முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் களம் வாகை சூடும் சி.பி.ஆர்

ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஸ்வயம்சேவக் திருப்பூர் மாவட்டம் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்,






குடியரசுத் துணைத் தலை​வர் நேற்று பதவிக்​கான வேட்பு மனுவைத்தாக்​கல் செய்தார் அதில் பிரதமர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி தொடங்​கி. 21-ஆம் தேதிக்​குள் மனுக்​களைத் தாக்​கல் செய்ய வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் 20-ஆம் தேதி வேட்​புமனுவை தாக்​கல் செய்​தார். நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 உறுப்பினர்களும், எதிர்க்​கட்​சி சார்ந்த இண்​டியா கூட்டணிக்கு 312 உறுப்பினர்களும் உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலமுள்ளதால், அந்தக் கூட்டணியின் வேட்​பாளர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெற்றி பெறு​வது உறு​தி​யாகி​யுள்​ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஸ்வயம்சேவகர் ஆன அவர் வெற்றி பெற 50 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்​படி, 391 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் வேட்​பாளர், புதிய குடியரசுத் துணைத் தலை​வ​ராகத் தேர்வு செய்​யப்​படு​வார்.தற்​போது நாடாளுமன்ற மக்​களவை​யில் ஒரு உறுப்பினர் மாநிலங்​களவை​யில் 5 உறுப்பினர்களின் இடங்​கள் காலி​யாகவே உள்​ளது. எனவே, நடைபெறும் தேர்​தலில் 782 உறுப்பினர்கள் கள் வாக்களிக்க உள்​ளனர். இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து மன்னர் காலத்திற்குப் பிறகு 

“தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. எந்தத் தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை.

சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று, 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்”










எனக் கூறுவது தான் உண்மை வரலாறு பொய்யான வரலாறு திணிப்பு நடத்தும் நபர்கள் மத்தியில் அதை 

மும்பையில் நடைபெற்ற ஹெட்கேவர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு அரசியல் களத்தில் வரலாற்று உண்மை பேச மனோதிடம் உள்ளவர் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது. இந்த நிலையில் இந்தியக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பி. சுதர்ஷன் ரெட்டி வியாழக்கிழமை இன்று (ஆகஸ்ட் மாதம் 21, 2025 ல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் அந்த நிகழ்வில் தேசியவாத காங்கிரஸ் (SCP) தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சிவசேனா (UBT) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மற்றும் கூட்டணியின் பல தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் "எண்ணிக்கைகள் என்பது முக்கியமாகத் தொடர்கிறது.. நிச்சயமாக, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவனல்ல என்பதால், எல்லோரும் என்னை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். நேற்று நான் அதை மிகத் தெளிவாகச் சொன்னேன். இது சித்தாந்தத்திற்கான போர்," என்று தெரிவித்தார் ரெட்டி அவரது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் மேலும் கூறிமதாவது வேட்புமனு தாக்கல் செய்வது எளிது, நான்  தேர்தல் அலுவலரியிடம் சென்று எனது வேட்புமனுவை சமர்ப்பிக்கப் போகிறேன்," என்றார்.


துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.துணைத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பில் தேர்தல் நடைமுறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைத் தலைவரின் தேர்தல்கள் அரசியலமைப்பின் பிரிவுகள் 64 மற்றும் 68 ன் கீழ் விதிகளால் உருவான நிலையில் நிர்வகிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952 மூலம் துணைத் தலைவர் தேர்தல்களை அறிவிக்கிறது.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 66(1) ன் படி, துணைக் குடியரசுத் தலைவரின் தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் ஒற்றை மாற்று வாக்கு மூலம் நடத்தப்படும், மேலும் அத்தகைய தேர்தலில் வாக்களிப்பு இரகசிய வாக்கெடுப்பு மூலம் இருக்கும்.





நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21 அன்று, உடல்நலக் குறைவு எனும் காரணங்களைக் கூறி, ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவி காலியாகியது    இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் B.சுதர்சன ரெட்டி(வயது 79),உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி! இவர் சில ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய போபால் விஷவாயுக் கசிவுக்குக் காரணமானவர்களான காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் நெருங்கிய கூட்டாளியான யூனியன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கை மறுவிசாரணை செய்ய மறுத்து தள்ளுபடி செய்தவர் சுதர்சன் ரெட்டி. என்பதும். 

தற்போது இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தும் இந்தியா கூட்டணி அளவுக்கு அவருக்கு காங்கிரஸ் நன்றி க்கடன் பட்டிருப்தாகவே தெரிகிறது. இருப்பினும் தற்போது உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக களம் காணும் சி.பி. இராதாகிருஷ்ணன் வெற்றிக்கு இப்போதே கட்டியம் கூறலாம் என்பது தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...