முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான எஸ்.ஆர். நாதன் நினைவு நாள்!

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான  எஸ்.ஆர். நாதன்   நினைவு நாள்!


தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட  செல்லப்பன் ராமநாதன்  தேவர் எனும்  எஸ். ஆர். நாதன்  03 ஜூன் 1924 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர்  முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறியது

சிங்கப்பூர் அரசின் சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய இரண்டு முறை அதிபரான சிறப்புக்குரியவராகக் கருதப்படும் எஸ் ஆர் நாதன்  1979 ஆம் ஆண்டு  55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.! 

சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றி 31 ஆகஸ்ட் 2012  ஆம் நாளில் அன்று ஓய்வுபெற்றார் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் 



தனது 92 வது வயதில் 22 ஆகஸ்ட் 22016 ஆம் நாள் காலமானார் அகத்தமிழனின் நினைவு தினத்தில் புகழ் வணக்கம்  முக்குலத்தோரில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், மாவட்டத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மயிலாடுதுறை, மாவட்டத்தில் வாழும் ஏழு உட்பிரிவு அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவர் என்ற பட்டம் 13 நூற்றாண்டுகளாக உள்ளது. அவரது நினைவை போற்றும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு  நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடத்துகிறது.சிங்கப்பூரில் 6  லட்சத்துக்குத் மேற்பட்டத் தமிழர்கள் வசித்தாலும் உயரிய பொறுப்பிலும் உள்ளனர். சிங்கப்பூரின் 6 வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர். நாதன். மிகவும் முக்கியமானவர். சிங்கப்பூரின் 'இரண்டாவது தந்தை ' என அழைக்கப்படும் எஸ்.ஆர். நாதன் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராக  இருந்தவர்.                 


       1924 ஆம் ஆண்டு செல்லப்பன் - அபிராமி தம்பதிக்கு நாதன் இல்லாமல் நான்கு குழந்தைகள். அப்போது சிங்கப்பூர் மலேசியாவுடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்ட ஜீவனம்  நாதனின் தந்தை மலேசியாவுக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தார். அவருக்கு ஒரு மலேசிய ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிலுள்ள ஜோகூருக்கு குடும்பம் புலம் பெயர்கிறது. ரப்பர் தொழில் நசிவை சந்தித்த கால நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத சூழலில் செல்லப்பன் தற்கொலை செய்து கொள்கிறார். நான்கு குழந்தைகளுடன் தொடர்ந்து மலேசியாவில் வசிக்க முடியத நிலையில் தவிக்கிறார் நாதனின் தாயார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்கே திரும்புகிறார்.

கஷ்டப்பட்டு குடும்பம் ஓடுகிறது.வறுமைக்கிடையே வேலை பார்த்துக் கொண்டே பள்ளிப் படிப்பு உயர்கல்வியை முடித்த, எஸ்.ஆர்.

நாதன், தொழிலாளர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார். தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர் 1955 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் பல துறைகளில் பணி புரிந்த எஸ்.ஆர். நாதனின் வாழ்க்கையில் 1974 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது. சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் செயல்பட்ட எண்ணெய்க் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி மற்றும் பாலஸ்தீன விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். நான்கு தீவிரவாதிகளில் இருவர் ஜப்பான் ரெட் ஆர்மியையும் இருவர் பாலஸ்தீனத்தையும் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரிலிருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகம் நிறுத்த வேண்டுமென்பது தான் தீவிரவாதிகளின் நோக்கம். தீவிலிருந்த ஒரு படகையும் அதில் இருந்தவர்களையும் கூடத் தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக பிடித்துக் கொணட நிலையில் படகை மத்தியத் தரைக்கடலை நோக்கி ஓட்டத் தொடங்கினர். சிங்கப்பூர்கடற் பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கினர்.

அப்போது சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவராக எஸ்.ஆர். நாதன் இருந்தார். பணயக்கைதிகளை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு எஸ்.ஆர். நாதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 7 நாட்களாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், "தங்களை பாதுகாப்பாக குவைத் செல்ல அனுமதித்தால் பணயக் கைதிகளை விடுவிப்பதாக தீவிரவாதிகள் உறுதியளித்தனர்." தொடர்ந்து "பணயக் கைதிகளை விடுவித்து விடுங்கள். நீங்கள் குவைத் செல்ல நான் பணயக் கைதியாக உங்களுடன் வருகிறேன்" என எஸ்.ஆர். நாதன் கூறினார். அதனடிப்படையில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

உறுதியளித்தபடி, எஸ்.ஆர் நாதன் உட்பட 13 உயர் அலுவலர்கள் பணயக் கைதியாகி 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் விமானத்தில் குவைத் நோக்கி பயணித்தனர். அடுத்த நாள் தாயகம் திரும்பிய போது, சிங்கப்பூரே திரண்டு அவரை வரவேற்றது'என்னை விட என் தேசம்தான் எனக்கு முக்கியம்" இது எஸ்.ஆர். நாதன் அடிக்கடி கூறும் வார்த்தை. அது போலவே தன் தேசத்து மக்களுக்காக உயிரைப் பணயம் வைக்கத் துணிந்தவர் தான் எஸ்.ஆர். நாதன். ஒரு உயிரிழப்புக் கூட இல்லாமல், இந்த நடவடிக்கையை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார் 

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். அதிபர் ஆவதற்கு முன், 1988-90 ஆம் ஆண்டுகளில் மலேசியத் தூதராகவும் 1990 - 96 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும்  பணியாற்றினார். தொடர்ந்து 1999ம் ஆண்டு செப்டம்பர் 1ம் மேதி சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 2005 ஆம் ஆண்டும் மீண்டும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூர் வரலாற்றில் அதிக காலம் சுமார் 12 ஆண்டுகள் பதவியில் இருந்த ஒரே தலைவர்சிறந்த நிர்வாகியான எஸ்.ஆர். நாதன், சொன்ன சொல் மாறாமல் நிறைவேற்றிக் காட்டுபவர். 'லிட்டில் இந்தியா ' பகுதியிலுள்ள முத்தையா உணவகத்திற்கு ஒரு முறை சாப்பிட வருவதாக எஸ்.ஆர். நாதன் வாக்குறுதி அளித்திருந்தார். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின், அந்த ஹோட்டலுக்கு மதிய உணவுக்கும் சென்று. அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இன்பஅதிர்ச்சி அளித்தார். குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவார். எஸ்.ஆர். நாதனின் மனைவி ஊர்மிளா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் காதல் திருமணம் சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் செய்து கொண்டனர். கடந்த சில தினங்களாகவே 92 வயது எஸ்.ஆர் நாதனுக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. 3 வாரங்களாக மருத்துவமனையில் தான் இருந்தார். சிசிக்சை பலனளிக்கவில்லை. மருத்துவமனையில்  நாதனின் உயிர் பிரிந்தது" என் சிங்கப்பூர் அரசு அறிக்கை வெளியிட்ட போது அந்த சிறிய தேசமே சோகத்தில் மூழ்கியிருந்தது. அதோடு பிறந்த பூர்வீகம் கொண்ட தஞ்சாவூர் மண்னும் மாநுடமும்.நினைவு கூறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...