முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெருநாய்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை

தெருநாய்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை டெல்லி யூனியன்


பிரதேசத்தில் NCR-ல் சுற்றித்திரியும் உரிமையாளர் இல்லாத தெரு நாய்களைப் பிடித்து உரிய காப்பகத்தில் அடைக்க உத்தரவு.

இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென 


டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களை அடைத்து பராமரிக்கிறது வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நாய் கூட தெருக்களில் விடக்கூடாது என்பதை உறுதி செய்ய டெல்லி யூனியன் பிரதேச அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு கடுமையாக அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த திங்கட்கிழமை இந்த உத்தரவை வழங்கியது. இதை மேனகா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ஆட்சேபனைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் நேற்று அது குறித்து தெரிவித்தது முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்த தகவல்படி நாளை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேக்தா, என்.வி. அஞ்சாரியா கொண்ட அமர்வு தெருநாய்கள் வழக்கு தொடர்பான விசாரணைகளை எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளும், நோய்களும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதன் காரணமாக பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளும் முதியவர்களும் இந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய் கடித்த சம்பவத்தில் மருத்துவச் சிகிச்சை பெற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. ரேபிஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் மரணங்கள், சாலை விபத்துகள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பயம் போன்றவை ஏற்படும் இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகின்ற நிலையில், அரசின் அலட்சியப் போக்கு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றாததும், இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.


தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை கட்டுப்பாடற்ற இனப்பெருக்கத்தால் பெருகி, கிராமங்கள் நகரங்கள் என பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுவது, ரேபிஸ் தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் உள்ளன. இதில் வாங்கு பரப்பும் நாயும் உண்டு இந்தப் பிரச்சினை குறித்து சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் வந்த போதிலும், டெல்லி மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் அமைப்பது போன்ற தீர்வுகள் பேசப்பட்டாலும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மற்றும் வள்ளலார் பல்லுயிர் காப்பகத்னு நிதி சார்ந்த அதில் நடக்கும் மோசடி மற்றும் ஊழல்கள் சொல்லி மாளாது இவை தற்போது வரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.


டெல்லியில் ஆறு வயதுச் சிறுமியின் (ஏதோ ஒரு முக்கியப் பிரமுகர் சார்ந்த குழந்தை என்பதால் நிர்பயா வழக்கு போல அதில் அதிக முக்கியத்துவம்) ரேபிஸ் மரணம் அடுத்து உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையை அதிகார பலம் பெற்ற நபர்களின் முயற்சி காரணமாக தாமாக முன்வந்து சூ மோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன், நாய்க்கடி சம்பவங்கள் குறித்து கவலை “ஆபத்தான மற்றும் தொந்தரவளிக்கும்” விவகாரமாகக் கருதி, அணைத்து மாநில அரசுகளுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். 

2023-ஆம் ஆண்டு விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளை மத்திய அரசு அறிவித்தது, கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி பணிகளை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். ஆனால் அதை பல கால்நடை மருத்துவர்கள் தவறாக பயன்படுத்துதல் மற்றும் விலை வைத்து விற்பனை செய்வதால் ABC முறை தோல்வியடைந்தது ஆனால், தமிழ்நாட்டில் இந்த விதிகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நாய்கள் தொல்லை குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டது. 

தமிழ்நாடு அரசு சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதியளித்து அரசாணை வெளியிட்டது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், இதற்கு பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் முறையான ஆவணங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், கருணைக் கொலை என்பது நிரந்தரத் தீர்வாகாது. இது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதில் விலங்குகள் ஆர்வலர்கள் அயல்நாட்டு நாய்கள் வளர்ப்பதை ஊக்குவிப்பு செய்து, அதை இந்தியாவில் பரப்பும் அன்னியர்கள் தான் மேலும் இது மனிதாபிமானமற்றதாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாகவும் இருக்கக் கூடும். 


இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, முதலில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து,  வீட்டில் வளர்க்கும் நபர்களைப் பொருப்பாக்க வேண்டும். உரிமை இல்லாத தெருநாய்கள் மட்டும் அதை வளர்க்கும் நபர்கள் பார்த்து ஒப்படைக்க வேண்டும் கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதை கால்நடை மருத்துவர்கள் இலவசமாக போட அனுமதித்து திருடி விற்பனை செய்யாமல் தடுக்க வேண்டும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.  ஆனால், இது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து உருக்கி நெய் எடுக்கும் முயற்சி தான் இதில் ஊழல் மட்டுமே நடக்கும் இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி ஆகியவை விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும். அதில் பாதி நிதி கமிஷன் போல மாறும் மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்கள் அமைப்பது அவசியம். அதை தனியார் தவிர்த்து அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளாட்சி அமைப்புகள், கால்நடைத் துறை மற்றும் தனியார் மருத்துவர்கள் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


அரசின் அலட்சியப் போக்கு, திட்டமிடலில் உள்ள குறைபாடுகள் மற்றும் செயலாக்கத்தில் தாமதம் ஆகியவை இந்தப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றன. உதாரணமாக, 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய 20 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி செலவு செய்ததாக கணக்குக் காட்ட எழுந்த கேள்விக்கு அரசு தெளிவான விளக்கம் இதுவரை அளிக்கவில்லை. காரணம் முழுமையாக ஊழல் இது நிதி மேலாண்மையில் உள்ள குறைபாடுகளை, ஊழல் போக்கினை வெளிப்படுத்துகிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவதோடு, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் விலங்கு நல தன்னார்வ அமைப்புகளுடன் கூட்டு முயற்சிகள் அவசியம்.

தெரு நாய்கள் தொல்லை என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான சமநிலையைப் பேணுவதற்கு ஒரு சவாலாக உள்ளது. அரசு உடனடியாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், உயிரிழப்புகளும், பொதுமக்களின் பயமும் தொடர்ந்து அதிகரிக்கும். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மற்றும் பொறுப்பான நிர்வாகத்தின் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இது அரசின் உறுதியையும், மக்களின் ஒத்துழைப்பையும் பொறுத்தது. நமது நாட்டில் உள்ள நாய்கள் விவசாயக் கிராமங்களில் ஊர் காவல் பணிக்கு முக்கிய காரணி நாய் தான் 


இதற்கிடையே ரேபிஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வுக் கூடம் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் இருக்கும் இடத்தில் மருத்துவமனை கட்டும் பிடிவாதத்தில் இருக்கிறார் சுகாதரத் துறை அமைச்சர் என்ற பேச்சும் உள்ளது . இந்த நிலையில் கும்பகோணம்: அரசினர் மகளிர் கல்லூரி வாசலில் தெருநாய்கள் கடித்ததில்  ஆறு மாணவிகளுக்கு காயம். 

மதுரை  சோழவந்தான் மேலக்கால் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுச் சிறுவன் உள்ளிட்ட மூன்று நபர்கள்; நாய் கடியால் மருத்துவமனையில் அனுமதி.டில்லியைப் போல தமிழ்நாடு முழுவதிலும் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க நடவடிக்கை 

டில்லியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள உத்தரவு "அருமையான உத்தரவு" என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இதே போல தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார். 

நீதிமன்ற உத்தரவின் படி 



டில்லியின் தெருக்களை தெரு நாய்கள் இல்லாத தெருக்களாக மாற்ற வேண்டும். இங்குள்ள தெரு நாய்களை விரைவில் பிடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களைக் கொண்டு வந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதற்காக டில்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். 

இந்தக் காப்பகங்களில், நாய்களைக் கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் இருக்க வேண்டும். ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த கண்காணிப்புக் கேமரா வசதிகள் அமைக்க வேண்டும்.

அதை எப்படிச் செய்வது என்பது பற்றி உயர் அலுவலர்கள் பரிசீலிக்க வேண்டும். இதற்காக தனிப் படையை உருவாக்க வேண்டுமென்றால், அதையும் வேகமாகச் செய்யலாம். இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளனர்.

இந்த Cover to the order தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் 

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் கிடைத்ததும், தமிழ் நாடு முழுவதும் இது போன்ற நடவடிக்கை செயல்படுத்தப்படும். தெரு நாய் தொல்லை என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. இப்போது தான் எங்களுக்கு (இதை சரி செய்ய) வாய்ப்புக் கிடைத்துள்ளது என அமைச்சர் கே.என்.நேரு  செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறுகிறார். 


நாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி, காப்பகங்களில் அடைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் 

2025 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை 3.67 லட்சம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 25,182 பேர் பாதிக்கப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் நாய் கடியால் 43 பேர் உயிரிழந்தனர் எனத் தெரியவருகிறது. 

அமைச்சர் கூறுவது படி, தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் டில்லியில் நடைபெறவுள்ளது போல நடக்குமென்றால், முதல் கட்டமாக கோயம்புத்தூர் மாநகரில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கவாய்ப்புள்ளது. ஏனென்றால், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வின் படி கோயம்புத்தூர் மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளது எனத் தெரியவந்தது. எனவே கோயம்புத்தூரில் இதற்காக மிகப்பெரும் நடவடிக்கை எடுக்க முறையான நபர்கள் அடங்கிய தனிப் படை, மற்றும் காப்பகங்கள் என எல்லாமே தேவைப்படும். 

