திமுக செய்தித்தொடர்பாளாரக கடந்த காலத்தில் செயல்பட்டவர் கோவில்பட்டி கழுகுமலை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மதிமுக உருவான காலத்தில் தற்போது பொதுச்செயலாளர் வை.கோ வான வை.கோபால்சாமியுடன் பிரிந்து சென்ற தலைவர்களில் அறிவுப்பூர்வமாக உள்ள தலைவர்
திமுக செய்தித்தொடர்பாளாரக செயல்பட்டவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 2022 அக்டோபர் மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசியலில் சற்று விலகியிருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆந்திரப் பிரதேச துணைக் முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலருடன் தொடர்பில் இருந்தார் பின்னர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று பாஜகவில் இணைந்தார்.திருநெல்வேலியில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பெருங்கூட்டம் அல்லது மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார். அண்ணன் கே எஸ் ஆர் பழகுவதில் பண்பாளர்.தென்காசி மாவட்டம் கழுகுமலை திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தை சேர்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் உள்ள பலரும் அறிந்த தலைவர் காலஞ்சென்ற திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, இவரை ‘ராதா’ என அழைக்கும் அளவுக்கு நெருக்கமானார்.
1993-ஆம் ஆண்டில் மதிமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் இணைந்தார். பின்னர், திமுக செய்தி தொடர்பாளராக இருந்தார். 2022-ஆம் ஆண்டு திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில், திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அப்போது அவர் கூறிய போது, “தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று, 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்குத் தொடுத்து தீர்வு கண்டுள்ளேன். தமிழ்நாட்டில் நெய்யாறு, அடவிநயினார், செண்பகவல்லி, அச்சங்கோயில் - பம்பை - வைப்பாறு, முல்லை பேரியாறு, ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா, காவிரி என 19 நதிநீர் பிரச்சினைகள் உள்ளன. என்றார்திமுகவிலிருந்து விலகியது குறித்த கேள்விக்கு “நன்றி கெட்டவர்களுடன் நான் ஏன் இருக்க வேண்டும்?” - ஆகவே பாஜகவில் இணைந்ததாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்






கருத்துகள்