முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறித்த செய்தியில் உண்மை நிலவரம் என்ன அலசல் ரிப்போர்ட்

நர்ஸ் சுசிலா ஆயாவின் கைக்குள் பாமக மருத்துவர் அய்யா!  உண்மையா ? 

இதைத் தான் இப்பிரச்சனை ஆரம்பம் ஆன போது பாமக ஊடகப்பேரவையினர் சொன்னார்கள். அப்போது அவர்களை விமர்சித்தவர்கள் கூட, இன்று உண்மை நிலையை உணர்ந்துவிட்டார்கள்.


கடந்த வருடம் சி.என்.இராமமூர்த்தி பேசும் போது அவர் மீது உச்சகட்ட கோபம், அவரை எதுவும் செய்ய இயலவில்லை என்ற ஆற்றாமை, அக் கட்சி மக்கள் மத்தியில் மனதளவில் அவர்களை வருத்தியது.

மருத்துவர் ராமதாஸைப் பிடிக்காதவர்கள், அவருக்கு வெளி உலகில் வராத ஒரு உறவிருப்பதாகச் சொன்ன போதெல்லாம், அவர்களை மரியாதைக் குறைவாக கடுஞ்சொற்களால் பல பாமகவின் பிரமுகர்கள் பேசியிருக்கிறார்கள். 

அதிலும் குறிப்பாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம் என்ற முதியவரிடம் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களை சிலர் வைத்திருக்கும் நிலையில். கடந்த வருடம் அவர் காலமான போது கூட அவர் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியவர் என்பது தான் முதலில் அவர்கள் நினைவில் வந்து போயிருக்கும். 

இணையத்திலே தீவிரமாக இயங்கி வந்தாலும், தலைமை குடும்பத்தினருடன் பேசும் அளவில் இருந்தாலும் இந்த விவகாரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. 

2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது சி.என.இராமமூர்த்தி பேசும் போது தான் இப்படி ஒருவர் உண்மையாகவே இருக்கிறார் என்பது தெரியவந்தது.  

அதன்பிறகு அந்த நர்ஸ் சுசிலா ஆயா வீட்டில் ஏதோ நிகழ்ச்சி, அங்கே மருத்துவர் ராமதாஸ்  இருக்கும் புகைப்படங்களை ஒரு நபர் தனது ஸ்டேட்டஸ் மூலம் வைத்திருந்தார். அதனைப் பார்த்ததும் பலரும் அதிர்ச்சியான நிலையில், ஆனால் அதே நபரிடம் இதெல்லாம் வெளியில் பகிர வேண்டாம், மருத்துவர் அய்யாவின் பெயர் கெட்டுவிடும் என்று பலரும் நீக்கச் சொன்னார்கள். 



ஆனால் அதே நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள், சி என். இராமமூர்த்தி வாயிலாகவே அரசியல் வெளி உலகிற்கு வருகிறது என கட்சி பிரமுகர்கள் கூறும் நிலையில். 

தற்போது படங்களை மருத்துவர் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் வெளியிடுகிறார்கள் என நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டிய இடமே இது தான். 

அந்த நர்ஸ் சுசிலா ஆயா என்னவாக இருந்ததோ எத்தனை வருடம் இருந்ததோ அதெல்லாம்  அவர்களுக்குத் தேவையில்லாதது. 

ஆனால் வெளி உலகிற்கு வராமலிருந்த அவர் இப்போது வெளியில் வர வேண்டிய தேவை என்ன? அதுவும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைவரான பின்னர் வர வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது!


இது நாள் வரை இரகசியமாக வைக்கப்பட்ட இந்த உறவு.. திடீரென காணொளி மற்றும் படங்களோடு வெளியில் கசிந்தது எப்படி? வர வேண்டிய அவசியமென்ன? 

