பீஹார் மாநிலத்திலிருந்து பிரிந்து உருவான ஜார்க்கண்ட் மாநில மக்களின் 'திஷோம் குரு' என்று அதாவது வழிகாட்டும் ஆசானாப் பார்க்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனரும்,
பழங்குடியின மக்களின் நிலை பெற்ற தலைவருமான ஷிபு சோரன் , ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதியான இன்று டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனையில் காலமானார். 81 வயதான இவரின் மறைவு, என்பது அரசியல் தலைவரின் மறைவு மட்டுமல்ல, ஒரு வரலாற்று சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும்.
1944 , ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பிறந்த ஷிபு சோரன், "தர்த்தி அபா" பிர்சா முண்டா எழுப்பிய வனப் பழங்குடி மக்களின் புரட்சிக் குரலுக்குப் புதிய பரிமாணத்தைத் தந்தவர்.
பிர்சா முண்டாவின் போராட்டம் பிரிட்டிஷ் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக்கு எதிராக இருந்த போது, ஷிபு சோரனின் எதிர்ப்பு நாட்டின் உள் கட்டமைப்பிற்கு எதிராக இருந்தது. அது, பழங்குடியின சமூகம் மீதான சுரண்டல், மற்றும் பணக்காரர்களின் அடக்குமுறை மற்றும் கந்துவட்டிக் கொடுமைகளால் துன்பப்ட்டிருந்த காலமது. "திஷோம் குரு" ஷிபு சோரன் அவரது போராட்டத்தைத் துவங்கியபோது, ஜார்க்கண்டின் வனங்களை அவர் வீடு போலவே கருதினார். காவல்துறையனரின் துப்பாக்கி குண்டுகள் அவரைத் துரத்த, பல ஆண்டுகள் வனங்களில் மறைந்திருந்து, இரவுகளை அங்கேயே கழித்தார்.1970 ஆம் ஆண்டுகளில், ஷிபு சோரன் ஜார்க்கண்டின் சமூக-அரசியல் களத்தில் முக்கிய இடம் பிடித்தார். 30 வயது ஷிபு சோரன்,
பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் கொதித்தெழுந்து ஒரு புரட்சிக்காரராகி மாறினார். அதற்கு தந்தை சோபரன் சோரன், ஒரு பள்ளி ஆசிரியராகவும், காந்தியவாதியாகவும் இருந்தார். நியாயத்தைப் பேசும் சோபரன், கந்து வட்டிக்காரர்களுக்குக் கண்ணில் உறுத்தலாக இருந்தார். அந்த நேரத்தில் ஜார்க்கண்டில் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில் பழங்குடியின மக்களை கடன் வலையில் சிக்கவைத்து, பல மடங்கு பணத்தை வசூலித்தனர். பல சமயங்களில், வட்டிக்கு ஈடாக அவர்களது நிலங்களையும் அபகரித்துக் கொண்டனர்.
ஷிபு சோரன் பிறந்த ராம்பூரில் உள்ள கந்து வட்டிக்காரர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. சிபு சோரன் அப்போது படித்துக் கொண்டிருந்தார். நவம்பர் மாதம் 27 ஆம் தேதி, 1957 ஆம் ஆண்டில் அனது தந்தை கொலை செய்யப்பட்டதாக ஷிபு சோரனுக்குத் தெரியவே இச் சம்பவம் சிபு சோரனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையானது. ஷிபு சோரன் படிப்பை விட்டுவிட்டார். இந்த அடக்குமுறைக்கு கம்யூனிஸ்ட் வழி பதிலடி கொடுக்கத் துங்கினார். பழங்குடியின இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை உருவாக்கினார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1970 ஆம் ஆண்டில் சிபு சோரன் இந்தப் போராட்டத்தின் கட்டளையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்ட காலத்தில் தான் அவருக்கு 'திஷோம் குரு' என்ற பட்டம் கிடைத்தது. பின்னர், சமூக ஆர்வலர்கள் பினோத் பிஹாரி மஹ்தோ மற்றும் ஏ.கே. ராய் ஆகியோரும் சுரண்டலுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்தில் இணைந்தவர்களுக்கு ஒரு அரசியல் கட்சியின் தேவை ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பிறப்பு இப்படி வந்ததுதான் இன்று காலமான ஷிபு சோரனை வன வாழ்வியல் மக்கள் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது.











கருத்துகள்