முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்ப்பரேட் கம்பெனியா இந்து சமய அறநிலையத்துறை? உயர்நீதிமன்றம் சாடல்

கார்ப்பரேட் கம்பெனியா இந்து சமய அறநிலையத்துறை? உயர்நீதிமன்றம் சாடல் 


ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கார்ப்பரேட் கம்பெனி போல அறநிலையத்துறை செயல்படுகிறது' என. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விமர்சனம்.

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயக் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கில், நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த இறுதி உத்தரவில்

தமிழ்தாட்டின் ஆலயங்களில் பல புனரமைப்புப் பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.



இதனால் கோவில் நிர்வாகமும், கும்பாபிஷேகத் தேதியைட் முன்கூட்டியே முடிவு செய்து புனரமைப்புப் பணிகளை அவசர கதியில் செய்து வருகின்றன. இது போன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைகிறது. ஆலயம் என்பது வெறும் கட்டடங்கள் மாத்திரமல்ல; குடி யிருக்கும் தெய்வங்களின் அங்கமாகும். அதை உணர்ந்து இந்து சமய அறநிலையத்த்துறை செயல்பட வேண்டும்.

புனரமைப்புப் பணிகள் துவங்கும் முன், சென்னை ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையிடம் ஆலயத்தில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற வேண்டும். புளரமைப்புப் பணிகளின் போது களரக இயந்திரங்களைத் தவிர்த்து. அத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள்,


மற்றும் இரசாயனங்களை  மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணிகள் முடிந்த பின்னர் அந்தத் துறையிடம் தகுதிச்சான்றும் பெற வேண்டும்.

பின்னர் கட்டமைப்புப் பொறியியல் நிபுணர், தொல்லியல் ஆய்வு நிபுணர், பாதுகாப்பு நிபுணர், பாரம்பரிய ஸ்தபதி, இரண்டு ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில நிபுணர்கள் குழுவிடம் பணி முடிந்ததற்கான சான்றிதழ் பெற வேண்டும்.

ஆலயத்தில் அவற்றை பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் பின்னரே நாள் குறித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நன் கொடையாளர்கள் சார்பில் நடத் தும் புனரமைப்புப் பணி களை, மாநில நிபுணர் குழு கண்காணிக்க வேண் டும். வழக்கு இத்துடன் பைசல் செய் யப்படுகிறது என உத்தரவிட்டனர். தென்காசி ஆலயம் ஒரு பார்வை:- மதுரையில் வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் ஒரே தந்தை இரு வேறு தாய்க்கும் மகன்களான சகோதரர்களின் சண்டை காரணமாக அலாவுதீன் கில்ஜி படைத் தளபதி அலியான  மாலிக்காபூர் தென்னிந்திய முகலாயப்  படையெடுப்பு காரணமாக பாண்டிய நாட்டின் தலைநகராக இருந்த மதுரையை சூறையாடி அழித்த போது அங்கிருந்த பாண்டியர் பல கிளையினராகப் பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொற்கை, கருவை எனப்படும் கரிவலம்வந்த நல்லூர், தென்காசி குற்றாலம் முதலான இடங்களில் இருந்து கொண்டு சிற்சில ஊர் பகுதியில் ஆண்டுவந்தனர். இவர்களைப் பொது வகையால் தென்காசிப் பாண்டியர் எனக் குறிப்பிடுவது வழக்கம்.  இவர்களில் மூன்று பாண்டியர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். இவர்களால் பாடப்பட்ட நூல்கள் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. 1445- ஆம் ஆண்டில்  பரக்கிரம பாண்டிய மன்னரால் தென்காசி ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, பொது ஆண்டு 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. ஆலயத்தின் நீளம்: கிழக்கு-மேற்கு -554 அடியும் அகலம்: தெற்கு-வடக்கு-318 அடியும் 

கோபுரத்தின் உயரம்: 180 அடியும் கொண்டது. ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள் அமைந்துள்ளது 

பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோவிலைக் கட்டும் போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.

இந்தக் கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசிக் கொண்டே இருக்கும்.1524- ஆம் ஆண்டில்  திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது. சிறப்பு வாய்ந்த இராஜகோபுரமானது 

பொது ஆண்டு 1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, பொது ஆண்டு 1462-ல்  பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பியான குலசேகர பாண்டியரால் கட்டி முடிக்கப்பட்டது.

கோபுர அமைப்பின் உயரம்: 175  அடிமுதல் 180அடியும் 9 நிலை நீளம்: வடக்கு - தெற்கு -110 அடியும் அகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடியும் கொண்ட இந்த இராஜ  கோபுரத்தின் சிறப்பு " இந்தக் கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்த பின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...