முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் விஜய் திராவிட மாயை கொண்ட ஒரே வாக்கு வங்கிக்கு வைக்கும் வெடி ஆரிய பதாகை வெளிவரும் அரசியல் சாதுர்யம்.

மதுரை திருப்பரங்குன்றம்   பாரபத்தி பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட


ஓரளவு அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.       நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கி ஒரே வருடத்தில் இரண்டு  மாநாடு எனும் பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. முதல் மாநாடு வடக்கு விக்கிரவாண்டியில். இரண்டாவது மாநாடு தெற்கு பாரபத்தியில்   திமுக, அதிமுக தேமுதிக இவ்வளவு பெரிய இரண்டு மாநாடுகளை நடத்தியதில்லை. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் நடத்தியது.இதனால் இந்த மாநாடு தொடர்பாக அரசும்  உளவுத்துறையும் கூட சில விசாரணைகளை நடத்துகிறதாம்.

ஒரே வருடத்தில் எப்படி இரண்டு பெரிய மாநாட்டு பொதுக் கூட்டங்களை நடத்த முடியும். 1000 கோடி ரூபாய் வரை செலவாகுமே.. இதற்காக பணம் செலவு செய்வது யார் என விசாரணைகளை நடத்தப்படுகிறதாம்.


அதிமுக தரப்பிலிருந்தும் இது தொடர்பாக தீவிரமான தகவல் சேகரிக்கப்படுகிறதாம்.ஏற்கனவே மாநாட்டிற்கு அரசு மாவட்ட நிர்வாகம் நிபந்தனைகள் கொண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்றார்கள் எனபதால், மாநாடு சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்பே பலப்படுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் மட்டுமே பங்கேற்பாளர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.மாநாடு நடைபெற்ற  நாளில் கூடுதல் காவல்துறை படைகள் நிறுத்தப்பட்டது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் இரவு பகலாகக் கண்காணிப்பு  என காவல்துறை ஏற்கனவே அறிவித்தது. வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், கூட்டத்தைக் கண்காணிக்கவும் முக்கிய சாலைகள் முழுவதும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.500 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடந்த மாநாடடில் ன. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. 500 மீட்டர் நீளமுள்ள மேடை அமைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கென தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன


இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தின் மிகப்பாரிய அரசியல் மக்கள் திரட்டலாகக் கருதப்படும் இந்த மாநாட்டில், குறைந்தது ஐந்து லட்சம் பேர் பங்கேற்பார்கள் என கட்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்த நிலையில் மூன்று லட்சம் பேர் வரை கலந்து கொண்டுள்ளார் எவ்வித அசம்பாவிதங்களையும் தடுக்கும் நோக்கில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள 10 அரசு  மதுபானக் கடைகள் மற்றும் நான்கு தனியார் நடத்தும் குடிப்பகங்களை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.தமிழ்நாடு அரசியலில் திராவிடம் பேர் கொண்ட நான்கு அரசியல் கட்சிகளுக்கு ஒரு நம்பகமான மாற்றாகத் தங்களை முன்னிறுத்த தமிழக வெற்றிக் கழகம் தனது லட்சியத்தைப் இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் பிரதிபலிக்கின்றன என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நடிகர் விஜய்க்கு, வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தல் சவாலுக்கு முன்னதாக தனது அமைப்பின் பலத்தை வெளிப்படுத்தவும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்தது. மதுரையில் பிறந்த காலஞ்சென்ற நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை புகழ்ந்து பேசி நடிகர் விஜய் 

 பேச்சு தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


மாநாட்டில் ‘உங்கள் விஜய்... நான் வரேன்...’ என்ற பாடலுடன் அக்கட்சியின் தலைவர் விஜய்  மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்றனர். பிறகு கட்சிக் கொடி 40 அடிக் கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.  தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு  தொடங்கியது. மேடையில் பேசிய விஜய் தொண்டர்களின் ஆராவாரத்துக்கிடையே உணர்ச்சிப் பொங்க பேசினார். 

இந்த மாநாட்டில் பேசியது “நான் இந்த மண்ணுல காலெடுத்து வச்சவுடனே ஒரே ஒருத்தர பத்தி தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அவர் யாருன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, நமக்கு ரொம்ப புடிச்சது எம்.ஜி.ஆர். தான். அவரோட பழகுறதுக்கு எனக்கு வாய்புக் கிடைக்கல. ஆனா அவரை மாதிரியே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், விஜயகாந்தோட பழகுறதுக்கு நிறையவே வாய்ப்புக் கிடைச்சுது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என நினைவு கூர்ந்தார்.