கட்சியில் இந்த நர்ஸ் சுசிலா ஆயாவின் தலையீடு இருப்பதையும், அவரே நிர்வாகிகள் நியமனம் குறித்து பரிந்துரை செய்வது, தேர்தலில் தொகுதி ஒதுக்குவது போன்றவற்றில் தலையீடு செய்வதையும், அதற்கு பாமகவின் குடிலனாகப் பார்க்கப்படும் மஹாபாரத சகுனியாக  ஜிகே மணி, மற்றும் பாமகவின் ஐந்தாம் படை சேலம் அருள் போன்றவர்கள் ஒத்துழைப்பதும் அறிந்த பிறகே, கட்சி கையை விட்டுப் போகிறது என்பதை அறிந்த, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைவராவதில்  உறுதியாக நின்று தலைவர் ஆனார்.. ஆனால் இந்தக் கும்பல் மருத்துவர் ராமதாஸ் மகள் காந்திமதி பரசுராமன் எனும் ஸ்ரீ காந்தியை தயார் செய்து களமிறங்கிய நிலையில் 


இதன் பிறகே இந்த நர்ஸ் சுசிலா ஆயாவின் ஆட்டம் கட்சியில் அதிகரிக்கிறது. மருத்துவர் அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகளுக்கு மருத்துவர் ச.ராமதாஸ் வழியாகவே முட்டுக்கட்டை இந்த வழியில் வருகிறது. 

தலைவர் ஆனதும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நியமனக் கடிதம் கொடுக்கத் தயாராகிறார்  மருத்துவர் அன்புமணி ராமதாஸ். முழுவீச்சில் வேலை நிறைவு பெறுகிறது, ஆனால் அவசரம் அவசரமாக நிறுவனரின் பெயரில் நியமனங்கள் அரசியல் ரீதியாக வெளியாகிறது. 


தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து விலகி பேராசிரியர் தீரன் தலைவர் பதவி விலகிய பின்னர் நியமிக்கப்பட்டார்  ஜி.கே.மணி அதுவரை அப்போது தலைவராக இருந்த ஜிகே மணி பெயரில் தான் நியமனக் கடிதம் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது அவரது கைபாவை தான் இணைப் பொதுச்செயலாளர் இசக்கிப் படையாச்சி என்பவர்.


அது எல்லாம்  சதி செய்து தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் கடிதங்களை வழங்காமல், நிறுவனர் பெயரில் வழங்க வைத்தார்கள். தனது தந்தை தானே என்று விட்டுக் கொடுத்துப் போனார் மருத்துவர் அன்புமணி. ராமதாஸ் 

அடுத்ததாக ஒவ்வொரு தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு, முதல் தொகுதியாக திருத்தணி தொகுதிக்கு இரண்டு நாள் பயணம் சென்றார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்களிடையே தடபுடலான வரவேற்பு மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு கிடைத்தது இதனை உடனடியாக  மருத்துவர் ராமதாஸிடம் சொல்லி, உங்களை விட உங்கள் மகனுக்கே கட்சியில் மதிப்பு என்றார்கள்.

 அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளரை அழைத்து உயிரோடுத் தான் இருக்கிறேன், பெரிய மாலையாக வாங்கி வந்து போடச்சொல், என்னை உயிரோடு கொல்லப்பார்க்கிறாயா என்று சொல்லவே, அதோடு மருத்துவர் அன்புமணியின் தொகுதிச் சுற்றுப்பயணம் முட்டுக்கட்டையாகிறது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களை நடத்துவதும் கலந்து கொள்வதும் இயல்பான ஒன்று தான். இராணிப்பேட்டை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. அடுத்த நாள் காலை மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்படுகிறது. 

பின்னர் மாவட்டப் பிரச்சனைகளை நதிநீர் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி நடைப்பயண நிகழ்ச்சிகளைச் செய்கிறார். தருமபுரி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நடைப்பயணம் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது. 

இனிமேல் உன் மகன் தான் கட்சி, நீ ஒரு டம்மி என மருத்துவர் ராமதாஸிடம் நர்ஸ் ஆயா கும்பல் கூறுகிறது. நான் தான் எல்லாம் என நிரூபிக்க தமிழைத்தேடி நிகழ்வு புறப்பட்டார் மருத்துவர் ராமதாஸ். 