இது போன்ற அறிவிப்பை செயல்படுத்துவது முதலில் டில்லியில் சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு இன்று விடை கிடைக்கும் 

அல்லது இன்னும் ஒரு மாதத்தில் விடை கிடைக்கும்.

நாய்கள் கணக்கெடுப்பு என்பது டில்லியில் 2009 ஆம் ஆண்டில்  நடைபெற்றது தான் கடைசியாக நடைபெற்றதாகும், அப்போது சுமார் 5.6 லட்சம் தெரு நாய்கள்  இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 16 ஆண்டுகளாக இதுபோன்ற தெரு நாய்கள் கணக்கெடுப்பு டில்லியில் நடைபெறவில்லை. ஆனால் தற்போது 10 லட்சம் நாய்கள் டில்லியில் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  ஒரு காப்பகத்தில் 500 நாய்களை வைத்தால் கூட 2,000 காப்பகங்கள் தேவைப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர் ஆன முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மருமகளும் முன்னாள் அமைச்சருமான  மேனகா காந்தி இதுபற்றிக் கூறுகையில், டில்லியில் 3 லட்சம் தெரு நாய்கள் உள்ளன என வைத்துக்கொண்டால் கூட, அவற்றை சாலைகளிலிருந்து அப்புறப்படுத்திக், காப்பகத்தில் வைத்து,  உணவு, நீர், காப்பகத்திற்கான கட்டமைப்பு என அனைத்தும் ஏற்படுத்த ரூபாய்.15,000 கோடி வரை ஆகலாம். டில்லியில் அவ்வளவு நிதி உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இவர் கொஞ்சம் கூட மனிதர்கள் வாழ்வியல் பற்றி கவலைப்படாத உயர் தட்டு நபர் 

ஏற்கனவே தெருநாய்களை கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள் இந்தியாவில் உள்ளதை மாநகரங்களில் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் இத்தனை நாட்களாக முறையாக செயல்படுதத வில்லை 

சாலைகளில் நாய் தொல்லைகள் இருப்பதை தெரியப்படுத்த மாநகராட்சிகள் தரப்பில் வசதிகள் இதற்கு முன்பு இல்லை 

மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கருத்தடை மையங்கள் நிறுவப்பட்டு, முறையாக நடத்தப்பட்டு வரவில்லை, இதற்கான பணிகளைச் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 

இதற்கு முன்பு நாய்களை மனிதாபினம் இல்லாத வகையில் பிடித்த சம்பவங்கள் ஏராளம் இருக்க அவற்றை முறையாக, சித்திரவதை செய்யாத வகையில் பிடித்துச் செல்ல தகுந்த நபர்கள் எத்தனை பேர் உள்ளனர். டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் அன்னியர்கள் மேல் இந்திய நாட்டின் மக்கள் மீது கருணை இல்லாமல் வாழும் நபர்கள் மட்டுமே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தெரு நாய்களை தெருக்களில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைப்பது என்பது அறிவியலுக்குப் புறம்பானது மற்றும் நடைமுறை சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதில் ராகுல் காந்தியும் ஒருவர்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, “உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை செயல்படுத்த வேண்டுமானால், டெல்லி அரசு 2000 நாய்கள் காப்பகத்தை உருவாக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு கோபத்தின் வெளிப்பாடாக இருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் எடுக்கப்பட்ட முடிவாக இல்லை.” என்றும் கூறியுள்ளது பார்வை பெருகிறது.தெருநாய்கள்,

வீட்டு வளர்ப்பு நாய்கள்,

இனப்பெருக்க நாட்டு நாய்கள்

வெளிநாட்டு இறக்குமதி நாய்கள்

எல்லாமே கடிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாது ஆனால் வெளிநாட்டு மிருகங்கள் அமைப்பு பீட்டா உள்ளிட்ட பிரதிநிதிகள் நாய்கள் கடிப்பதை மறந்தொழித்து

 பல யுகங்கள் ஓடி விட்டது. 

அபாண்டமாக பழி சொல்லாதீர்.. என்கின்றார்கள் தெருநாய்கள் போற்று.

