ஞாயிற்றுக்கிழமை சிம்ம லக்கினத்தில் அஷ்டபந்தன மஹாகும்ப அபிஷேகம் நடத்தப்பெற்றது





ஆலயம் தர்மகாரியங்கள் வெ.வீர.நாகப்ப செட்டியார் அவர்கள் 23-6-1901 முதல் டிரஸ்டியாக  இருந்து பார்த்து வந்து பிறகு அவர்கள் குமாரர் வெ.வீர.நா.அருணாசலம் செட்டியார் அவர்கள் டிரஸ்டியாக இருந்து பார்க்கப்பெற்று அவரது வாரிசுகள் பிரிக்கப்படாத  இராமநாதபுரம் ஜில்லா முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வெ.வீர.நா.அரு.நாகப்ப செட்டியார் மற்றும்  வெ.வீர.நா.வீர.நாகப்ப செட்டியார் வழி வாரிசுகளின் தேவஸ்தானம் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை ஒரு திட்டம் (ஸ்கீம்)  வகுத்து அதனை நடத்தும் நிலையில் ஆலயம் இருந்து வருகிறது.








திருப்பராய்த்துரை  ஆலயத்தில் வெ.வீர.நா.அருணாசலம் செட்டியார் கல்வெட்டு 26-5-1940 ல் அமைந்துள்ளது அவ்வாறு திருப்பணிகளும் செய்துள்ளார்கள் எனக் கல்வெட்டுச் செய்திகள் அறிவிக்கின்றன. பின்பு கானாடுகாத்தான் சிவத்திரு. வி.வி.ஆர்.என். குடும்பத்தினர்கள் 1904 மற்றும் 1940 ஆகிய ஆண்டுகளில் இந்த பராய்த்துறை நாத சுவாமி ஆலயத்தை  புணரமைப்பு புதுமை செய்து கும்பாபிஷேகக் குடமுழுக்காட்டி உற்சவாதிகளை சிறப்புற நடத்தி பல ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் மற்றும் பல கோடி நகைகள் மற்றும் 31 பஞ்சலோகச் சிலைகள் மற்றும் 228 கிலோ வெள்ளி கொண்டு செய்யப்பட்ட இரண்டு ரிஷபம் மற்றும் மரத்தால் ஆன இதர பத்து மயில் உள்ளிட்ட வாகனங்கள் பல்லக்கு மற்றும் தேரும் தேரடிக்கருப்பர் ஆலயமும் அமைத்து நிர்வகித்து நான்கு தலைமுறையாக எட்டு உம்பலப் பட்டயதார்களை நியமித்து அறநிலையத் துறை நிர்வாகம் ஸ்கீம் அமைத்து செல்லும் முன் பேஸ்கார்  பஞ்சநாதன் பிள்ளை நிர்வாகம் நடத்தி  பரம்பரை அறங்காவலராக இருந்து வந்துள்ளார்கள். தற்போது அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இருந்துவரும் இந்த ஆலயத்தை ரிஷிகேஷிலிருந்து வந்த 



சுவாமி சிவானந்த ஆஸ்ரமத்தின் சீடரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆளுநர் காலஞ்சென்ற சி.சுப்பிரமணியம் சகோதரர் மகனுமான சுவாமி சித்பவாநந்தர் முதலில் வி.வி.ஆர். விடுதி முன் அரையில் தங்கி ஆன்மீக ச் சொற்பொழிவு மற்றும் கல்விச் சாலை அமைந்து நடத்திய நிலையில் 
1944 ல் ஒரு மடம் செட்டியார் உதவ அமைத்து 1961 ஆம் ஆண்டில்  திரு வெ.வீர.நா அருணாசலம் செட்டியார் அவர்கள் மூலம் நிலங்கள் மற்றும் பண உதவிகள் பெற்று பதிவு செய்து கல்விச் சேவை துவங்கி நந்தவனம் பராமரிப்புப் பணிக்கு குத்தகை நிலம் பரிவர்த்தனை செய்து நடத்திய நிலையில் அவர் சித்தியாகி சுவாமி ஆத்மாநத்த மஹராஜ் போல பல சிஷ்யர்கள்  மூலம் தற்காலம் இன்று வரை சீரோடும் சிறப்புடனும் நடந்துவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோபணம் நிறுவனங்கள் 1998-ஆம் ஆண்டு ஸ்ரீமத் சுவாமி ஜி சித்பவானந்தர்  நூற்றாண்டு விழாக்குழுவின் மூலமாக திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ஏற்பாடுகள் திருப்பணி செய்து குடமுழுக்குச் செய்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சுவாமி விவேகானந்தரின் 150-வது  பிறந்த ஆண்டு விழா நிகழ்வுகளின் ஒரு முக்கிய அம்சமாக இவ்வாலயத்தை குடமுழுக்கு செய்ய ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்  செய்து திருப்பணிகளை  சிறப்புடன் நிறைவேற்றியுள்ளது.