இது நாள் வரை கட்சியை வைத்து சொகுசாக வாழ்ந்துவிட்டு, பல ஆதரவு கோஷ்டிகள் இருபது ஆண்டுகள் உருவாக்கிய நபர் தான் ஜி.கே.மணி மருத்துவர் அன்புமணி ராமதாஸிடம் கட்சி முழுமையாகச் சென்று விட்டால் தன்னுடைய சொகுசு வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் அதனை விரும்பாத ஜி.கே.மணி மற்றும் நர்ஸ் ஆயா கும்பல், தனக்குக் கிடைக்கும் வரை மருத்துவர் ராமதாஸ் காலத்திலே சுருட்டிவிடத் திட்டமிட்டு தான் அரசியல் வெளி உலகிற்கு வரவே இத்தகைய சதி வேலைகளைச் செய்கிறார்கள். என பாட்டாளி மக்கள் கட்சியின் ஊடகப் பேரவையினர் கவலை தெரிவிக்கின்றனர் 

இந்த சதிச்செயலுக்கு நர்ஸ் சுசிலா ஆயாவிற்கு பணிவிடைகள் செய்து அரசியல் பலனை அனுபவித்த  ஜி.கே .மணி, சேலம்  இரா.அருள், பரந்தாமன் , சிவப்பிராகசம், ஸ்டில்ஸ் சதாசிவம் மற்றும் அவரது சகாக்கள் பலர் தங்களுடைய ஆதரவாளர்களை நர்ஸ் ஆயாவின் ஆதரவாளராக மாற்றி விட்டார்கள். எனவும் 

இவர்கள் எல்லோரும் இப்போது மருத்துவர் ராமதாஸுக்காக பேசுவது போலவே தெரியும், ஆனால் அவர்கள் யாருமே மருத்துவர் ராமதாஸ் தரப்புக்கு பேசவில்லை, உள்ளே ஒரு சதி நடக்கிறது என அவர்கள் கவலை நியாயமானதே இவ்வளவு நாள் நர்ஸ் ஆயாவிற்காக அவர்கள் செய்த பணிவிடைகளுக்கு பலனில்லாமல் போய்விடும், நர்ஸ் ஆயாவைப் பிடித்து தேர்தலில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று நர்ஸ் ஆயாவின் ஆதரவாளராக மாற்றியிருக்கிறார்கள். எனவும் பாமகவின் உண்மையான முகங்கள் இங்கு கொதி நிலையில் உள்ளனர்.

வடக்கு மாவட்டங்களில் அதிகப் பெரும்பான்மை கொண்ட ஒரு சமுதாயத்தின் முகமாக பார்த்த தலைவரை டோக்கன் கிழிக்க வந்த ஒருத்தர் கட்டுப்படுத்தி வைப்பது என்பது அவருக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவரை நம்பி வாக்களிக்கும் ஒவ்வொரு பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டனுக்கும் சாதரணமானதல்ல. வேதனையானது, வலி நிறைந்தது. ஏமாற்றங்கள் நிறைந்தது. நர்ஸ் 

ஆயாவின் அல்லக்கைகளாக மாறி நிற்கும் ஜி.கே. மணி சேலம் இரா.அருள், பரந்தாமன் , சிவபிராகசம், ஸ்டில் சதாசிவம் போன்ற பலரின் ஆதரவாளர்கள் கட்சியின் எதிர்காலம்  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான்,  நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்று பேசினார்கள். ஆனால் அவர்களின் எதிர்காலம் என்று சொன்ன மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீதான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்டு புலங்காங்கிதம் அடைகிறார்கள். 

இவர்கள் எல்லாம் கட்சிக்கோ, வன்னியர் இனத்திற்கோ விசுவாசமானவர்கள் இல்லை, நர்ஸ் ஆயாவின் அல்லக்கைகளுக்கு தனிப்பட்ட ஆதரவாளர்கள் தான். இவர்களைப் போன்றவர்கள் கட்சியில் பயணிப்பதால் கிடைக்கும் ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாக இருக்கும். இவர்களை எல்லாம் ஓரங்கட்டி ஒதுக்கித் தள்ளி விட்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் தற்போது பாமகவின் தொண்டர்களுக்கு வந்துவிட்டது என்பதே  உண்மை நிலை.

