முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றவாளி ப்ரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை உடன் பத்து லட்சம் அபராதம்

குற்றவாளி ப்ரஜ்வல் ரேவண்ணா வுக்கு ஆயுள் தண்டனை உடன் பத்து லட்சம் அபராதம் 


முன்னாள் பிரதமர் தேவகௌடா 

முன்னாள் கர்நாடகா முதன் மந்திரி மற்றும் தற்போது மத்திய எஃகுத் துறை அமைச்சர் குமாரசாமி  அவரது சித்தப்பா அவரது சகோதரர் சட்ட மன்ற உறுப்பினர் ரேவண்னா மகன் 

முன்னாள் பிரதமர் பேரன். ரேவனண்னா மகன். 



முப்பது வயதானவர் 47 வயதான வீட்டு வேலைக்காரியை இரண்டு முறை பாலியல் வன்முறை செய்து 

அதை தன்னுடைய ஐ போனில் பதிவு செய்து அதை        "  வெளியிடவா?  " என மிரட்டி வேறு இருக்கிறார்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா .

அந்தப் பெண்மணி காவல்துறையில் புகாரளிக்க, பூதம் கிளம்பியது 

இன்னும் இரண்டு பெண்கள் இதே வகையில் புகாரளிக்க 




இன்னொரு பூதம் எங்கிருந்தோ கிளம்பியது  ரேவண்ணனாவின் பாலியல் விடீயோக்கள் ..வெளியே வந்து  ஒன்றல்ல இரண்டல்ல 3000 க்கும் அதிகமாக என்கிறார்கள் .அதில் ஆண்கள் கூட உண்டாம் அவரது கட்சி மத சார்பற்ற ஜனதா தளம் அல்லவா ..ஐயாவும் ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் இரு பாலாரையும் துவம்சம் செய்திருக்கிறார் இயற்கைக்கு மாறான முறையில். ஒரு முன்னாள் பிரதமர் குடும்ப உறுப்பினர்கள் 


ஆனால் எடுத்த  வீடியோவில் தன்னுடைய முகம் துளியும் தெரியாமல் எடுத்திருக்கிறார் .

துருக்கி முறையில் (Turky methode ) விசாரணைக் குழு புலன் விசாரணை துலக்க  குற்றவாளியின் உடல், சுருக்கங்கள்,காய வடு , அங்க மச்சம்  அனைத்தையும் ஒப்பிட்டு வீடியோவில் அபலைப் பெண்களை நாசாமாக்குவது அவன்தான் என்று தடம அறிவியல் ஆய்வு அறிக்கை நிரூபணமாக்கியது 

அவன் அந்தப் பெண்ணின் ஆடை அந்த அறையின் அலமாரியில் சிக்கிய நிலையில்  டி என் ஏ தேர்வில் இன்னொரு உறுதியைக் கொடுக்க 

கையும் களவுமாக மாட்டிக்கொண்டான் .

நேற்று குற்றவாளி என்றது உறுதி செய்த  நீதிமன்றம்  

இன்று ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்திருக்கிறது

இன்னும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது 

அப்புறம் இவனது காணமால் போன இன்னொரு ஐ போனை கண்டுபிடிக்க ஆப்பிளின் உதவியை நாடி உள்ளது விசாரணைக் குழு  

என்ன... ஒரு கொலை செய்தாலும் ஆறு கொலை செய்தாலும் ஒரே தண்டனை தானே..

உண்மையில் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் தெரியுமா ?

இவன் இப்படி அத்தனை தைரியமாக நூற்றுகணக்கான வர்களை நாசம் செய்வதற்கு காரணம் யார் தெரியுமா ? இவர்கள் அட்டகாசத்தை கண்டு கொள்ளாத 

முன்னாள் பிரதமர் தேவகௌடாவும் தான்  இவரை நம்பி இந்திய மக்கள் அளித்த கௌரவத்தை இவர் குடும்பம் தற்போது அவமானம் என திருப்பிச் செய்துள்ளது.

இளம் நடிகையை பலதாரச் சட்டத்தை மீறி மணந்த இவரது சிறிய தந்தை குமாரசாமியும் தான்.  இதில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பலர் கூறும் கருத்து இது 

ஆதித்திய கரிகாலனைக் கொன்ற  கொலைகாரர்களுக்கு  மாமன்னர் இராஜராஜன் சோழன் விதிப்பாரே தண்டனை கொலை கார்களுக்கு கழு மரம்  ஏற்றுவது  அவன் குடும்பம்  கொண்டார்     கொடுத்தார் அனைவரின் சொத்துக்களையும்  பறிமுதல் செய்யப்பட்டு  நாடு கடத்தப்படுவார்கள்  இந்திய  ஜனநாயக நாட்டில் அதெல்லாம் சாத்தியமில்லை .இத்தனை நடந்ததே நல்ல  தீர்ப்பு வந்த அதிசயம் நீதிபதி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுதார்.   பி என் எஸ் சட்டம் வரும் முன் பதிவு செய்யப்பட்ட வழக்கு இது ஆகவே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் நிலை  

முன்னதாக பிரிவு 354(A), 354(B), 354(C) ஆகியவை 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும். பிரிவு 506-க்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பிரிவு 201-க்கு ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படலாம். என்ற நிலையில் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008-ன் பிரிவு 66(E) 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள்  கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதே நிலை இங்கே பாருங்கள் கல்லூரிப் பையனைக்  கார் ஏற்றிக் கொன்றவனை 50 பேர் வாழ்க கோஷத்தோடு வந்து  காவல் நிலையத்தில் சரணடைய ஒப்படைத்தார்களாம் .

இங்கு கவுன்சிலரே அப்படியென்றால் . பிரபலமான ஒரு முன்னாள் பிரதமர் பேரன் ஆடிய ஆட்டம் தான் என்ன ... தீர்ப்பு வந்த நிலையில்  அவர்கள் அதிர்ந்தது போனார்கள் என செய்தி.  வாழ்க ஜனநாயகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...