திருப்பராய்த்துறை நாதர் திருவருள் துணை கொண்டு மங்களகரமான ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 13-ம் நாள் 29.08.2025 வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில், ஸ்ருஷ்டி, ஸ்த்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்ரஹம், ஐந்தொழில் புரியும் சச்சிதானந்த சொரூபமாய் விளங்கும் லிங்க வடிவமாக எழுந்தருளி ஸ்ரீ பசும்பொன் மயிலம்பிகை உடனுறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி விநாயகர் முதலான பரிவார தெய்வங்களோடு பக்தர்களுக்கு வேண்டிய வரமளித்து கத்துவரும் சிவலாயத்தின் மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கிராமப் பூர்வீகப் பொதுமக்கள், பட்டயதாரர்களின் மூன்றாவது தலைமுறை வாரிசுகள் மற்றும் ஹிந்து மதத் துறவிகள் பக்தகோடிகள், தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் அகிலா  ஒத்துழைப்போடு சிறப்புற நடைபெறுவதால்  மேற்கண்ட நிகழ்வில் மாநில அமைச்சர் கே.என்.நேரு , மற்றும் ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் திருப்பணியாளர் வெ.வீர.நா.குடும்ப வாரிசுதாரர்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோபணம் சுவாமி நியமாநந்த மஹராஜ் உள்ளிட்ட மெய்யப்பர்கள்,  பக்த கோடிகள் திரளாக கலந்து கொள்ள உள்ள நிலையில் தரிசித்து அருள்மிகு தாருகாவணேஸ்வரராக உள்ள பராய்த்துறை நாதர் மற்றும் பசும் பொன் மயிலாம்பிகை திருவருள் பெற்று நீங்காத செல்வம் பெற்று நிறைவக வாழ அழைக்கும் தற்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த தக்கார் உ.மேனகா   மற்றும் பொ.அகிலா செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அழைத்துள்ளார். 

இந்த நிலையில் யாகசாலை வேள்விகள் ஆவணி மாதம் 8-ஆம் தேதி 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள்

விநாயகர் வழிபாடு, புன்யாஹாவாசனம், பஞ்சகவ்ய பூஜை, தேவ அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், கோ பூஜை, மஹா கணபதி ஹோமம் பூர்ணாஹூதி, தீபாராதனை

ஆவணி மாதம் 9-ஆம் தேதி 25.08.2025 திங்கட்கிழமைப்ரவேசபலி, வாஸ்து சாந்தி

அஸ்த்ர ஹோமம், நவக்ரஹ ஹோமம்

பூர்ணாஹூதி, தீபாராதனை

ஆவணி மாதம் 10-ம் தேதி 26.08.2025 செவ்வாய்கிழமை

ம்ருத்சங்கிரஹனம்.     நித்ய பூஜாரதனை

ஸ்நபநன பூஜை, வேதபாராயணம்

ப்ரசன்னாபிஷேகம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், பரிவாரங்கள் கலாகர்ஷணம், 10 மணியளவில் பரிவாரங்கள் அஷ்டபந்தனம் சாற்றுதல்

ஆவணி மாதம் 11-ம் தேதி 27.08.2025 புதன்கிழமைம்ருத்சங்கிரஹனம்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுசிவாச்சாரியார்கள், எஜமானர் ரக்ஷாபந்தனம் கும்பாலங்காரம், கலாகர்ஷணம்

ஆவணி மாதம் 12-ம் தேதி 28.08.2025 வியாழக்கிழமையாகசாலை ப்ரவேம். முதற்கால யாக பூஜை ஆரம்பம்

முதற்கால பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்

இரண்டாம் கால யாக பூஜை தொடக்கம்.

