சென்னை தனியார் மருத்துவமனையிலிருந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.என்.நல்லகண்ணு மாற்றம்
செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 22 ஆம் தேதி அவர் வசித்து வந்த வீட்டில் நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் நல்லகண்ணு தலையில் காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மூன்று நாட்கள் முன்பு மாற்றப்பட்டு நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய கே.என். நல்லகண்ணு சென்னை, நந்தனத்திலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஸ்கேன் செய்து தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்: வந்ததாக மருத்துவர்கள் தகவல் கூறிய போதும் அவர் செயற்கை சுவாசம் அளிக்கும் நிலையில் உள்ளதை மருத்துவர்கள் தகவல் உறுதிப்படுத்தியது.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க, நரம்பியல் சிகிச்சை மருத்துவர் நிபுணர், நுரையீரல் சிகிச்சை மருத்துவர், இருதய சிகிச்சை மருத்துவர், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதெனினும் இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. நந்தனம் வெங்கடேஷ்வரா எனும் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கருத்துகள்