காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா மடத்துக்குளம் அருகில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரம்.
குடும்பப் பிரச்னைக்கு அவசர காவல் 100 புகார் வந்த நிலையில் விசாரிக்கச் சென்றதாக ஒரு தகவல் வருகிறது அடுத்ததாக இல்லை எப்போதும் போல பாரா ரோந்து சென்ற போது நடந்த நிகழ்வு எனவும் இருவேறு தகவல்கள் உள்ள நிலையில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் அவரது தோட்டத்திலேயே சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் கொலை நிகழ்வு நடைபெற்றது எப்படி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் தோட்டத்தில் வேலை பார்த்த பணியாளர்களால் வெட்டப்பட்டிருப்பதாக முன்கூட்டியே செய்தி வெளிவந்த நிலையில்
கொலையான சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் நேர்மையான காவல் அலுவலராகவே இருந்துள்ளதாகத் தகவல் வருகிறது.
இது வெறும் குடிபோதை இரகளையில் நடந்த கொலை என்று கூறப்படும் நிலையில் தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பது முக்கியம். மடத்துக்குளத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரத்தை வெட்டியதாக கூறப்படும் மணிகண்டன் என்பவர் தற்போது தலைமறைவு
மணிகண்டனைக் கைது செய்வதற்காக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் நடத்தி வருகின்றனர் இங்கு மூர்த்தி என்பவரும் அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் சட்ட மன்ற உறுப்பினர் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கராஜா தனது தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100 க்கு அழைத்து தகவல் தெரிவித்த நிலையில் அதே நேரத்தில் தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை பிரித்து மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கராஜா நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்தார். உடன் இருந்த ஓட்டுனரையும் துரத்தி சென்றுள்ளார். அவர் ஓடி தப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் காவல் துறையினர் தப்பிச் சென்ற தங்கராஜாவைத் தேடி வருகின்றனர். விசாரிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட நிலையில் உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடல் உடற் கூறாய்வு பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்து வந்தவர் சண்முகவேல் (வயது 57) ஆவார். அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வந்தவர். அழகுராஜா.
இவர்கள் இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.) சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலில் முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”எனத் தெரிவித்துள்ளார்.சிறப்பு உதவி ஆய்வாளர் எனும் பணியை உருவாக்கவில்லை எனில் கடைசி காலம் வரை தலைமைக் காவலர் எனும் ஏட்டய்யாவாகத்தான் இருந்து பணி ஓய்வு எனும் ரிட்டயர்டு ஆகிப் போயிருப்பாங்க.
சிறப்பு எஸ்.ஐ. (SSI) பதவியை ஒரு ஆண்ட கட்சி தான் உருவாக்கிக் கொடுத்தது. ஷோல்டர்ல ஏன் ஆந்திரா காவல்துறை மாதிரி சிவப்புக் கலர் விசில் (கயிறு) ரோப் வெச்சீங்க? நாங்க வந்து தான் அதை காக்கி கலரில் மாற்றினோம் தெரியுமா? என் மற்றொரு ஆளும் கட்சி
சரி, சார் மாத்துனீங்க; ஏன் செலக்சன் எஸ்.ஐ. க்கு இருக்குற ஃபவரை SSI -க்கு உங்க ஆட்சியில குடுக்காம விட்டுட்டீங்க?
மேற்கண்ட பாய்ன்ட்டுகளை டிபேட்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை- குடிமங்கலம் காவல் நிலைய SSI சண்முகவேல், இன்று (06.08.2025) கொலை செய்யப் பட்டிருக்கிறார் இது ஒரு தரப்பு கண்டனப் பேச்சுக்கு தகுதி வாய்ந்த செய்தி
சம்பவம் நடந்த இடத்தின் உரிமையாளர் இன்னொரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதால், அது இன்னொரு தரப்பு பேச்சுக்கு தகுதி வாய்ந்த செய்தி
அப்பாவும் மகனும் நடத்திய தகராறை விசாரிக்கப் போன இடத்தில் கொலையான SSI
சண்முகவேல் குடும்பத்தார்க்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல் இது இந்தக் கொடுமை தடுக்க திறன் ஆய்வும் அறிவியல் பூர்வமாக மாற்றம் கலந்து காவலதுறை உட்புகும் நிலை வர வேண்டும் அதுவே தற்காப்பு கலந்து முழுமையான பாதுகாப்பு வழங்கும். சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில்
காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலையான நிலையில் உடன் சென்ற காவல்துறை ஓட்டுநர் தப்பித்து ஓட்டம்.
மடத்துக்குளம் மகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், மரபு சாரா எரிசக்தித் துறை
காற்றாலை மின்சார உற்பத்தி செய்யும்
சர்வதேச நிறுவனத்தின் முகவராகச்
செயல்பட்டு பல நூறு கோடிகளைச் சேர்த்து வைத்துள்ளவர். காற்றாலை அமைப்பதற்கு தனியார் பட்டா நிலங்களைத் தேர்வு செய்வது, அதற்கு தடையாக இருப்பவர்களை தரகு வழியில் சரி செய்வது! காற்றாலை உயர் அழுத்த மின் கம்பிகள் மூலம் தனியார் பட்டா நிலங்களில் பாதை அமைத்து எடுத்துச் செல்வது? அதற்கு தடையாக இருக்கக்கூடியவர்களை பேச்சுவார்த்தை மற்றும் கட்டப்பஞ்சாயத்து மூலம் திறம்பட தீர்த்து வைப்பது? அதிகார வர்க்கம்,
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி முக்கியமான நபர்களையும் தனது உள்ளங்கையில் வைத்திருக்கக்கூடிய அப் பகுதியில் வாழும் முக்கிய நபர்
இவரது தோட்டத்தில் மேற்பார்வை செய்யும் நபரை (ரௌடியை) விசாரிக்க எந்த வித ஆயுதம் இன்றி நிராயுதபாணியாக சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லலாமா?
அப்படி விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பகலில் வழக்கறிஞர் முருகானந்தம் கூலிப்படை வெட்டி படுகொலை செய்த வழக்கில் திருப்பூர் மாவட்டக் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என தமிழ்நாடு பார் கவுன்சில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திருப்பூர் மாவட்டக் காவல்துறை விசாரணை செய்ய வேண்டாம் என்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வாதாடிய போது!
நீதியரசர் வேல்முருகன் மேற்கு மண்டல ஐஜி 90 நாட்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் துணிச்சலாக சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை சர்வ சாதாணமாக படுகொலை செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தற்கொலை, கொலை, கொள்ளைகள் குறித்து தனியாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் இருட்டில் மறைந்து கிடக்கும் ஏராளமான மர்மங்கள் வெளிச்சத்துக்கு வருமென் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.தப்பிய மூன்று பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனௌத் தேடி வருகின்றனர்
கருத்துகள்