மண்டப ஆராதனை, வேதிகார்ச்சனை, வேதாபாராயணம், திருமுறை பாராயணம் த்ரவ்யாஹூதி பூர்ணாஹுதி, தீபாராதனை,

ஆவணி மாதம் 13-ம் தேதி 29.08.2025 வெள்ளிக்கிழமை ப்ராதன மூர்த்தி அஷ்டபந்தனம் சாற்றுதல்

மூன்றாம் கால யாக பூஜை தொடக்கம் பூர்ணாஹூதி, தீபாராதனை

நான்காம் கால யாக பூஜை தொடக்கம் நாடீசந்தான ஸ்பர்சாஹூதி

காலை 7.30 மணிக்கு பரிவார பூர்ணாஹுதி, பரிவார கடங்கள் புறப்பாடு காலை 8.30 மணிக்கு ப்ரதான பூர்ணாஹுதி, தீபாராதனை காலை 9.00 மணிக்கு  கடங்கள் புறப்பாடு காலை 9.40 மணிக்கு அனைத்து கோபுரங்களில் மஹா கும்பாபிஷேகம்

காலை 10.30 மணிக்குள் அனைத்து மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம்

மாலை 5.00 மணி முதல் 6.00 க்குள்  திருக்கல்யாணம் இரவு 7.00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா சுவாமி புறப்பாடு

29.08.2025 வெள்ளிக்கிழமை காலை முதல் மகா அன்னதானமும் 

30.08.2025 முதல் மண்டலாபிஷேக பூஜைகளை தொடர்ந்து நடைபெறும் என  கும்பாபிஷேக விழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம், திருப்பராய்த்துறை.                            "நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை கூறுசேர்வதோர்க் கோலமாய் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே" -என  திருஞானசம்பந்தப் பெருமானும் 

"முதறி உந்திய தீட்சை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத மூவரிலங்குப் புராய்த்துறைப் பதிப்பெருமாளே".-எனத் திருப்புகழும்

"கரப்பர் காலம் அடைந்தவர் தம்வினை சுருக்கு மாறுவல்லிார் கங்கை செஞ்சடைப் பறப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப்பராய்த்துறை மேவிய செல்வரே"- எனவும் பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு, இப்புண்ணிய பூமியில் காவிரி நாடாகிய சோழவள நாட்டின் மேற்பகுதியில் பக்தி செய் அடியரைப் பரம்பரத்துய்க்கும் பரமேஸ்வரனாகிய சிபெருமாள் திருப்பராய்த்துறையை தன்னுடைய வாசஸ்தலமாக தானே கொண்டுள்ளா/ர் என்பதை பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை எத்துமின் -என்ற அப்பர் சுவாமிகள் தேவாரத்தால் அறியலாம்" என திருநாவுக்கரசப் பெருமானும் 

"அன்பராசி மற்று அருந்தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகாம் என்பராய் நினைவார் எனைப் பலர் நிற்க இங்கு எளை எற்றினுக்கு ஆண்டாய் ! வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்பராய்த்துறையாய் சிவலோகா! திருப்பெருந்துறை மேவியசிவனே". -என மாணிக்க வாசகப் பெருமானும். பாடியுள்ளவர்கள் சிலைகளுடன் நந்தி மண்டபத்தில் கொடிமரமருகில் திருப்பணியாளர் வெ.வீர.நாகப்ப செட்டியார் சிலையும் அமையப்பெற்றுள்ள ஆலயம்.

. கங்கையிலும் புனிதம் ஆகிய காவிரி நதி பரந்து பாயும் இப்புண்ணிய பூமி சிறந்த சிவக்ஷேத்திரம். அதனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகனர், அருணகிரிநாதர், பட்டினத்தார் உள்ளிட்ட சமய அடியார்கள் பாடியுள்ளனர். தென்பராய்த்துறையாய் சிவலோகா! திருப்பெருந்துறை மேவிய சிவனே! என்ற மணிவாசகரின் மணிமொழியால் திருப்பராய்த்துறை சிவலோகமாகிறது. செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை என்ற திருஞானசம்பந்தரும் எண்ணற்கரிய பராய்த்துறை என்று பட்டினத்தாரும் இத்தலத்தை போற்றுகின்றனர். பண்டரங்கர் பராய்த்துறை நாவுக்கரசரின் நன்மொழி, இத்தலத்தின் தென்மையை குறிக்கிறது. தாருகாவனம் என்று வேதத்தில் பேசப்படும் இத்தலத்தில் சிவபெருமான் பிட்ச்சாடனராகத் தோன்றி இங்கு தவம் செய்த முனிவர்களுக்கு அருள்புரிந்தான் என்பது தான் புராண இதிகாச காலத்திற்குப் பிந்தைய வரலாறாகும். சிவ சிவபெருவிழா அழைப்பிதழகள் அனுப்பி அழைக்கும் மஹான் சிவானந்தர் அருள் பெற்ற சித்பவாநந்தர் சுவாமிகள் உருவாக்கிய சிஷ்யர்கள் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...