இப்போது அந்த சமுதாயம் சார்ந்த மக்களே முடிவு செய்யுங்கள் இத்தகைய நெருக்கடியான நேரத்தில் மருத்துவர் ராமதாஸ் நடத்திய அத்தகைய நிகழ்ச்சி தேவையா?  என்பது தான் பலரும் கேட்கும் அதிகம் பேசும் எழும் வினா 

ரகசியமாக குறிப்பிட்ட நபர்களை மட்டுமே கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் படங்கள் தற்போது வெளியில் விட்டது யார்? நர்ஸ் ஆயா தானே! 

இத்தனை வருடங்களாக வெளியாகாத படங்கள் தற்போது வெளியாவதன் நோக்கம் மற்றும் மர்மம் என்ன? 

மருத்துவர் ராமதாஸ் பின் நர்ஸ் ஆயாவுடன் இணைந்து கட்சியை அவரிடம் இருந்து கைப்பற்றப பார்க்கும் அல்ல நினைக்கும் சில கயவர்கள் யார் என்று இன்று வெளிச்சத்திற்கு வந்ததா?  என்பதே பாமக சமூக ஊடகப் பேரவையினர் ஆதங்கம்.

யாரைக்காட்டினாலும்  பாமகவுக்கு வாக்களித்த வன்னியர்கள் மூன்று பிரிவுகளாக உள்ள படையாச்சிகள், கவுண்டர்கள், நாயக்கர்கள் , பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீதிருந்த நம்பிக்கை மதிப்பு மரியாதைக்காக மட்டும் தான். அதற்காக அந்த இனத்திற்கே சம்மந்தமில்லாத நர்ஸ் ஆயாவிற்கெல்லாம் மருத்துவர் ராமதாஸ் சொன்னார் என ஆதரவளிக்கமாட்டார்கள். 

பாட்டாளி மக்கள் கட்சியின் இத்தனை வருடங்கள் வளர்ச்சி காணாமல் போனதற்கும் நர்ஸ் ஆயா ஜிகே மணி போன்றோரின் கூட்டுச்சதியே காரணம், அவர்கள் விரும்பியவர்களையே நிர்வாகிகளாக்கியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் தற்போது காலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

காலம் சரியானது தற்போது மற்றொன்றையும் காட்டிவிட்டது. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே அந்த சமூகத்தின் தலைமுறை காக்கும் தகுதிப்படைத்த தலைவர் என்பதையும் காட்டிச் சென்று விட்டது. 

இவ்வளவு குடைச்சல்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறார்.  மற்ற அரசியல் கட்சி ஆதரவில் ஜிகே மணி கூட்டுச்சதியில் முடங்கிய வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு உயிர் கொடுக்கும் வகையில் சமூகநீதி அரசியலைப் பேசுகிறார். எனக் கூறும் பாமகவின் மூத்த நிர்வாகிகள் 

அடுத்த தலைமுறை காக்க இளைஞர்களை நல்வழிப்படுத்த போதை இல்லா தமிழ்நாடு அமைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உழைக்கிறார். 

சுத்தமான தமிழ்நாடு, சுகாதாரமான தமிழ்நாடு நோயில்லா தமிழ்நாடு அமைய முழு நேரமும் பிரச்சாரம் செய்கிறார் 

ஆளும் கட்சி ஊழல் மற்றும் தில்லுமுல்லுகளை ஒவ்வொரு நாளும் தோலுறிக்கிறார். 

மக்கள் விரோதத் திட்டங்களை துணிந்து களத்தில் நின்று எதிர்க்கிறார். 

சொந்தக் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் கூச்சல்களைக் கண்டாலும் தன்னுடைய அரசியல் பணியில் சுணக்கமில்லாமல் சுழன்று வருகிறார். இந்த நிலையில் அரசியல் சார்ந்த மற்றும் சாரா 

அனைவரும் போற்றும் ஒரு மாபெரும் வெற்றி மாநாட்டினை மாமல்லபுரத்தில் பல புதுமைகளோடு நடத்தி வெற்றியும் கண்டார். 

பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த போது இப்படியெல்லாம் செயல்பட்டவர், இனி சுதந்திரமாக இன்னும் வீரியமாகவே செயல்படப் போகிறார். என்கிறார்கள் அந்தக் கட்சியின் மூத்த முன்னோடிகள். பாட்டாளி மக்கள் 

கட்சியில் உள்ள அனைவரும் இனி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தான் உழைக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து தெளிவாகி விட்டார்கள். என்பதை உணர்த்துகிறது.