விஜயகாந்தை புகழ்ந்து பேசியதற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தம்பி என்கிற எண்ணத்தில் தான் பேசியிருக்கிறார். அவர் எப்போது விஜயகாந்தை அண்ணன் என்று சொன்னாரோ அவர் தம்பி தான். அவர் எங்க வீட்டு பையன் தான் என நான் எப்போதுமே சொல்லிட்டு தான் இருக்கிறேன். அவர் அண்ணன் என்றார், எங்களுக்கு அவர் தம்பி. பல்வேறு படங்களில் விஜயகாந்தின் சின்ன வயது கதாபாத்திரத்தை விஜய் தான் செய்திருப்பார். எங்க வீட்டு பக்கத்தில் தான் அவருடைய வீடு. எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகாந்துக்குமான உறவு 17 திரைப்படங்களில் இருந்திருக்கிறது. இன்னைக்கு நேற்று இந்த உறவு இல்லை. பல வருடமாக விஜயகாந்த் சினிமா துறையில் காலடி வைத்ததில் இருந்து அந்த நட்பு அப்படியே தொடர்கிறது. விஜய்யின் படத்திற்கு கூட விஜயகாந்தின் ஏஐ பயன்படுத்தினார்கள், தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்னோம்” என்கிறார். இதே நிலை அரசியல் நகர்வுகள் தொடர்கிறதுநீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரித்திக் ரோஷன் (வயது18) தவெக மாநாட்டுத் திடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் 


சோகம் மாநாட்டுத் திடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு; பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேடை விமர்சனங்கள் மோசம்.

மிஸ்டர் ப்ரைம் மினிஸ்ட்டர் என நம் நாட்டின் பிரதமரை சொல்லும்போது அந்த சொல்லுக்கு 

ஒரு அழுத்தம். என் நாட்டின் தலைமை அமைச்சரை இப்படி அழைப்பது ஏற்க முடியாதது.

நாட்டின் மாநில முதல்வரை ஸ்டாலின் அங்கிள் என்று அழைப்பதும் ஏற்க முடியாதது.

நாட்டின் பிரதான அமைச்சர்  நரேந்திரமோடி அவர்களையும், தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர்  மு.க.ஸ்டாலின் இருவரையும் ; யார் -எங்கே - எப்போது அழைத்தாலும் "மாண்புமிகு" என்ற சொல்லை முன்னே சேர்க்காமல் சொல்வது; இந்திய அரசியல் சாசன சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.தாத்தா மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி மாமா ஜவகர்வால் நேரு தந்தை ஈ.வே.ராமசாமி பெரியார் அன்னை இந்திரா காந்தி, அம்மா ஜெ.ஜெயலலிதா, அப்பா, அங்கிள் இதெல்லாமே ஒரு அரசியல் நாடகம் தான்!

நேற்று மாநாடு பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் பல முறை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்றார்.

முதல் முறை நடந்த மாநாட்டில் ஸ்டாலின் சார் என்றவர், இந்த முறை அங்கிள் என்ற வார்த்தையை பலமுறை உச்சரித்தார்.

ஒரு அரசியல் தலைவரை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என்றோ, மிஸ்டர் ஸ்டாலின் என்றோ, ஏன் ஸ்டாலின் சார் என்றோ அழைப்பதற்கு மாறாக இப்படி அங்கிள் என்று உறவு முறை வைத்துப் பேசுவது முறையல்ல.

தவெக தலைவர் விஜய்க்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியாகத் தான் முரண்களே ஒழிய, இது மச்சான், மாமன் இடையில் உள்ள பிரச்சினையல்ல. 

எத்தனை இடங்களீல் சொல்லி இருக்கிறார், எனப் பாருங்கள்;

 ஸ்டாலின் அங்கிள்… வாட் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்…

தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவர் கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடக் கூடாது.