பைரவர் வழிபாடு என சொல்லி வைத்தாற் போல காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்துக்கு சிலர் வந்து விடுகிறார்கள். கைகளில் தூக்குச்சட்டி வாழை இலை இருக்கிறது. உள்ளே குழம்பு அல்லது சாம்பார், தயிர் ஊற்றி பிசைந்த சோறு இருக்கிறது. அவர்களைப் பார்த்ததும் எங்கிருந்தோ தெருநாய்கள் குதித்தோடி வருகின்றன. சதுரம் சதுரமாக நறுக்கப்பட்ட காகிதம் பரப்பி ஒவ்வொரு நாய்க்கும் தனித் தனியாக உணவு பரிமாறுகிறார்கள்; மொத்த தூக்குச் சட்டிகளிலும் உணவு தீர அங்கிருந்து போய் விடுகிறார்கள். கொஞ்ச நாள்களாகத் தான், இந்த நடவடிக்கை ஏதோ ஜோதிடக்காரர் கூறிய பரிகாரம் போல நடக்கிறது. நான்கைந்து வருடங்களாகத்தான் இப்படிப்பட்ட காட்சிகளைத் தொடர்ந்து நாம் பார்க்கிறோம். தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில்,  இப்படியான காட்சிகளைப் பார்த்தேன். இப்போது பரவலாகப் பல மாவட்டங்களில் பார்க்கிறேன்.

 ஒரே 'சிட்டிங்' - ஒரே 'வாக்கிங்' -

 ஒரே 'ஸ்டேண்டிங்' - கில், முடிவுக்கு வர வேண்டாமே என்றுதான் மாதக்கணக்கில்  பின் தொடர்ந்து;  'நாய் வளர்க்கும் பலரை ' ஸ்டெடி செய்தேன். பாவம் பைத்தியக்காரத்தனம் தெரிகிறது.

பக்கெட்கள் தளும்ப தளும்ப உணவோடு வருபவரோடு சிநேகம் வளர்த்து  வலிந்து நலம் விசாரித்து புன்னகைத்து நம்பிக்கையூட்ட  நம்பர்களை பறிமாறிக் கொண்ட பின்தான் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். எளிதில் பிடி கொடுத்து 'அவர்கள்' பேசாததே சந்தேகப் புள்ளியின் தொடக்கம் தான். நமக்கு பத்திரிகை க்ரைம் பீட் கண்காணிப்புப் புத்தி அப்படிப் போகும் போல. (சுற்றிலும் நல்லவர்கள்? )

"செலவுக்குன்னு கைல ஐநூறு ரூபா சார் குடுப்பாரு. மீன்பாடி ரிக்ஷாகாரருக்கு தினமும் சவாரி தான். அவனுக்கும் இதே போல ஏதாவது குடுப்பாரு போலருக்கு. என்னைப்போலவே என் தங்கச்சிக்கும் இதே மாதிரி ஒருத்தரு வேலைபோட்டுக் குடுத்துருக்காரு. எனக்கு வேளச்சேரி மாதிரி, அவளுக்கு திருவான்மியூர். இன்னொரு நபர் மீஞ்சூர் யாருக்கோ போன் பண்ணாரு. அப்படியா, உடனே அனுப்பி வெய்யின்னு  சாரு சொல்லிருக்காரு. ரெண்டு பேரை நான் சேத்தேன். என் தங்கச்சி மூலமா அஞ்சி பேரு சேந்திருக்காங்க. எக்ஸ்ட்ராவா கொஞ்சம் பொட்டலத்துல சோறு  கைல குடுத்திருவாங்க. நைட்ல யாராவது வித்தியாசமா திட்டுனாலோ பேசுனாலோ ஒன்னு ரெண்டு பொட்டலம் குடுத்ததும் போயிருவாங்க. மொதல்ல போலீஸ்ல ஓசியா  நிறைய பொட்டலம் போவும். நாங்க எந்த பாய்ன்ட்லருந்து வேலை பண்ணாலும் கரெக்ட்டா அங்க போலீஸ் வந்துருவாங்க. இப்ப வர்றதில்ல. தினமும் இப்படி கடிக்கும்.. வாயில்லா !?  நாய் ஜீவன்களுக்கு சோத்தைப்போடறதை விடப் புண்ணியம் வேற ஒன்னும் இல்ல. என் ஜோதிடம் பரிகார நபர்கள் கூற ஆனா அதை புண்ணியம் தேடிக்கிறவங்க கைலதானே போடணும்? எங்க மூலமா இப்படி ஒவ்வொருத்தரும் சோறு போட்டா புண்ணியம் எங்களுக்குத்தானே?" சார் என் நியாயம் கேட்ட ஒரு கூலி வேலை அப்பாவி 

பலர் - பல கட்டங்களில் 

சொன்னது தான் இதெல்லாம்.

