மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பது குறித்து ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறில்லை!"- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
"மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பது குறித்து ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறில்லை!"-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்துகுடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களை நீதித்துறை காலக்கெடுவிற்குள் கட்டுப்படுத்த முடியாது என மத்திய அரசும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் போன்ற மாநிலங்களும் வாதிட்டன.மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது: மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. இந்திய அளவில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்ற நிலையில், மத்திய அரசு இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசியலமைப்பை மீறியதாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
இதனிடையே, இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த சில நாட்களாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த வாதம் வருமாறு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
ஜனாதிபதி முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும் என்று வாதிட்டார்.;மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா:- மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் கோர்ட்டு எந்த அளவுக்கு உத்தரவிட முடியும், அது சட்டப்படியானதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரைக்கும் நேரங்களில் கவர்னர் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
அதேபோல, மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி மாநில அரசுகள் அரசியல் சாசன பிரிவு 32ன் கீழ் வழக்கு தொடுக்க முடியாது, ஏனெனில் இந்த பிரிவு ஜனாதிபதி, கவர்னர் ஆகியோருக்கு பொருந்தாது. மேலும், மூன்று மாதத்திற்குள்ளாக மசோதா மீது முடிவு எடுக்கவில்லை என்றால், அதற்கான காரணத்தை கூற வேண்டும் என ஜனாதிபதிக்குக் கோர்ட்டு எப்படி கூற முடியும்? ஜனாதிபதி முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் கோர்ட்டை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும்? அதேபோல கவர்னருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது. அடிப்படை உரிமைகள் மீறும் போது மட்டுமே ரிட் மனுவை தாக்கல் செய்ய முடியும். அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது. ஏற்கனவே கேட்கப்பட்ட 14 கேள்விகளுடன் மேலும் 2 கேள்விகளை சேர்க்க கூறியுள்ளார்” என்று வாதிட்டார்.UGC REGULATION :2009
WA CASE ORDER OF THE PRINCIPAL DIVISION BENCH OF MADRAS HIGHCOURT:2010
DATE OF NOTIFICATION:2013
SUSEELA AND OTHERS VS UGC AND OTHERS CASE SUPREME COURT ORDER:2015.
கீழே படத்தில் உள்ள உத்தரவில் paragraph 12:
12. Furthermore, it is to be noted that subsequent to the decision in P. Suseela (cited supra), the Respondents had issued modified notifications, whereas the present notification was issued prior to the judgment of the Hon’ble Supreme Court. Hence, the reliance placed by the Petitioner on Mandeep Singh (cited supra) is wholly inapplicable to the facts of the present case.
இந்த தீர்ப்பில் நமக்குப் புரிந்தது என்னவென்றால்:
UGC REGULATIONS எந்த தேதியில் இருந்து நடைமுறையில் இருந்தாலும் மாண்புமிகு உச்சநீதிமன்றமானது UGC REGULATIONS தனது தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தினால் மட்டுமே UGC விதிமுறைகளை மீற இயலாது. அதுவரை மீறிக் கொள்ளலாம்.
2010 இல் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் UGC REGULATIONS 2009 எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த போதிலும் 2013 ஆண்டின் notification இல் UGC விதிமுறைகளை மீறியது தவறு ஆகாது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னரே UGC REGULATIONS நடைமுறைக்கு வரும்.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களை நீதித்துறை காலக்கெடுவிற்குள் கட்டுப்படுத்த முடியாது என மத்திய அரசும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் போன்ற மாநிலங்களும் வாதிட்டன.இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இன்று ஆஜரானார். அவர் தனது வாதத்தில், “ பொறுப்புள்ள அரசாங்கங்களில், ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட விருப்புரிமை என்பது குழப்பத்தையே உருவாக்கும்.பிரிவு 163 என்பது அமைச்சரவையின் ஆலோசனையை எதிர்த்து அல்லது இல்லாமல் செயல்பட ஆளுநருக்கு பொது விருப்புரிமை அதிகாரத்தை வழங்கவில்லை. பிரிவு 163, ஆளுநர், அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. என வாதிட்டார். தலைமை நீதிபதி வழக்கில் இடையே கருத்துக் கூறுவது வாதம் செய்யும் மூத்த வழக்கறிஞர்களிடம் வாயைப் பிடுங்கி பேசவைக்கும் முயற்சி தான். உச்சநீதிமன்றத்தில்," ஆளுநருக்கு இந்த அதிகாரம் இல்லை அந்த அதிகாரம் இல்லை"என மூத்த வழக்கறிஞர் நீட்டி முழங்கிப் பேசிய போதும்.?
"ஆளுருக்கு அதிகாரமே இவ்வளவு தான். இதைத் தாண்டி எந்த அதிகாரமும் கிடையாது" என ஒரேடியா பேசிவிட்டுட்டு போக வேண்டியது தானே.. ஏன் பேச முடியவில்லை ஆக அரசை பதவி ஏற்கவைக்கும் அதிகாரம் உண்டு மற்றும் ஆட்சியை களைக்கும் அதிகாரம் உண்டு, இயற்றிய சட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் தான் அரசிதழ் ஆகும் இரண்டும் பெரியது அதை எதிர்த்து வழக்குப் போடமுடியுமா? முடியாது தான் அப்படி இருக்கும் போது அவர் அதிகாரம் படைத்த ஆளுமை தான். இதில் இப்போது நடப்பது
மத்திய - மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு இடையிலான வேறுபாட்டை மட்டுமே ஆராயும் நிலை பத்தி எல்லாம் பேசி ஆளுநரை ஏதோ பெரிய லெவலில் கொண்டு செல்ல அவர் குடியரசுத் தலைவரின் நேரடிப் பிரதிநிதி ஆகவே இதில் நாட்டின் உச்ச பட்ச அதிகார மையமாக குடியரசுத் தலைவர் உண்டு. ஆளுநர் மசோதாவை தாமதம் செய்தார் என்பதே ! ஆம் என்ன காரணமாக தாமதம் செய்தார். ஏற்கனவே இயற்றப்பட்ட மத்திய சட்டத்திற்கும் தற்போது மசோதாவாக வந்த மாநிலத்தின் சட்டத்திற்கும் முரண்பாடு உண்டா ? என்பதே. விவாதம் செய்ய வேண்டிய கருத்து.அது இந்த ஐந்து நாட்கள் நடந்த விவாதத்தில் வரவில்லை இன்னும் சட்ட வல்லுநர்கள் விவாதம் தொடர்ந்து நடைபெறும் பின்னர் தான் தெரியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் அது சரியாக இருந்தால் சட்டத்திருத்தம் வராது இதுவே இந்த அரசியல் சாசன அமர்வு வழக்கில் சாராம்சம்



















கருத்துகள்