அங்கிள், அங்கிள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்…


உங்கள் ஆட்சியில் நேர்மை நியாயம் இருக்கா சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா , இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா… சொல்லுங்க மை டியர் அங்கிள்…

பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்… மூடி மறைத்துவிடலாம் என்று பார்க்கிறீர்களா? படிக்கிற இடத்தில், வேலைக்கு போகிற இடத்தில் என எங்கும் அவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஒட்டுமொத்த பெண் பிள்ளைகள் எல்லாம் கதறுகிறார்கள். இதில் உங்களை அப்பா என்று வேற சொல்வதாக சொல்கிறீர்கள்..

வாட் இஸ் திஸ் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்…

அய்யோ வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்

கேட்குதா… மை டியர் அங்கிள் கேட்குதா, மக்களின் சத்தம் கேட்குதா…

தனக்கு எதிரியாக அவர் கட்டமைத்துள்ள தலைவரை அவர் அங்கிள் என்று அழைப்பதன் மூலம், உண்மையில் எதிரி என்ற பிம்பம் நீர்த்து போகவே வாய்ப்புண்டு.

அதே சமயம் ஸ்டாலின் தனக்கு அப்பா என்ற பிம்பத்தை கட்டமைக்க பார்த்ததை உடைத்து நொறுக்கவே அவர் இப்படி முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் அப்பா என்று தன்னை கட்டமைக்க முயன்றது  தேவையற்றது.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவை அம்மா என்று அதிமுக தொண்டர்கள் கட்டி எழுப்பிய பிம்பத்தை வைத்து மு.க.ஸ்டாலினும் இப்படி முயற்சி செய்திருக்கலாம்.

பொதுவாக வயது முதிர்ந்த ஒரு பெண்மணியை சமூகத்தில் யாருமே அம்மா என்று இயல்பாக விளிப்பார்கள். ஆனால், வயதான ஆணை பெரியவர் என்றோ, ஐயா என்றோ தான்  அழைப்பார்கள். மாமா என்றோ, அங்கிள் என்றோ அழைப்பதற்கு  கொஞ்சம் பழக்கமும், பாச உணர்வும்  இருக்க வேண்டும்.

ஜெயலலிதாவிற்கு எழுப்பட்ட பிம்பமும் அந்தக் காலத்தோடு கரைந்து மறைந்தது.

அன்னை என்றால், அது தேசம் முழுமையும் என்றென்றும் ஏற்கும் பிம்பம் அன்னை தெரசா மட்டுமே!

கலைஞரே இவ்வாறு தனக்கு தந்தை பிம்பத்தை கட்டமைக்க விரும்பியதில்லை.

தமிழ் சமூகத்தை பொருத்த வரை தந்தை என்றால், அது என்றென்றும் தந்தை பெரியார் ஒருவர் தான் என்பதில்  கலைஞர் தெளிவாக இருந்தார்.

அதே போல இந்திய தேசத்தின் தந்தை என்றால், அது என்றென்றும் காந்தி தான்.

அரசியலை அரசியலாக அணுக வேண்டும். இதில் உறவுமுறை சொல்வதெல்லாம் ஒருவித பாசாங்குத்தனமே.

அந்த பிம்பம் அப்போது உடைபடுகிறது


துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலினும் நடிகர் விஜய் இருவரும் கல்லூரித் தோழர்களாக இருக்கலாம். சினிமாவில் அவர் தயாரித்த படங்களில் நீங்கள் கதாநாயகன் வேடம் போட்டிருக்கலாம். இப்போது அவர் துணை முதலமைச்சர். அவர் தந்தை  முதலமைச்சர். உங்கள் நெருக்கப் பிணைப்பு எப்படியோ பொதுமக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் வீட்டுக்குப் போய் எந்த உறவையாவது சொல்லுங்கள். பொதுவெளியில் அப்படி சொல்லும் உரிமையை உங்களுக்கில்லை. 

கம்யூனிசத்தில் ஒரு குறியீட்டுச் சொல் உண்டு. அதன் பெயர் பேபியிசம். கம்யூனிசம் விதைநெல். பேபியிசம் வெந்த நெல். ஒருபோதும் அது முளைப்பதில்லை. 


என்பது தான் இங்கு பொதுநீதி.   பாஜக கொள்கை எதிர்ப்பு வாக்குகள் உடைக்கும் திமுக மற்றும் தவெக  என்ற நிலையில் பயனப்படும் நடிகர் விஜய்.. திராவிட மாயை கொண்ட ஒரே வாக்கு வங்கிக்கு வைக்கும் வெடி ஆரிய பதாகை வெளிவரும் அரசியல் சாதுர்யம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...