ஒவ்வொன்றையும் பார்த்து வெறுமனே கடந்து போகாமல் கிட்டே நெருங்கிக் கிடைக்கும் தரவுகளை பொதுவில் வைத்தால்.அதுவே செய்தி 

புத்தியுள்ளவன்

பிழைத்துப்போவான். இதில் அரசு இனி இவர்கள் பணியை செய்யும் அதில் மக்கள் வரிப்பணம் தான் லஞ்ச லாவண்யமாக மாறும் . வாழ்க நாய்கள் என அவர்கள் வாழ்த்து  வரும் ... இந்த நிலையில் 

கடலூர் மாவட்டம், விருதாசலத்தில் தெருநாய்கள் செல்லமாய் கடித்ததில், குழந்தை உள்பட10 நபர்களுக்கு காயம். காயமடைந்த அனைவரும், விருதாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதி. என்ற செய்தி முடிவில் வரப்போகும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கும் உங்கள் பப்ளிக் ஜஸ்டிஸ்.நாய்களை விலங்குகள் நல ஆர்வலர்கள் வீட்டின் உள்ளே வைத்து வளர்க்க வேண்டும் என கடுமையாக எச்சரித்த உச்ச நீதிமன்றம் காரிலும் விமானத்திலும் மட்டுமே பயணம் செய்கிறவர்களை, தெரு நாய்கள் விரட்டுவதற்கோ- கடிப்பதற்கோ வாய்ப்பே இல்லை. என்றோ ஒருநாள் கட்சிப் போராட்டம், ஆர்ப்பாட்டங்களின் போது, கூட்டத்தோடு கூட்டமாக வீதியில் நடந்து போயிருக்கும் போது, தூரத்தில் பார்த்திருக்கலாம் தெருநாய்களை.

"விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் 

1960" -ஐ உருவாக்கம் செய்ததில் முக்கியப் பங்காற்றியவர், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மூத்த மருமகள் வி.பி.சிங் அரசில் மேனாள் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி என்பது நினைவில் வருகிறது. நாடு முழுவதும் உள்ள தெருநாய்களை எட்டு வாரங்களில் பிடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு காரணமாக தெருநாய்கள் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்த தீர்ப்பு தற்போது மேல்முறையீட்டு மூன்று நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (11/08/20250) இந்த வழக்கின் விசாரணை முதலில் நடைபெற்றது. டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய்க் கடி சம்பவங்கள் குறித்து டெல்லி யூனியன் பிரதேச அரசு உயர் அலுவலர்களுக்கு பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்கள் எந்த பயமும் இல்லாமல் தெருக்களில் நடமாடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

தெருநாய்கள் கடிப்பதன் மூலம் ரேபிஸ் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கு தெருநாய்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியும். டெல்லி நாய் முழுவதும் காப்பகங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.காப்பகங்களில் இருந்து நாய்கள் தப்பாமல் இருக்க உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். நாய்க்கடி குறித்து புகார் அளிக்கும் வகையில் உதவி எண்களை அடுத்து ஒரு வாரத்திற்குள் அரசு நடைமுறைக்கு வர வேண்டும். அவ்வாறு வரும் புகாரின் மீது நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்லியில் இனி ஒரு தெருநாய்களை கூட பார்க்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் நாய் பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய அவசர தேவை உள்ளது. டெல்லி மட்டுமல்ல நாடு முழுவதும் தெருக்களைப் பிடிக்க 8 வாரங்கள் கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தெருநாய்களைக் கொல்லக் கூடாது, கருத்தடை செய்து கட்டுப்படுத்த வேண்டும்னு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உத்தரவு வாங்கியது கார்ப்பரேட் என்ஜிஓ கும்பல். 

நாய்களுக்கு கருத்தடை செய்யும் காண்ட்ராக்ட்களையும் வாங்கி கோடிக்கொடியாக மோசடி செய்து சம்பாதித்தது. ஆனால் நாய்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. தெருநாய்கள் பெருகி அப்பாவி மக்கள் மற்றும் சிறு குழந்தைகள் நாய்கடிகளுக்கு ஆளானார்கள். தெருநாய்களை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நாய்களை எங்கு கொண்டுபோய் விடுவார்கள் என்பது தான் தெரியவில்லை. 

பெற்றோர்களுக்கே சோறு போடாமல், அதாவது பெற்ற தாய்க்கு ஆனால் தெரு நாய்களுக்கு சோறு போடும் தெருநாய்க் காதலர்களின் சொந்த வீடுகளில் இவற்றைக் கொண்டு போய் அடைக்கலாம். என்பது தான் சரியான தீர்வு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...