இதில் ஒரு உண்மை பேச வேண்டிய காலகட்டம் இது தனது தனிப்பட்ட குடும்ப வாழ்வு என எந்த வித தனித்த நிலை இல்லாமல், மிக ஆபாசமான வசைகளுக்கு ஆளான தலைவர்களில் அறிஞர் அண்ணாதுரை ஒரு நடிகை குறித்து எழுந்த வினாவை அப்போதே ஒரே வரியில் முடித்து வைத்தார்.அதேபோல  டாக்டர் கலைஞர் மு.கருநணாநிதி. இத்தனைக்கும் அவர் எதையும் மறைத்துச் செய்யவில்லை!

கலைஞருக்கு மூன்று திருமணம் நடந்தது என்பதை எழுதி தீர்த்த எந்த பேனாவும்.. எம்ஜிஆருக்கு ஜானகி எத்தனையாவது மனைவி, நடிகை ஜானகிக்கு நடிகர் எம்ஜிஆர் எத்தனையாவது கணவர் என்று இதுவரை எழுதியதே இல்லை. ஏனெனில் அது தனிப்பட்ட செய்தி எழுதக்கூடாது. ஒரு கட்சித்  தலைவர் 

கலைஞர் தானே. அவர் வெள்ளை நிறத்தில் இல்லை. பெரிய ஜாதி சார்ந்த நிலை இல்லை. திராவிட இயக்க வீரர் மட்டுமே என்ற நிலையில் வேறு. எத்தனைமயோ பேசலாம்! 

இதே ஊரில் உள்ள எல்லா காதலையும் பிரிக்கவே கட்சி நடத்தும் ஒருவர், ஜாதி உணர்வு இளைஞர்கள் ஆழ்மனதில் விதைத்த ஒரு தலைவர், ஐம்பது ஆண்டுகள் இரு மனைவிகளுடன் காதல் உறவில் இருந்ததைக் கொண்டாடி இருக்கிறார்.  ஆனால், இந்த தகவல் தமிழ்நாட்டில் 99 சதவீதம் பேருக்குத் தெரியாமல் இருக்கிறது பாருங்கள் - பல தலைவர்கள் மக்கள் விரும்பும் தலைவர் வாழப்பாடி கூட ராமமூர்த்தி போல வாழ்வியல் வெளி உலகிற்கு தெரியாது ஆனால் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் சுசிலா கதை தந்தை பெரியார் எனக் கொண்டாடிய ஈ.வே‌.ரா. வாழ்வியல் போல இருவரும் ஐயா தான் இதற்குப் பெயர் தான் அரசியல் vs எதிர்ப்பு அரசியல் also known as கால அரசியல்!  வண்டிச் சக்கரத்திற்கு அச்சாணி தான் முக்கியம் அதுபோல தான் ஒரு கட்சியின் தலைமைக்கு ஆளுமை கொண்ட தலைமை தான் முக்கியம் அந்த ஆளுமைத் தலைமை தற்போதைய தமிழ்நாடு அரசியலில் மூவர் உண்டு அதில் நாமறிந்த ஒருவர் பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றொரு நபர் அமமுவின் டிடிவி தினகரன் மற்றும் பாஜகவின் அண்ணாமலை ஆகியோருக்கு மட்டுமே உண்டு. என்பது பல நேரங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. உலகை வலம் வந்து பழத்தை பெற்ற முருகன் நிலையில் மருத்துவர் அன்புமணி இருக்க தந்தையை வலம் வந்து பழம் வாங்கிய ஸ்ரீ காந்தியை நினைத்தால் தான் பரிதாப நிலை தெரிகிறது. வன்னியர் சங்கம் வளப்பதாகக் கூறி பல நூறு கோடி முதலீடு செய்து விஸ்வகர்மா அறக்கட்டளைகளை சுசிலா மூலம் வளர்த்து வரும் சில நபர்களைத் தான் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எதிர்த்து அரசியல் செய்கிறார். இதை வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் பலரும் அறிந்த நிலையில் தொண்டர்கள் நிலை அறிந்தால் பரிதாபமாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...